"யாராக இருந்தாலும் என்னிடம் அனுமதி வாங்க வேண்டும்.." - ஆரம்பிக்கும் முன்பே பிரச்சனை..! - சிக்கலில் கீர்த்தி சுரேஷ் படம்..!


தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் 200 படங்களுக்கு மேல் நடித்து, 44 படங்களை டைரக்டும் செய்த மறைந்த பழம்பெரும் நடிகை விஜய நிர்மலாவின் வாழ்க்கையை படமாக்க தெலுங்கு திரையுலகில் சிலர் திட்டமிட்டு வருகின்றனர்.

இதில், விஜய நிர்மலா கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேசை நடிக்க வைக்க அணுகியதாகவும். அதற்கு அவரும் ஒப்புக்கொண்டாத கூறப்படுகின்றது. கொரோனா ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டது.

இந்த படத்துக்கு தற்போது சிக்கல் உருவாகி உள்ளது. விஜய நிர்மலாவின் மகனும், தெலுங்கு நடிகருமான நரேஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, எனது தாய் விஜய நிர்மலாவின் வாழ்க்கையை படமாக்க என்னிடம் அனுமதி பெற வேண்டும்.

ஆனால், இதுவரை இந்த படத்தை தயாரிக்க நான் யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு எனது தாயாரின் வாழ்க்கையை படமாக்க நான் திரைக்கதை எழுதினேன்.

அதற்கு எனது தாயாரும் உதவினார். அவர் மறைந்ததும் அந்த பணிகளை தொடர மனமில்லாமல் விரக்தியில் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டேன். ஆனாலும் விரைவில் அந்த திரைக்கதையை எழுதி முடிக்க திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

கீர்த்தி சுரேஷ் அல்லது யார் நடிப்பதாக இருந்தாலும் தயாரிப்பு நிறுவனம் என்னிடம் முறையான அனுமதி பெற வேண்டும் என கூறியுள்ளார்.

"யாராக இருந்தாலும் என்னிடம் அனுமதி வாங்க வேண்டும்.." - ஆரம்பிக்கும் முன்பே பிரச்சனை..! - சிக்கலில் கீர்த்தி சுரேஷ் படம்..! "யாராக இருந்தாலும் என்னிடம் அனுமதி வாங்க வேண்டும்.." - ஆரம்பிக்கும் முன்பே பிரச்சனை..! - சிக்கலில் கீர்த்தி சுரேஷ் படம்..! Reviewed by Tamizhakam on June 03, 2020 Rating: 5
Powered by Blogger.