திருமணத்திற்கு பிறகு சமந்தா நடிக்கும் இரண்டாவது தமிழ் படம் - யாருக்கு ஜோடியாகிறார் தெரியுமா..?


விக்னேஷ் சிவன் இயக்கிய படம் நானும் ரௌடி தான். நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி இருவரும் அதில் ஜோடியாக நடித்திருந்தனர்.தற்போது அதே கூட்டணி மீண்டும் இணையும் படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா மட்டுமின்றி சமந்தாவும் நடிக்கிறார்.

இந்த வருடம் காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி தான் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் விக்னேஷ் சிவன்.நானும் ரௌடி தான் படத்தில் பணியாற்றிய போது தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் காதலர்களாக மாறினர் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் விக்னேஷ் இயக்கத்தில் மீண்டும் நயன்தாரா நடிப்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித் குமார் தயாரிக்கிறார். தற்போது ட்விட்டரில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங் பற்றி தயாரிப்பாளர் பதிவிட்டுள்ளார்.வரும் ஆகஸ்ட் மாதம் இதன் ஷூட்டிங் துவங்கும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதே நிறுவனம் தான் விஜய்யின் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் உரிமையை வாங்கியுள்ளது. மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளராக லலித் குமார் உள்ளார். தாங்கள் தயாரித்து வரும் படங்கள் எந்த கட்டத்தில் இருக்கிறது என்ற தகவல்களை அந்த ட்விட்டில் லலித் குமார் குறிப்பிட்டுள்ளார்.

காத்து வாக்குல ரெண்டு காதல் படம் அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஷூட்டிங் துவங்காமல் இருப்பதற்கு கொரோனா லாக்டவுன் தான் காரணம். ஆகஸ்ட் மாதம் ஷூட்டிங் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பதால் அதற்குள் கொரோனா பிரச்சனை குறைந்து ஷூட்டிங் நடந்த அனுமதி கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இன்று முதல் டிவி சீரியல்கள் ஷூட்டிங் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதில் 20 நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என கட்டுப்பாடும் விதிக்கப்பட்டு உள்ளது.

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கவுள்ள சமந்தா தற்போது கைவசம் இந்த படம் மட்டுமே வைத்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு படங்களை எச்சரிக்கையுடன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அவர். சூப்பர் டிலக்ஸ் படத்திற்க்கு பிறகு நடிக்கும் தமிழ் படம் இது தான் என்பது குறிப்படத்தக்கது.

திருமணத்திற்கு பிறகு சமந்தா நடிக்கும் இரண்டாவது தமிழ் படம் - யாருக்கு ஜோடியாகிறார் தெரியுமா..? திருமணத்திற்கு பிறகு சமந்தா நடிக்கும் இரண்டாவது தமிழ் படம் - யாருக்கு ஜோடியாகிறார் தெரியுமா..? Reviewed by Tamizhakam on July 27, 2020 Rating: 5
Powered by Blogger.