வாழ்நாள் முழுதும் இதை அணியாமல் வாழ விரும்புகிறேன் - தளபதி 65 ஹீரோயின் பூஜா ஹெக்டே..!


தமிழில் ஜீவா ஜோடியாக முகமூடி படத்தில் நடித்த பூஜா ஹெக்டேவுக்கு அதன்பிறகு வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு நெல்சன் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 
 
இதன் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து வருகிறது. இது தவிர பிரபாசுடன் தெலுங்கு, இந்தியில் தயாராகும் ராதே ஷியாம், சிரஞ்சீவியுடன் தெலுங்கில் ஆச்சார்யா, இந்தியில் சர்கஸ் படங்களிலும் நடித்து வருகிறார். 
 
இந்த நிலையில் அடுத்து சூர்யா நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவை நடிக்க வைக்க படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் பரவி வருகிறது. இந்த படத்தை சிவா இயக்க உள்ளார். இவர் அஜித்குமாரின் விஸ்வாசம், வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை இயக்கியவர். கார்த்தி நடித்த சிறுத்தை படத்தையும் டைரக்டு செய்துள்ளார். 
 
தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் முடிந்ததும் சூர்யா படத்தை இயக்குவார் என்று தெரிகிறது. சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். 
 
இது சூர்யாவுக்கு 40-வது படம். இந்த படத்தை முடித்து விட்டு வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கிறார். அதன்பிறகு சிவா படத்துக்கு வருகிறார். “கொரோனாவுக்கு முந்தைய வாழ்க்கை, கொரோனாவுக்கு பிந்தைய வாழ்க்கை என்று கொரோனா எல்லோரது வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 
 
கொரோனாவுக்கு முன்பு ஜாலியாக சுற்றிய மாதிரி இப்போது சுற்ற முடியாத நிலைமை உள்ளது. கொரோனா முன்னால் எல்லோரும் சமம். அதற்கு பணக்காரன், ஏழை என்ற வித்தியாசம் கிடையாது. எல்லோரையும் தாக்குகிறது. விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டி உள்ளது. 
 
பாதுகாப்புக்கு எல்லா முன் எச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்க வேண்டி உள்ளது. குடும்பத்தில் உள்ளவர்கள் வீட்டோடு இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நாங்கள் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டி இருக்கிறது. ஏதோ ஒரு தெரியாத பயம் எங்களை பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 
 
முன்பு மாதிரி எங்களால் சுற்ற முடியவில்லை. படப்பிடிப்பு அரங்கிலும் சுதந்திரமாக இருக்க முடியவில்லை. இந்த வேதனை எனக்குள் நிறைய இருக்கிறது. வாழ்நாள் முழுதும் முக கவசம் அணியாமல் வாழும் வாழ்க்கை எப்போது வருமோ என்ற ஏக்கம் உள்ளது.” இவ்வாறு அவர் கூறினார்.

வாழ்நாள் முழுதும் இதை அணியாமல் வாழ விரும்புகிறேன் - தளபதி 65 ஹீரோயின் பூஜா ஹெக்டே..! வாழ்நாள் முழுதும் இதை அணியாமல் வாழ விரும்புகிறேன் - தளபதி 65 ஹீரோயின் பூஜா ஹெக்டே..! Reviewed by Tamizhakam on April 22, 2021 Rating: 5
Powered by Blogger.