நிரந்தமாக மூடப்படும் திரையரங்குகள்..? - வெளியான அதிர்ச்சி ஆய்வு முடிவுகள்..!


இந்த விஷயத்துக்குள் நாம் உள்ளே சென்று படிக்கும் முன்பு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய, புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் உள்ளது. தயவு செய்து இதனை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

சமீப காலமாக எதற்கெடுத்தாலும், விவசாயமே இல்லை இவனுங்களுக்கு கிரிக்கெட் எதுக்கு..? IPL போட்டி எதுக்கு..? - விவசாயமே இல்லை சினிமா எதுக்கு..? என்டர்டெயின் மென்ட் எதுக்கு..? - சோத்துக்கே வழி இல்லை கம்யூட்டர் கம்பெனி எதுக்கு..? கம்யூட்டரில் சோற்றை டவுன்லோட் பண்ண முடியுமா..? விவசாயமே அழியுது நமக்கு எதுக்கு எட்டு வழி சாலை..? இப்படியான கருத்துக்களை இளைஞர்கள் மத்தியில் விதைத்துள்ளார்.

இந்த கருத்துக்களை கேட்கும் போது, ஆமா, விவசாயம் இல்லாத போது இதெல்லாம் எதுக்கு..? என்று உங்களுக்கு தோன்றினால் உங்களை விட முட்டாள் யாருமில்லை. விவசாயம் முக்கியம் தான். அதில், மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால், விவாசாயத்துறை வளர்ச்சிக்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டுமே தவிர வேறொரு விஷயத்தை எடுத்துக்கொண்டு இது எதுக்கு..? அது எதுக்கு என்று கேள்வி கேட்பதில் ஏதாவது நல்லது நடக்கப்போகின்றதா..? என்று யோசித்திருக்கிறீர்களா..?

சினிமா என்பது நமக்கு பொழுது போக்கு..! ஆனால், சினிமா தொழிலளர்களுக்கு..?. கிரிக்கெட், IPL எல்லாம் நமக்கு பொழுது போக்கு..! ஆனால், கிரிகெட் வீரர்கள் முதல் கிரிகெட் மைதானத்தை பராமரிக்கும் வேலை செய்பவர், தொலைக்காட்சி வேலையாட்கள், கேமரா மேனில் இருந்து பந்து பொருக்கி போடும் பையன் வரை....? இப்படி நமக்கு பொழுது போக்கு என்று நினைக்கும் பல விஷயங்கள் மற்றவர்களுக்கு வாழ்வாதாரம்..? எனவே, இப்படியான குருட்டுத்தன்மான ஒப்பிடுதல்களை நிறுத்தி விட்டு முறையான விவாதம் மற்றும் விமர்சனங்களை முன்னெடுத்தால் மட்டுமே மாற்றம் நிகழும் என்பதை அறிவோமாக.

சரி வாங்க விஷயத்துக்குள் போகலாம்,கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் ஆயிரக்கணக்கான திரை அரங்குகள் நிரந்தரமாக மூடப்படும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலகில் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகள் சீனாவில் தான் உள்ளன. அங்கு 69 ஆயிரத்து 787 திரையரங்குகள் உள்ளன. கடந்த ஆண்டு மட்டும் புதிதாக 9708 திரையரங்குகள் திறக்கப்பட்டன.

அமெரிக்காவின் ஹாலிவுட்டுக்குப் பின் மிகப் பெரிய அளவில் லாபம் கொழிக்கும் தொழிலாக சீன திரைத்துறை உள்ளது. கடந்த, ஜனவரி 23ல் சீனா முழுவதிலும் உள்ள திரையரங்குகளை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. கடந்த நான்கு மாதங்களாக சீன திரைத்துறையே முற்றிலுமாக முடக்கப்பட்டு இருப்பதால் 32 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சீன திரையரங்குகளின் எதிர்காலம் குறித்து அறிய சீன திரைப்பட சங்கம் சீன திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் இணைந்து கருத்துக் கணிப்பு ஒன்றை சமீபத்தில் நடத்தின.

அதன் முடிவில் 40 சதவீததிற்கும் மேலான திரையரங்குகள் இந்த நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வருவது கடினம் என தெரியவந்துள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான திரையரங்குகள் நிரந்தரமாக மூடப்படும் அபாயம் உள்ளதாகவும், திரைத்துறை மற்றும் திரையரங்கங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா நெருக்கடி முடிவுக்கு வந்த பின் 10 சதவீத திரையரங்குகள் மட்டும் பழைய வேகத்தோடு இயங்க வாய்ப்புள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது. திரையரங்கம் திறப்பதற்கான தடை உத்தரவு அக்டோபர் வரை நீடித்தால் திரைத்துறையின் இந்த ஆண்டுக்கான வருவாயில் 91 சதவீதம் ஒட்டு மொத்தமாக இழப்பு ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.

இது சீனாவுக்கு மட்டுமா..? என்றால் கிடையாது. இந்தியா உட்பட பல நாடுகளின் நிலை இது தான். ஏற்கனவே, முன்னணி நடிகர்கள் தங்கள் சம்பளத்தை வெகுவாக குறைக்க வேண்டும் என்ற கருத்து எழுந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், குளிர்சாதன வசதி உள்ள ஒரு திரையரங்கில் 100 பேர் இருந்து அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால் கூட பாதிப்பு மிக மோசமாக இருக்கும் எனவும், பிரமாண்ட திரையரங்குகளில் குளிர்சாதன வசதி இல்லாமல் படம் பார்ப்பது என்பது குதிரை கொம்பு எனவும் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வரவே யோசிப்பார்கள் எனவும் ஆய்வு தகவல்கள் கூறுகின்றன.

இதற்கெல்லாம் என்ன பதில் என்று யாரும் சொல்ல முடியாது. இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளுக்கு, காலம் தான் பதில் சொல்ல வேண்டும். காத்திருப்போம்.

நிரந்தமாக மூடப்படும் திரையரங்குகள்..? - வெளியான அதிர்ச்சி ஆய்வு முடிவுகள்..! நிரந்தமாக மூடப்படும் திரையரங்குகள்..? - வெளியான அதிர்ச்சி ஆய்வு முடிவுகள்..! Reviewed by Tamizhakam on June 06, 2020 Rating: 5
Powered by Blogger.