39 வயதில் இறந்த நடிகர் சிரஞ்சீவியின் மனைவி இந்த தமிழ் நடிகையா..? திருமணம் ஆகி இரண்டே ஆண்டுகளில் நடந்த சோகம்..!


கடந்த சில வருடங்களாக இந்திய சினிமா பல இழப்பை சந்தித்து வருகிறது. அதிலும் இந்த வருடம் ரிஷி கபூர், இர்பான் கான் போன்ற ஜாம்பவான்களை இழந்தது. இந்நிலையில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி இன்று உடல்நலம் முடியாமல் இறந்துள்ளார்.

இவருக்கு, தற்போது 39 வயது தான் ஆகின்றது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும், இவர் தமிழ் நடிகர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் சொந்தக்காரர் என்பது கூடுதல் தகவல். இந்த தகவல் ஒட்டு மொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவர் பல தமிழ் படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்தவர், இவர் படங்களுக்கு கர்நாடகாவில் பெரிய வரவேற்பு இருக்கும். இன்று நெஞ்சுவலி காரணமாக மருத்துானையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தாராம், இதற்கு ப்ரியாமணி, புனித, சஞ்சனா என பல திரை நட்சத்திரங்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இதோடு ரசிகர்களுக்கு மேலும், அதிர்ச்சியூட்டும் செய்தி என்னவென்றால் சிரஞ்சீவி அவர்களின் மனைவி வேறு யாருமில்லை, காதல் சொல்ல வந்தேன் படத்தில் ஹீரோயினாக நடித்த மேக்னா ராஜ் தான்.


இவருக்கு இப்போது 30 வயது தான் ஆகின்றது. கடந்த 2018-ம் ஆண்டு தான் இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் ஆன இரண்டாவது வருடமே இப்படி ஒரு சோகம் நடந்திருப்பது சினிமா ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

39 வயதில் இறந்த நடிகர் சிரஞ்சீவியின் மனைவி இந்த தமிழ் நடிகையா..? திருமணம் ஆகி இரண்டே ஆண்டுகளில் நடந்த சோகம்..! 39 வயதில் இறந்த நடிகர் சிரஞ்சீவியின் மனைவி இந்த தமிழ் நடிகையா..? திருமணம் ஆகி இரண்டே ஆண்டுகளில் நடந்த சோகம்..! Reviewed by Tamizhakam on June 07, 2020 Rating: 5
Powered by Blogger.