ஓரினச்சேர்க்கை... லெஸ்பியன் பற்றி உங்கள் கருத்து என்ன..? - ப்ரியா பவானி ஷங்கர் அதிரடி பதில்..!

 
பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பணியை ஆரம்பித்து அதன்பிறகு சின்னத்துரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரின் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் சின்னத்திரை நடிகை பிரியா பவானி சங்கர். 
 
சின்னத்திரையில் கலக்கி கொண்டிருந்த நடிகை பிரியா தமிழ் சினிமாவில் மேயாத மான் என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே ஹிட் கொடுத்த நடிகைக்கு தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்கள் வர தொடங்கியது. 
 
அந்த வகையில் நாம் பார்த்தால் களத்தில் சந்திப்போம், ஓ மன பெண்ணே என்ற ஒரு சில திரைப்படங்கள் வெளிவர காத்துக்கொண்டிருக்கிறது. சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ப்ரியா பவானி ஷங்கர். 
 
நடிகர் வைபவ் நடிப்பில் வெளியான மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதன் பின்னர் கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், எஸ்.ஜே.சூர்யாவுடன் மான்ஸ்டர் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
 
இதற்கிடையே எஸ்.ஜே.சூர்யா - ப்ரியா பவானி சங்கர் இருவரும் காதலித்து வருவதாகச் செய்திகள் பரவியது. பலரும் இது தொடர்பாகச் செய்திகளை வெளியிட்டு வந்தார்கள். 'அவர் எனக்குத் தோழி' என்று எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பதிவில் விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்தார். 
 

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய பிரியா பவானியிடம் ஓரினச்சேர்க்கை, லெஸ்பியன் குறித்து உங்கள் கருத்து என்ன..? என்று ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "நீங்கள் யாருடன் காதல் வயப்பட்டீர்களோ.. அவருடன் எவ்வளவு தூரம் நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்பதை பொருத்தது அது" என்று பதிலளித்துள்ளார்.

ஓரினச்சேர்க்கை... லெஸ்பியன் பற்றி உங்கள் கருத்து என்ன..? - ப்ரியா பவானி ஷங்கர் அதிரடி பதில்..! ஓரினச்சேர்க்கை... லெஸ்பியன் பற்றி உங்கள் கருத்து என்ன..? - ப்ரியா பவானி ஷங்கர் அதிரடி பதில்..! Reviewed by Tamizhakam on June 16, 2021 Rating: 5
Powered by Blogger.