Amazon Prime-ல் ரிலீஸ் ஆகும் "மாஸ்டர்"..? - இது தான் காரணமா..? ரசிகர்கள் ஷாக்..!


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி, நடிகைகள் மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். 

விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் படத்தை திரையில் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

முன்னதாக, ஏப்ரல் 9-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக வரும் 14-ம் தேதி வரை திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இது மே மாத இறுதி வரை நீட்டிக்கப்படலாம் என்று கூறுகிறார்கள்.  இதனால் ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருந்த மாஸ்டர், சூர்யாவின் சூரரைப் போற்று ஆகிய படங்கள் திட்டமிட்டபடி திரைக்கு வருமா என்ற கேள்வி எழுந்தது. 

இதையடுத்து தற்போது கிடைத்துள்ள தகவலின் படி கொரோனா பரவல் முடிந்து திரையரங்குகள் திறந்தாலும் இப்போதைக்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுதும் உள்ள தியேட்டர்களுக்கு ரசிகர்கள் பலரும் கொரோனா அச்சத்தினால் திரையரங்கிற்கு வர மாட்டார்கள் என்பதால் படத்தை Amazon Prime போன்ற டிஜிட்டல் ஃபிளாட்ஃபார்மில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது என தகவல்கள் கசிந்துள்ளன.

ஆனால், படக்குழு தரப்பில் இருந்து இது குறித்து எந்த விளக்கமும் இன்னும் கொடுக்கப்படவில்லை என்றாலும் இந்த தகவல் விஜய் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. படக்குழு இது குறித்து தனது தரப்பு விளக்கத்தை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Previous Post Next Post
--Advertisement--