இன்றைய ராசிபலன் 03 மார்ச் 2023 வெள்ளிக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 03 மார்ச் 2023 வெள்ளிக்கிழமை. வாழ்க்கையில் வெற்றி பெற துடிக்க கூடிய மனிதர்கள் அனைவரும்  கட்டாயம் கடவுள் நம்பிக்கையோடு இருப்பது அவர்களை மேலும் மேலும் வாழ்க்கையில் உயர்த்துவதற்கு வழிவகை செய்யும்.

அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு ஏற்படக்கூடிய இடர்களில் இருந்து அவர்களை பாதுகாக்க கூடிய அரணாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களிடையே நேர்மறையான எண்ணங்களை தோற்றுவித்து ஆற்றலோடு எதையும் சந்திக்க கூடிய துணிவை தருகின்ற ஆற்றல் தெய்வ வழிபாடு மூலம் ஏற்படும்.அந்த வரிசையில் இன்று மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

எதையும் முடிக்க வேண்டும் என்பதில் அதீத எண்ணத்தோடு திகழக்கூடிய மேஷ ராசி நேயர்களே இன்று உங்கள் ஆற்றல் சற்று குறைந்து காணப்படும். ஆன்மீக ஈடுபாடு மற்றும் பிரார்த்தனைகளை மேற்கொள்வது மிகவும் நல்லது. தியானமும் உங்களுக்கு சிறப்பாக பலனை கொடுக்கும். பிறருடன் பேசும் போது கவனமாக பேசுங்கள்.

தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை பொறுப்புக்கள் அதிகரித்து இருப்பதால் பதட்டம் ஏற்படும். எதிர்காலம் பற்றிய தேவையற்ற பயம் காரணமாக உங்களிடைய அமைதியின்மை இருக்கும். எனினும் பணியில் உற்சாகமாக செயல்படுவீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பண வரவு குறைந்து காணப்படும். உங்கள் சம்பாத்தியத்தை குடும்பத்தில் ஏற்படக்கூடிய சில செலவுகளுக்காக செலவு செய்கிற நேரம்.

--Advertisement--

ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்கள் தோள்களில் வலி ஏற்பட உள்ளது. சளி மற்றும் இருமல் வர வாய்ப்பு இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே இன்று உங்கள் பொறுமைக்கு சோதனை ஏற்படக்கூடிய நாள். எதையும் திட்டமிட்டு செயலாற்ற நீங்கள் நினைத்தாலும் உங்களுக்கு அந்த காரியங்கள் நடப்பது மிகவும் சிரமமாக இருக்கும். பிரார்த்தனை மற்றும் பக்தி பாடல்கள் கேட்பதின் மூலம் உங்களுக்கு ஆறுதல் ஏற்படும்.

 தொழில் ஸ்தானத்தைப் பொறுத்தவரை பணிகளை குறித்து நேரத்தில் முடிக்க இயலாது. பணிகள் அனைத்தும் நிலுவையில் இருக்கும். இது உங்களுக்கு கவலை அளிப்பதோடு மட்டுமல்லாமல் சக பணியாளர்களிடம் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும்.

 நிதி நிலமையை பொறுத்தவரை பணம் சம்பாதிக்க கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். சேமிப்புத்திறன் அதிகரிக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை பல் வலியால் அவதி ஏற்படலாம். எனவே உங்களுக்கு பல் வலி ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

மிதுனம்

 மிதுன ராசி அன்பர்களே இன்று நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். உங்கள் சூழ்நிலை பதட்டமாக இருக்கக்கூடிய காரணத்தால் நீங்கள் பிரார்த்தனை மூலம் தான் ஆறுதல் பெற முடியும். உங்கள் பிரியமானவர்களோடு நீங்கள் உரையாடும்போது பதட்டப்படாமல் கவனமாக பேச வேண்டும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை இன்று நீங்கள் உணர்ச்சிவசப்படக் கூடிய நாளாக உள்ளது. எனவே பணிகளில் அதிக தவறுகள் நேர வாய்ப்பு இருப்பதால் நீங்கள் பணிகளை செய்யும் போது படு கவனமாக செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 நிதி நிலைமையை பொருத்தவரை பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து காணப்படுவதால் பண தட்டுப்பாடு நிலவும். எனவே பணத்திற்காக கடன் வாங்கக்கூடிய சூழ்நிலைகள் உருவாகலாம்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்த வேண்டும் அலர்ஜி காரணமாக சளி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

கடகம்

கடக ராசி நேயர்களே இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக இல்லை. எதார்த்தமான அணுகுமுறையை மேற்கொள்வது நல்லது. உங்களது பலவீனங்கள் அதிகரிப்பதால் நீங்கள் கடுமையான முயற்சி செய்துதான் எதையும் சாதிக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணி செய்யும் விதத்தில் தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் பணியில் கவனத்தை செலுத்த வேண்டும் அது அவசியம் ஆகும்.

 நிதி நிலமையை பொறுத்தவரை பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து காணப்படுகிறது. எனவே பணத்தைக் கொண்டு நிர்வகிக்க உங்களுக்கு என்ன செய்ய வேண்டும். எனவே நீங்கள் பணத்தை பத்திரமாக நிர்வாகிப்பது மிகவும் அவசியமாகும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை மன அழுத்தத்தின் காரணமாக முதுகு வலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது எனவே ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்தவும்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இந்த நாளை உங்களுக்கு சாதகமான நாளாக மாற்றி அமைக்க வேண்டும் என்றால் கட்டாயம் பொறுமை அவசியம்.  திட்டங்களை தீட்டி நம்பி செயலாற்றினால் மட்டுமே வெற்றி கொள்ள முடியும்.

 வேலையை பொறுத்தவரை மேல் அதிகாரிகள் உங்களை மதிப்பிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் நீங்கள் செயல் திறனோடு செயலாற்ற வேண்டும். பணியை முடிப்பதில் கவனம் இருக்கட்டும் படைப்பாற்றல் மிகுந்திருக்கும்.

 செலவுகள் அதிகரித்து காணப்படும் அது உங்களுக்கு கவலையை அளிக்கும். பணத்தை கவனமான முறையில் செலவு செய்ய வேண்டும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை எந்த சிக்கலும் இல்லை மிக நல்ல முறையில் ஆரோக்கியம் இருப்பதால் நீங்கள் அதில் கவனத்தை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

கன்னி

 கன்னி ராசி அன்பர்களே இன்று எதையும் விரைவாக நீங்கள் செய்து முடிப்பீர்கள் இந்த நாள் சிறப்பாக இருப்பதால் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிய தொடர்புகள் மூலம் உங்களுக்கு நன்மை அதிகரிக்கும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை சக பணியாளர்களிடம் நல்லுறவை பராமரிக்க வேண்டும். பணியில் உங்கள் நேர்மை பிரதிபலிக்கப்பட்டு மேலதிகாரிகளின் நல் மதிப்பை பெறுவீர்கள்.

நிதி நிலையை பொறுத்தவரை சிறிய கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது, பண தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்து கொள்ளுங்கள். உங்கள் சம்பாதிப்பு பணத்தை குடும்பத்திற்காக செலவு செய்ய நேரிடும்.

 ஆரோக்கியமும் அற்புதமாக இருப்பதால் இன்று நீங்கள் ஆரோக்கியத்தை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று உங்கள் திட்டம் அணுகுமுறை மூலம் நீங்கள் இந்த நாளை மிக நல்ல நாளாக மாற்றி அமைப்பீர்கள். உங்கள் உரையாடல் திறனை மேம்படுத்திக் கொள்வதின் மூலம் நன்மைகள் ஏற்படும்.

 தொழிற் ஸ்தானத்தைப் பொறுத்தவரை சில தடுமாற்றங்கள் உள்ளதால் பணி சுமை அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தை சார்ந்து இருப்பதைவிட கடினமாக உழைப்பதை நீங்கள் கருத்தும் கருத்தில் கொள்ளுங்கள்.

நிதி நிலமையை பொருத்தவரை வளர்ச்சி அபாரமாக இருந்தாலும் சிறிய கடன் பெறுவதற்கான யோகம் உண்டு, அந்த கடனின் மூலம் உங்கள் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்து கொள்வீர்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை மன உளைச்சலுக்கு காரணமாக முதுகு வலி சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனத்தோடு இருங்கள். உடல் நிலையில் ஏதேனும் மாற்றம் தேவைப்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.

விருச்சிகம்

 ராசி நேயர்களே நீண்ட நாட்கள் பிறகு நீங்கள் வெற்றி இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். பல தடைகளை கடந்து தான் இந்த வெற்றியை நீங்கள் அடைவீர்கள். கவலையை நீக்கி மனதை அமைதியாக எப்போதும் வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளில் தவறு நடக்க வாய்ப்புகள் உள்ளதால் கவனமாக பணியாற்ற வேண்டும். தொழிலில் மும்மரமாக நீங்கள் பணியாற்றுவதை பார்த்து பலரும் வியப்பார்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பயணத்தின் போது பண இழப்புக்கான வாய்ப்புகள் அதிகளவு இருப்பதால் கவனத்தோடு இருங்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை அதிக மன உளைச்சல் காரணமாக கை கால்களில் வலி ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உருவாக்கியுள்ளது. எனவே பதட்டத்தை தனித்து தியானத்தில் ஈடுபடவும்.

