அட தொயரத்த..! - அனக்கோண்டா நடிகருடன் இளம் நடிகை..! - இப்படியா..? அப்படியா..?
அனக்கோண்டா நடிகர் திடீர் திடீர் என செய்த வித்தைகளை அனைவரும் அறிவார்கள். அதுக்கு தலைவர், இதுக்கு தலைவர் என அடுத்தடுத்து வளர்ந்த நடிகர் திடீரென அரசியலுக்குள்ளும் என்ட்ரி கொடுத்து சினிமா துறையினர் மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
ஆனால்,இப்படி அதிர்ச்சி மன்னனாக வளம் வந்த அவருக்கே அதிர்ச்சி கொடுத்தார் அவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண். படு ஜோராக நடந்த அவரது நிச்சயதார்த்தம் நிச்சயதார்த்தமாகவே நின்று போனது. என்னடா இது எப்படி ஆகிடுச்சு என்று பலரும் உச் கொட்டி நகர்ந்தனர்.
ஆனால், நிச்சயதார்த்தம் வரை வந்த இந்த உறவு திடீரென கட் ஆக காரணம் ஜாதகம், அது, இது என பல கதைகள் உலவிக்கொண்டிருகின்றன. ஆனால், உண்மை வேறு. தமிழ் சினிமாவில் பேயாக அறிமுகமான அந்த வெள்ளை நடிகையுடன் இருந்த தொடர்பு தான் இந்த திருமணம் நிற்க காரணமாம்.
அந்த நடிகை குடும்பத்தில் பெரியபெரிய பிரச்சனைகள் போட்டு பொழக்க ஆரம்பித்து விட்டது. சமீபத்தில் அந்த நடிகையின் அக்கா போதைபொருள் சம்பந்தமான வழக்கில் சிக்கினார். இதனால், பெரிய அளவில் அவரது குடும்பத்தில் சலசலப்பு.
இதனால், சென்னையில் வாங்கி வைத்திருந்த ஒரு வீட்டை அவசர அவசரமாக விற்க வேண்டிய சூழலில் நடிகையுடன் நெருக்கமாகியுள்ளார் அனக்கோண்டா நடிகர். கிட்ட தட்ட 80 லட்சம் மதிப்புள்ள அந்த வீட்டை கொரோனா காலத்தில் யாரும் உடனடியாக வாங்க முன்வராததால் அடிமாட்டு விலையாக வெறும் 30 லட்சத்துக்கு விற்க துணிந்துள்ளார் வெள்ளை நடிகை.
ஆனால், சொத்தின் மதிப்பை தெரிந்த அனக்கோண்டா அந்த வீட்டை ஐம்பது லட்ச ரூபாய்க்கு வாங்கி கொள்கிறேன். இப்போதைக்கு பணத்தை மட்டும் வாங்கிகோங்க பத்த்ரிப்பதிவை இன்னொரு நாள் வைத்துக்கொள்ளலாம் என உதவியுள்ளார்.
அவ்வளவு தான் நடிகருடன் நெருக்கமான நடிகை அவருடனே தங்குவது, போவது, வருவது என இருந்துள்ளார். விளைவாக இருவருக்கும் ஒரே நேரத்தில் கொரோனா பாதிப்பும் ஏற்பட்டது.
இதனை அறிந்த சினிமா வட்டாரம்.. இந்த நடிகையால் கல்யாணம் நின்றதா..? இல்லை, கல்யாணம் நின்றதால் இந்த நடிகையுடன் சேர்ந்து விட்டாரா..? .. அப்படியா..? இல்ல இப்படியா..? என்று முனுமுனுத்து வருகிறார்கள்.
அட தொயரத்த..! - அனக்கோண்டா நடிகருடன் இளம் நடிகை..! - இப்படியா..? அப்படியா..?
Reviewed by Tamizhakam
on
December 11, 2020
Rating:
