கடந்த இரண்டு மாதங்களாக உலகை ஆச்சுறுத்தி வரும் கொரோனா என்ற வைரஸ் கிருமியால் கோவிட்-19 என்ற தொற்றுநோய் மக்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த வைரஸ் தொற்று நோயையும் மற்றும் சமீபத்தில் பாலத்காரம் செய்யப்பட்டு கொலை கொலையான ஒரு பெண் மருத்துவரின் சம்பவத்தையும் அடிப்படையாக கொண்ட "மூடர்" என்ற குறும்படம் வெளியாகியுள்ளது.
இந்த படம் இந்த வைரஸ் நோய் தாக்கம் பரவும் முன்பிருந்தே படமாக்கப்பட்டு வந்தது. சில தினங்களுக்கு முன்பு தான் இந்த குறும்படம் யூ-ட்யூப் தளத்தில் வெளியாகியது. இந்த குறும்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள்.
ஆம், தற்போது நாட்டில் உள்ள சூழலை அப்பட்டமாக படம் போட்டு கட்டும்படியாக உள்ளது இந்த குறும்படம். இது கற்பனை கதையாக இருந்தாலும், ஒரு வேளை இந்த சர்ச்சைகளுக்கு பின்னால் இப்படித்தான் நடக்கிறதோ என்ற எண்ணம் ஏற்படும் அளவுக்கு காட்சிகளை தந்துள்ளார் படத்தின் இயக்குனர் தாமோதரன் செல்வக்குமார்.
பொதுவாக எல்லாதுறைய சேர்ந்த நல்ல விஷயங்களிலும் ஒரு கெட்ட விஷயம் இருக்கும். அதற்கு மருத்துவ துறை ஒன்றும் விதிவிலக்கு அல்ல. ஒரு மருத்துவர் தனக்கு இருக்கும் மருத்துவ அறிவை பயன்படுத்தி அதன் மூலம் ஒரு புதுவகையான நோயை உருவாக்கி அதற்கு அவரே மருந்தும் கொடுத்து வியாபாரம் செய்வதை இந்த படம் தெளிவாக காட்டியுள்ளது.
இணையத்தில் வெளியான இந்த "மூடர்" குறும்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு கிடைத்த இந்த வரவேற்பை தொடர்ந்து இயக்குனர் தாமோதரன் செல்வகுமார் இந்த கதையை முழு நீள படமாக இயக்க முடிவு செய்துள்ளார். அதற்கான அடுத்தகட்ட வேலைகளை படக்குழு செய்து வருவதாக கூறுகிறார்கள்.
இந்த குறும்படத்தை பார்த்த ரசிகர்கள் முழுநீள திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இதோ அந்த குறும்படம்,