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று அதிர்ஷ்டம் குறைவாக இருப்பதால் நீங்கள் கடைசி நேரத்தில் உங்களது வாய்ப்புகள் அனைத்தையும் இழப்பீர்கள். இது உங்களுக்கு கவலையை அளிக்கும் முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கவே வேண்டாம்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளை செய்யும் போது திறன்மையை இழந்து இருப்பீர்கள். சக  பணியாளர்களின் ஆதரவு என்று உங்களுக்கு கட்டாயமாக கிடைக்காது. மேலும் மேலதிகாரிகளின் பார்வை உங்கள் மேல் இருப்பதால் கவனத்தோடு பணி செய்யவும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை செலவுகள் அதிகரித்து காணப்படும் வரவுகள் குறைந்து இருப்பதால் பண பற்றாக்குறை இருக்கும். எனவே உங்களது தேவைக்கு ஏற்ப படத்தை செலவு செய்ய முடியாது.

ஆரோக்கியத்தை பொருத்தவரை எந்தவிதமான சுணக்கமும் இல்லாத காரணத்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்.

மகரம்

 மகர ராசி நேயர்களே இன்று சிறப்பான நாளாக இருப்பதால் உங்களது தைரியம் ஆற்றல் அதிகரித்து காணப்படு.ம் இதன் மூலம் நீங்கள் இன்று நல்ல பலனை தர முடியும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை உங்கள் பணிகளை விரைவாக முடிப்பீர்கள்.  உங்கள் பணியாற்றும் முறை சிறப்பாக அமைந்திருக்கும். அனைவரது பாராட்டும் கிடைக்கும்.

 சாதகமான சூழ்நிலை நடப்பதால் நல்ல பலன்களை ஏற்படும்.நிதியை பொறுத்த வரை அதிகளவு பணம் இருக்கும் தேவைக்கான பணத்தை நீங்கள் செலவு செய்வீர்கள். அதுவும் உங்கள் பணம் பயனுள்ள வகையில் மட்டுமே செலவாகும்.

 ஆரோக்கியத்திலும் பெரிய குறைபாடுகள் ஏதுமில்லை ஆரோக்கியம் என்று மிக சிறப்பாக இருக்கும். எனினும் சில சமயம் சோர்வு ஏற்படலாம் எனவே நீங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

கும்பம்

கடின உழைப்பின் மூலம் வாழ்க்கை  தரத்தை உயர்த்திக் கொள்ளக்கூடிய கும்ப ராசி நேயர்களே இன்று உங்களுக்கு பிரியமானவர்களை அழைத்து நீங்கள் வீட்டில் விருந்து கொடுப்பீர்கள். இது உங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகள் அதிகமாக இருப்பதால் பணிகளை பொறுமையாகவும் நிதானமாகவும் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை கடன் வாங்கி செலவு செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.எனவே பண வரவு இல்லாத நிலையில் நீங்கள் பண இழப்பை ஏற்படுத்தாமல் இருக்க பணத்தை கட்டாயம் சேமிக்க வேண்டும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று தலைவலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தியானம் மூலம் மட்டுமே இதை சரி செய்ய முடியும். எனவே கடவுளின் பக்தி பாடல்களை கேட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள். சூடான விவாதத்தை தடுக்க உரையாடுவதற்கு முன்பு ஒரு முறை அல்லது இரு முறை நன்கு யோசிக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை என்று தள்ளிப் போடுங்கள்.

 தொழில் ஸ்தானத்தைப் பொறுத்தவரை பணிகளைக் குறித்த நேரத்திலோ அல்லது அதற்கு முன்போ முடிவுகள் மிகுந்த உற்சாகத்தோடு பணிகளை செய்வீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பண இழப்புக்கான வாய்ப்புகள் உள்ளது. கவனக் குறைவு காரணமாக நீங்கள் பணத்தை இழக்கலாம். எனவே கவனத்தோடு இருங்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை எந்தவிதமான குழப்பமும் இல்லை. யோகாவை மேற்கொள்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும் நம்பிக்கையோடு இந்த நாளை வெற்றிகரமான நாளாக மாற்றி விடுங்கள்.