நான் CM-ஆ நடிக்கணுமா..? - பிரமாண்டத்திடம் பீதியான லீடர் நடிகர்..!


எதிர்காலத்தில், அரசியலுக்கு வரும் ஆர்வத்தில் இருக்கிறார் அந்த லீடர் நடிகர். அவரது ரசிகர்களும் அதையே தான் எதிர்பார்கிறார்கள். ஏற்கனவே, தான் நடித்த ஒரு ஒரு ஐந்தெழுத்து படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் முதல்வராக நடிக்க சொன்னபோது மறுத்து விட்டாராம் லீடர்.

இந்நிலையில், பிரமாண்ட இயக்குனர், அவரிடத்தில், முதலமைச்சராக நடிக்க வேண்டும் என்று. ஒரு கதை சொன்ன போது, " நான், CM கதாபாத்திரத்திலையா..?" என்று அதிர்ச்சியை வெளிப்படுத்தினாராம்.

காரணம் கேட்டால். நான் அரசியலுக்கு வரும் முடிவில் இருப்பதால் தான், என் எல்லா படங்களுக்கும், ஏதாவது ரூபத்தில் குடைச்சல் கொடுக்கின்றன ஆளும் கட்சி, இந்த நேரத்தில், நான் முதல்வராக நடித்தால், அதன்பின், என் படங்களை தியேட்டருக்கே வர விடாத அளவுக்கு பெரிய பிரச்னை கொடுப்பர்.

அதனால் தான். நான் முதல்வராக நடிக்க பயப்படுகிறேன் தவிர வேறு எதுவும் இல்லை என்று, பிரமாண்ட இயக்குனரின் காதில், கிசுகிசுத்து உள்ளாராம் நடிகர். அதே நேரம், நடிகரின் ரசிகர்கள் சூப்பர் நடிகரின் அரசியல் கட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும், சூப்பர் நடிகரின் காலத்துக்கு பின் அந்த கட்சியின் தலைமைபொறுப்பை இவர் எடுத்துக்கொள்ள வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.

96-ல் சூப்பர் நடிகர் செய்த தவறை லீடர் நடிகர் இப்போது செய்து விட கூடாது என்றும் கூறுகிறார்கள். இது குறித்து, லீடரின் ரசிகர் மன்ற தலைமையில் உள்ள பொறுப்பாளர்கள் பலரும் அவரிடமே கூறியுள்ளார்களாம். அவர் கட்சி தொடங்கட்டும் அப்புறம் இது பத்தி எல்லாம் பேசிக்கலாம் என்று நம்பிக்கை தரும் விதத்தில் பேசியுள்ளாராம். மேலும், சூப்பர் நடிகர் அரசியல் என்ட்ரி ஆனால் எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லாமல் அவருக்காக அரசியல் பிரச்சாரம் செய்வார் லீடர் நடிகர் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இது லீடர் ரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கை தருவதாக அமைத்துள்ளது. வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை போட்டுக்கொண்டு தலைவரின் புகைப்படம் வெளியில் தெரிவது போல வைத்துக்கொண்டு மக்களை சந்திக்காமல் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே குறியாய் இருக்கும் அரசியல் களம் 21 தேர்தலில் நிச்சயம் மாறும். இளைஞர்கள் கையில் ஆட்சி வரும் என்று நம்பிக்கையுடன் இருக்கும் மக்களுக்கும் லீடர் நடிகரின் இந்த முடிவு மேலும் நம்பிக்கை கொடுப்பதாக அமைந்துள்ளது.

நான் CM-ஆ நடிக்கணுமா..? - பிரமாண்டத்திடம் பீதியான லீடர் நடிகர்..! நான் CM-ஆ நடிக்கணுமா..? - பிரமாண்டத்திடம் பீதியான லீடர் நடிகர்..! Reviewed by Tamizhakam on July 01, 2020 Rating: 5
Powered by Blogger.