"கவர்ச்சி குதிரை..." - திரிஷா வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் ரசிகர்கள்..!


திரிஷாவுக்கு விலங்குகள் மீது அலாதி பிரியம் என்பதும் அவர் ஒரு பீட்டா அமைப்பின் ஆதரவாளர் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் தனது வீட்டில் விதவிதமான நாய்க்குட்டிகள் உள்பட வீட்டு விலங்குகளை வளர்த்து வரும் த்ரிஷாவுக்கு திடீரென குதிரை மீது பாசம் எழுந்து உள்ளது. 
 
திரிஷா கடந்த சில மாதங்களாக குதிரை சவாரி பயிற்சி பெற்று வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் திரிஷா, குதிரையுடன் அவர் இருக்கும் புகைப்படங்களை தனது டுவிட்டரிலும் இன்ஸ்டாவிலும் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தின் பின்னணியிலும் ஒருசில குதிரைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் திடீரென குதிரைமீது திரிஷாவுக்கு பாசம் ஏற்பட்டது ஏன் என்று விசாரித்தபோது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் திரிஷா, அந்த படத்திற்காக தான் குதிரை சவாரியை பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது. 
 
மொத்தத்தில் திரிஷாவுக்கு திடீரென குதிரை மீது பாசம் ஏற்பட மணிரத்னமே காரணம் என்ற உண்மை தற்போது வெளிவந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாக கழித்தவர்களில் திரிஷாவும் ஒருவர். 
 
நிறைய புத்தகங்கள் படித்தார், நிறைய படங்கள் பார்த்தார், உடற்பயிற்சி, யோக செய்தார். இதோடு குறும்படத்தில் நடித்தார், ஐ.நாவின் குழந்தைகள் பாதுகாப்பு தூதுவராக இருப்பதால் அது தொடர்பான கருத்தரங்குகளில் கலந்து கொண்டார். 
 

கவர்ச்சி குதிரை திரிஷா

 
கொரோனா காலத்தில் பசியுடன் வாடிய தெரு நாய்களுக்கு உணவளித்தார். இவற்றோடு குதிரை சவாரியும் கற்றிருக்கிறார். தன் பயிற்சிக்கு உதவிய குதிரையோடு உள்ள படத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அவரது ரசிகர்கள் அவரை கவர்ச்சி குதிரை திரிஷா என வர்ணித்து கொண்டிருக்கிறார்கள். 
 

 
திரிஷா இதற்கு முன்பு துபாயில் ஸ்கைவாக் எனப்படும் விமானத்தில் இருந்து தரையில் குதிக்கும் விளையாட்டிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். ஸ்கூபா டைவிங் என அழைக்கப்படும் ஆழ்கடலில் நீந்தும் பயிற்சியிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறார்.

"கவர்ச்சி குதிரை..." - திரிஷா வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் ரசிகர்கள்..! "கவர்ச்சி குதிரை..." - திரிஷா வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 17, 2020 Rating: 5
Powered by Blogger.