"பிக்பாஸ் முகென்" அடுத்த பட அறிவிப்பு - இயக்குனர் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..! - எகிறிய எதிர்பார்ப்பு..! - குவியும் லைக்குகள்..!


'பிக் பாஸ்' சீசன் 3-ல் வெற்றி பெற்ற முகென் ராவ், தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார்.பிக்பாஸ் 3 டைட்டில் வின்னரான முகென் ராவ் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
மட்டுமில்லாமல் காதல் சொட்டும் பாடல் ஆல்பங்கள் செய்து கணிசமான பெண் ரசிகைகளை சம்பாதித்துள்ளார் முகென். இவர் யாருடைய இயக்கத்தில் முதலில் அறிமுகமாகப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. 
 
கொரோனா ஊரடங்கு காரணமாக இடையில் சில மாதங்கள் ஓடிவிட்டது இந்நிலையில் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தன்னுடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார் முகென். 
 

ஸ்கைமேன் ஃப்லிம்ஸ் இன்டர் நேஷனல் 

 
முகென் ராவ் நடிக்கவுள்ள இந்த படத்தை ஸ்கைமேன் ஃப்லிம்ஸ் இன்டர் நேஷனல் படத்தயாரிப்பு நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது எனவும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் படமாக இந்த படம் இருக்கும் எனவும் தயாரிப்பாளர் கலைமகன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
Kalaimagan-Skyman Films International
Kalaimagan-Skyman Films International
 
இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ்ப்படம் இதுவாகும். பிரபல இசையமைப்பாளரான கோபி சுந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். தல அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சிறுத்தை சிவாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கவின் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். 
 
இதனால், சிறுத்தை சிவாவிடம் கிடைக்கும் அனைத்து கமெர்ஷியல் எலமெண்ட்களும் படத்தில் எதிர்பார்க்கலாம். 
 

நட்சத்திர பட்டாளம் 

 
இந்த படத்தில் நடிகர் பிரபு, நடிகர் சூரி, தம்பிராமையா, நடிகை மீனாட்சி என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கவுள்ளனர். ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிருப்பாக நடந்து வரும் நிலையில் விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 
 

வேலன் 

 
 
இந்த படத்திற்கு "வேலன்" என்று தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் பூஜை இன்று (பிப்ரவரி 19) நடைபெற்றது. இதில், நடிகர் பிரபு, சூரி முகென் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் கலைமகன் இயக்குனர் கவின் ஆகியோர் கலந்து கொண்டனர். 
 
படத்தில் பணியாற்றும் மற்ற கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் படமாகவுள்ளது. 
 
இந்த படம் முகென் ராவிற்கு ஒரு நல்ல ஆரம்பத்தை கொடுக்கும் என விவரம் கோலிவுட் வட்டாரங்கள் பலரும் கூறுகின்றனர்.
 

குவிந்த லைக்குகள்

இந்நிலையில், இந்த படத்தின் அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார் முகென் ராவ். இவர் அறிவிப்பை வெளியிட்ட வெறும் 9 மணி நேரத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளார். 
 

அறிமுக நடிகரின் படத்தின் அறிவிப்பு லட்ச கணக்கில் லைக்குகள் குவிவது இதுவே முதன் முறை என்று கூறலாம். இதன் மூலம் படத்திற்கு முகென் ரசிகர்கள் மத்தியில் இருக்கும் எதிர்பார்ப்பு தெரிகின்றது.

படம் குறித்த க்ளிம்ப்ஸ் வீடியோ

 "பிக்பாஸ் முகென்" அடுத்த பட அறிவிப்பு - இயக்குனர் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..! - எகிறிய எதிர்பார்ப்பு..! - குவியும் லைக்குகள்..! "பிக்பாஸ் முகென்" அடுத்த பட அறிவிப்பு - இயக்குனர் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..! - எகிறிய எதிர்பார்ப்பு..! - குவியும் லைக்குகள்..! Reviewed by Tamizhakam on February 19, 2021 Rating: 5
Powered by Blogger.