"விடிய விடிய குடி... முடிய முடிய புகை.." - லாக்டவுனால் கரைசேர்ந்த முன்னணி நடிகை..!

பணக்கார ராகமான இயக்குனருடன் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார் என்று நினைத்த அந்த மும்பை நடிகை திடீரென விவாகரத்து பெற்று பிரிந்து சினிமா வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

ஆனால், நடிகையும், இயக்குனரும் திருமணம், விவாகரத்து என்ற ஒரு சம்பவமே எங்கள் வாழ்கையில் நடக்கவில்லை என்பது போல அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார்கள்.

பெரிய இடத்துக்கு பெரிய மருமகன் நமக்கு என்ன பிரச்சனை என்று இருந்தார் இயக்குனர். சில வருடங்களில் பணக்கார பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். அதுவரை சுறுசுறுப்பாக இருந்த நடிகை முதல் கணவர் வேறு திருமணம் செய்ததும் உடைந்து போனார்.

இதனால், கெட்ட நண்பர்கள் சாவகாசம் ஏற்பட்டு, கெட்ட பழக்கத்திற்கு அடிமையானார் அம்மணி. மேக்கப் கிரீம்களும், லிப்ஸ்டிக்குகளும் விளையாட வேண்டிய நடிகையின் கேரவேனுக்குள் பாட்டில்களும், வெள்ளை சுருட்டு பாக்கெட்டுகளும் விளையாடின.

சீன் சொல்வதற்கு கேரவேனுக்குள் நுழைந்தாலே ஆளை தூக்கும் துர்நாற்றம் அடிக்கிறது என படத்தின் இயக்குனர் ஒருவர் ஓப்பனாகவே கூறினார். இப்படி தண்ணி வண்டியாக இருந்த நடிகை இந்த கொரோனா லாக்டவுனில் யோகா மற்றும் மன வளக்கலை ஆகிவற்றை பயின்று இப்போது மதுப்பழக்கத்தின் பிடியில் இருந்து வெளிவந்துள்ளாராம்.

இது அம்மணியின் நலம் விரும்பியும், சக நடிகையுமான தம்மு நடிகை எடுத்த முயற்சிக்கு கிடைத்த பலன் என்கிறார்கள். மேலும், பாக்கெட் பாக்கெட்டாக புகை ஊதி தள்ளிக்கொண்டிருந்தவர் இப்போது ஒன்று, இரண்டு என்ற நிலைக்கு இறங்கி வந்துள்ளாராம்.

இப்போது மனம் அமைதியாக இருப்பதாக கூறுகிறார் அம்மணி. கையோடு அவருக்கு ஒரு கல்யாணத்தையும் பண்ணி வச்சிடுவோம் என நண்பிகள் முயற்சி செய்து வருகிறார்களாம்.

"விடிய விடிய குடி... முடிய முடிய புகை.." - லாக்டவுனால் கரைசேர்ந்த முன்னணி நடிகை..! "விடிய விடிய குடி... முடிய முடிய புகை.." - லாக்டவுனால் கரைசேர்ந்த முன்னணி நடிகை..! Reviewed by Tamizhakam on August 03, 2020 Rating: 5
Powered by Blogger.