"தன்னோட தவறை திருத்திகொள்கிறேன் - நானும் சாதாரண மனுஷன் தான்" - வைரலாகும் விஜயின் ட்வீட்..!


தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்டவர் விஜய். அடுத்த சூப்பர்ஸ்டார் என்று அனைவராலும் கொண்டாடப்படும் விஜய் இன்று தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத நடிகராக வளர்ந்து நிற்கிறார். 

எனவே அவரையும் அவரது செயல்களையும் அனைவரும் உற்றுநோக்கி வருகின்றனர். அந்தவகையில் விஜய் கத்தி படத்தின் ஒரு காட்சியில் கொக்கோகோலா விளம்பரத்திற்காக வெளிநாட்டிற்கு தண்ணி எடுத்து செல்வது குறித்து பேசியிருப்பார். 

ஆனால், சினிமாவின் நடித்த ஆரம்ப காலகட்டத்தில் அதே கோலா விளம்பரத்தில் விஜய் நடித்திருந்தது கத்தி படம் வெளியான சமயத்தில் பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது. இதுகுறித்து விஜய்யிடம் ரசிகர் ஒருவர் "கொக்கக் கோலா விளம்பரத்தில் நடித்து விட்டு கத்தி படத்தில் அதற்கு எதிராக பேசுகிறீர்களே இதற்குப் பெயர்"? என்று கேட்டு ட்விட் செய்தார். 

அவருக்கு பதிலளித்த விஜய் "நான் இதை இப்போது செய்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். நானும் தவறுகளை திருத்திக் கொள்ளும் சாதாரண மனுஷன் தான். இனி இப்படி ஒரு விளம்பரத்தில் நடிக்க மாட்டேன். கத்தி பட கதை கேட்டபோதே எனக்குள் இந்த கேள்வி தோன்றியது. 


அதனால் நான் ஜீவா கதாபாத்திரம் மூலமாக வெளிப்படுத்தி என்னை நானே நிறுத்திக்கொண்டேன் என பொறுப்புணர்வுடன் பதில் அளித்துள்ளார். சுமார் 7 வருடங்களுக்கு முன்னர் போட்ட இந்த ட்விட்டர் பதிவு தற்ப்போது வைரலாகி வருகிறது.

"தன்னோட தவறை திருத்திகொள்கிறேன் - நானும் சாதாரண மனுஷன் தான்" - வைரலாகும் விஜயின் ட்வீட்..! "தன்னோட தவறை திருத்திகொள்கிறேன் - நானும் சாதாரண மனுஷன் தான்" - வைரலாகும் விஜயின் ட்வீட்..! Reviewed by Tamizhakam on August 14, 2020 Rating: 5
Powered by Blogger.