தலைவர் 168 படத்தின் டைட்டிலாக மாறிய தர்பார் பட பாடல் வரி - அதிகாரபூர்வ அறிவிப்பு - மோஷன் போஸ்டர் இதோ..!


தலைவர் 168' படப்பிடிப்பில் அனைவரையும் வியக்க வைக்கும் வண்ணம் வேலைகளைக் கச்சிதமாக வாங்கி வருகிறார் இயக்குநர் சிவா. 'தர்பார்' படத்தின் பணிகளை முடித்துவிட்டு, சிவா இயக்கத்தில் உருவாகும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் ரஜினி. 

சன் பிக்சர்ஸ் தயாரித்துவரும் இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதில், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்து வருகின்றனர். 

டி.இமான் இசையமைக்க, வெற்றி ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்து வருகிறார். முதலில் பாடல் காட்சி ஒன்றைப் படமாக்கி முடித்துவிட்டு, தற்போது முக்கியமான சில காட்சிகளைப் படமாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த படத்தின் தலைப்பு "அண்ணாத்த" என்று வைத்துள்ளனர். இதனுடைய அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. 

தர்பார் படத்தில் இடம் பெற்ற சும்மாகிழி பாடலில் "ரணகளம் சகல , சாப் ரகள நம்ம அண்ணாத்த அவன் லிமிட் அலறும் வந்து கட போடாத" என்ற வரிகளில் ரஜினியை குறிக்கும் "அண்ணாத்த" என்ற வார்த்தையை படக்குழு தலைப்பாக தேர்வு செய்துள்ளனர்.
ரணகளம் சகல
சாப் ரகள நம்ம அண்ணாத்த
அவன் லிமிட் அலறும்
வந்து கட போடாத


தலைவர் 168 படத்தின் டைட்டிலாக மாறிய தர்பார் பட பாடல் வரி - அதிகாரபூர்வ அறிவிப்பு - மோஷன் போஸ்டர் இதோ..! தலைவர் 168 படத்தின் டைட்டிலாக மாறிய தர்பார் பட பாடல் வரி - அதிகாரபூர்வ அறிவிப்பு - மோஷன் போஸ்டர் இதோ..! Reviewed by Tamizhakam on February 24, 2020 Rating: 5
Powered by Blogger.