"நேச்சுரல் ப்யூட்டி... செதுக்கி வச்ச சிலை.." - நிவேதா பெத்துராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் - வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 
'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இப்படத்தைத் தொடர்ந்து, ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்', உதயநிதி ஸ்டாலினின் 'பொதுவாக என் மனசு தங்கம்', விஜய் ஆண்டனியின் 'திமிரு புடிச்சவன்' ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நிவேதா பெத்துராஜ். 
 
இதில், 'டிக் டிக் டிக்' படத்திற்கு மட்டுமே இவரது நடிப்புக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. போலீஸ் அதிகாரியாக அவர் நடித்த 'திமிரு புடிச்சவன்' படத்திற்கு அப்படி ஒன்றும் வரவேற்பு கிடைக்கவில்லை. 
 
இதனால் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய நிவேதா பெத்துராஜுக்கு, அங்கேயும் எதிர்பார்த்த வரவேற்பில்லை. எப்படியாவது, தமிழில் முன்னணி ஹீரோயின் அந்தஸ்தை பெற வேண்டும் என்ற முடிவோடு இருக்கிறார் அம்மணி.
 
இதனால், அடிக்கடி ஹாட் ஃபோட்டோ ஷுட் நடத்தி, கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்த நிலையில் அவ்வப்போது சேலையிலும் புகைப்படம் வெளியிட்டு மயக்கி வருகிறார்.
 
 
தற்போது, வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி', விஷ்ணு விஷாலின் 'ஜெகஜால கில்லாடி', பிரபுதேவாவின் 'பொன் மாணிக்கவேல்' என வரிசையாக நிவேதா பெத்துராஜின் படங்கள் ரிலீசுக்கு வரிசைக்கட்டி நிற்கின்றன. 
 
 
இந்நிலையில், மஞ்சள் நிற உடையில் தன்னுடைய அழகு எடுப்பாக தெரியும் வண்ணம் போஸ் கொடுத்துள்ளஅவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.


இதனை பார்த்த ரசிகர்கள், நேச்சுரல் ப்யூட்டி.. செதுக்கி வச்ச சிலை.. என எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

"நேச்சுரல் ப்யூட்டி... செதுக்கி வச்ச சிலை.." - நிவேதா பெத்துராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் - வர்ணிக்கும் ரசிகர்கள்..! "நேச்சுரல் ப்யூட்டி... செதுக்கி வச்ச சிலை.." -  நிவேதா பெத்துராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் - வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 11, 2021 Rating: 5
Powered by Blogger.