த்ரிஷா குறித்த ரகசியத்தை அம்பலப்படுத்தும் மீரா மிதுனின் வீடியோ..! - கழுவி ஊற்றும் ரசிகர்கள்..!


மாடலிங் துறையில் இருந்து நடிக்க வந்த மீரா மிதுன், 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு பின், சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாகி விட்டது. 'டுவிட்டர்' பக்கத்தில், த்ரிஷா, நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரையும், வம்புக்கு இழுத்து வருகிறார்.

தற்போது, மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் போல், தனக்கும் தமிழ் திரையுலகில், நிறைய பேர் தொல்லை கொடுத்தனர் என, புகார் கூறியுள்ளார். இவை அனைத்தையும் கடந்து வந்துள்ளதாக கூறும் மீரா மிதுன், தனக்கு தொல்லை கொடுத்தவர்களின் பட்டியலை வெளியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

மட்டுமில்லாமல், நடிகை திரிஷா மூலம் நான் இழந்த பட வாய்புகள் குறித்து வீடியோவை வெளியிடவுள்ளதாகவும் கூறியுள்ளார். வெறும், 5.5 அடி உயரமே இருக்கும் திரிஷா எப்படி மிஸ் சென்னை ஆனார். என்னை அறிந்தால் படத்தில் என்னுடைய காட்சிகளை வேண்டுமென்றே நீக்கினர் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அம்மணி.


மேலும், இதனுடன் தன்னுடைய சில கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை கண்டமேனிக்கு விளாசி வருகிறார்கள்.

த்ரிஷா குறித்த ரகசியத்தை அம்பலப்படுத்தும் மீரா மிதுனின் வீடியோ..! - கழுவி ஊற்றும் ரசிகர்கள்..! த்ரிஷா குறித்த ரகசியத்தை அம்பலப்படுத்தும் மீரா மிதுனின் வீடியோ..! - கழுவி ஊற்றும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 28, 2020 Rating: 5
Powered by Blogger.