ஸ்லீவ்லெஸ் உடையில் பிரபலத்துடன் நெருக்கமாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் - தீயாய் பரவிய புகைப்படம்..! - கீர்த்தி சுரேஷ் தரப்பில் விளக்கம்..!
கோலிவுட்டின் பிசியான இசையமைப்பாளரான அனிருத்துக்கும், கீர்த்தி சுரேஷுக்கும் இடையே காதல் என்று பேச்சு கிளம்பியது. இதற்கு எல்லாம் காரணம். கீர்த்தி சுரேஷ் போட்ட ஒரு ட்வீட் தான். அனிருத்தின் பிறந்தநாளுக்கு அவரை வாழ்த்தி ட்வீட் போட்டார் கீர்த்தி.
அத்துடன் தான் அனிருத்துடன் சேர்ந்து எடுத்த இரண்டு புகைப்படங்களை வெளியிட்டார். புகைப்படங்களை பார்த்தவர்கள் அனிருத்தும், கீர்த்தியும் காதலிக்கிறார்கள் போன்று என்று பேசத் துவங்கினார்கள். இந்நிலையில் தற்போது மீண்டும் காதல் பேச்சு கிளம்பியிருக்கிறது.
அனிருத் இந்த ஆண்டே கீர்த்தி சுரேஷை திருமணம் செய்து கொள்ளப் போகிறாராம் என்று தகவல் வெளியானது.
கீர்த்தி சுரேஷ் தந்தை விளக்கம்
அனிருத்தும், எனது மகளும் காதலிப்பதாக வெளியான தகவல் குறித்து டிகை கீர்த்தி சுரேஷின் தந்தை தற்போது விளக்கம் அளித்துள்ளார். தமிழில் இது என்ன மாயம் படத்தில் அறிமுகமாகி விஜய், சூர்யா, விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்த கீர்த்தி சுரேஷ் தேசிய விருதும் பெற்றார்.
தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். சில தினங்களுக்கு முன்பு கீர்த்தி சுரேசும் இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாக இணைய தளங்களில் கிசுகிசுக்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தின.
இருவரும் சில மாதங்களுக்கு முன்பு நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வைரலானது. விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டது.
காதல் பற்றி இருவர் தரப்பிலும் உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் காதல் கிசுகிசுவுக்கு கீர்த்தி சுரேசின் தந்தையும், தயாரிப்பாளருமான சுரேஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறும்போது, “கீர்த்தி சுரேசும், அனிருத்தும் காதலிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. ஏற்கனவே இதுபோன்ற வதந்திகள் பரவின. இப்போது 3-வது தடவையாக இந்த தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் அனிருத்துடன் சாதாரணமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அது” என்று கூறியுள்ளார்.
ஸ்லீவ்லெஸ் உடையில் பிரபலத்துடன் நெருக்கமாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் - தீயாய் பரவிய புகைப்படம்..! - கீர்த்தி சுரேஷ் தரப்பில் விளக்கம்..!
Reviewed by Tamizhakam
on
February 16, 2021
Rating:
