மும்பையின் ஒரு சாதாரண தெருவில், 57 வயதான கீதா அம்மா இன்று புன்னகையுடன் வாழ்கிறார். அவரது கணவர் நிகில், அவரை விட 20 வயது இளையவர். இன்று அவர்களது திருமணம் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.
கீதா அம்மாவின் வாழ்க்கை ஒரு காலத்தில் மிகவும் வித்தியாசமாக இருந்தது. கனடாவில் 22 ஆண்டுகள் கணவருடன் வாழ்ந்தார். ஒரு மகனும் பிறந்தான். எல்லாம் நன்றாகவே சென்று கொண்டிருந்தது.

ஆனால் 28 ஆண்டு திருமண வாழ்க்கையின் இறுதியில், அவரது கணவர் ஒரு பாலஸ்தீனப் பெண்ணை காதலித்து விவாகரத்து செய்துவிட்டார். உலகமே தலைகீழாக மாறியது. நீதிமன்றம், சட்டப் போராட்டம் எதுவும் பயனில்லை. இறுதியில் தனியாக இந்தியா திரும்பினார்.
மும்பையில் தனிமையும் மன அழுத்தமும் கீதாவை மிகவே வாட்டியெடுத்தன. மயக்கம் வரும் அளவுக்கு உடல்நிலை மோசமானது. பெற்றோரும் மருமகளும் வந்து பராமரித்தனர். ஒரு நாள் மருமகள் விருப்பத்தால் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாமுக்கு சென்றார். அங்குதான் முதல் சந்திப்பு.
“நீங்கதான் கீதாம்மா இல்ல?”ஒரு இளைஞன் புன்னகையுடன் கேட்டான்.“ஆமா… நீங்க?”“நான் நிகில். உங்களை ஃபேஸ்புக்குல ஃபாலோ பண்றேன்.”
.jpg)
அதற்குப் பிறகு நிகில் அடிக்கடி வீட்டுக்கு வர ஆரம்பித்தான். கீதாவின் உடல்நிலையை கவனித்து மருந்து வாங்கி வருவான், பேசி உற்சாகப்படுத்துவான். மெல்ல மெல்ல இருவருக்கும் இடையே ஒரு பிணைப்பு உருவானது. நிகில் ஒரு நாள் கீதாவின் பெற்றோரிடம் நேரடியாகச் சொன்னான்:
“எனக்கு கீதா அம்மாவை ரொம்ப பிடிச்சிருக்கு. நான் அவரை கவனிச்சுக்குவேன். கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்.”
பெற்றோருக்கு அதிர்ச்சி. உனக்கு வயது 20, கீதாவின் வயது 57.. 37 வயது வித்தியாசம். எப்படி சமூகத்திடம் சொல்வது? உறவுகள் என்ன சொல்லும்? ஆனால், நிகில் பிடிவாதமாக இருந்தான்.
.jpg)
நிகிலின் அம்மா அதிர்ந்து போனார். சண்டை போடாமல், கீதாவை தனியாக அழைத்துச் சென்று கேட்டார்:
“கீதா, நீங்க நல்லவங்கனு தெரியுது. உங்களுக்கு என்னை விட வயசு அதிகம்.. யோசிச்சு பாருங்க. என் மகனோட வயசு 20… நீங்க என் இடத்துல இருந்தா என்ன நினைப்பீங்க?”
.jpg)
கீதா அமைதியாகச் சொன்னார்:“நான் உங்க இடத்தில் இருந்தாலும் எதிர்ப்பேன் தான்.”
ஆனால், அப்போதும் நிகில் விடவில்லை. இறுதியில் இரு குடும்பமும் சம்மதித்து, 11 டிசம்பர் 2020 அன்று திருமணம் நடந்தது. நிகிலின் பெற்றோர் கடைசி நேரத்தில் வந்து ஆசீர்வாதம் செய்தனர். வீட்டுக்கு வந்தபோது வாசலில் இருந்து அறை வரை பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கீதாவின் கண்கள் நிறைந்தன.
.jpg)
இன்று ஆறு வருடங்கள் ஆகிவிட்டன.இல்லத்தில் யாரும் வயதைப் பற்றி பேசுவதில்லை.சமூக வலைதளங்களில் இவர்களிடம், “காதல் டிப்ஸ்” கேட்டு வரும் கமென்ட்டுகள், மெசேஜ்கள் அதிகரித்திருக்கின்றன.
ஆனால் இன்னும் சிலர் கேலி செய்கிறார்கள்:“அத்தை-மாப்பிள்ளையும் கல்யாணம் பண்ணிகிட்டாங்க.. ”“தாயும் மகனும் ஜோடியா..?” “இவன் எதுக்கு 57 வயசு பொம்பளைய கல்யாணம் பண்ணான்?”
உடலுறவின் போது என்ன செய்வீர்கள்..? என்பதில் ஆரம்பித்து வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு மோசமான கமெண்டுகளை நாங்கள் எதிர்கொள்கிறோம்.
.jpg)
உடலுறவின் போது எல்லா கணவன்-மனைவியும் என்ன செய்வார்களோ அதையே தான் நாங்களும் செய்கிறோம். இதில் என்ன கேள்வி என்று சிரிக்கிறார்கள் இந்த தம்பதியினர்.
“ஆண் பெரியவனாக இருக்கலாம் என்று சமூகம் ஏற்றுக்கொள்கிறது.பெண் பெரியவளாக இருந்தால் மட்டும் ஏன் இப்படி கேலி செய்ய வேண்டும்?காதலுக்கு வயது எல்லை இல்லை.அதை உணர வேண்டிய நேரம் இப்போதுதான் வந்திருக்கிறது.”
.jpg)
இன்றும் சமூகம் கேலி செய்கிறது.ஆனால் இந்த ஜோடிகள் புன்னகையுடன் தங்கள் வாழ்க்கையை வாழ்கின்றனர்.ஏனெனில் — அவர்களுக்கு தெரியும்,உண்மையான காதல் எப்போதும் வயதை விட பெரியது.
Summary in English : Geeta, aged 60, married Nikhil, who is 20 years younger, after facing strong family and social opposition due to the age gap. Despite taunts and criticism from society and online, they have been happily married for five years in Mumbai, with family acceptance and growing positive support.

