தாய் கண்முன்னே காதலனுடன் படுக்கையில்.. கடைசியில் தாய்க்கு நேர்ந்த கதி.. ஒரே சமயத்தில் இரண்டு பேருடன்.. காது கூசும் கொடூரம்

ஹிமாயத்நகர், ராசகொண்டா: ஒரு அமைதியான குடியிருப்பு பகுதியில் நடந்த இந்த உண்மை கதை, கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் மனதை உலுக்கும் ஒரு கொடூரக் குற்றத்தை வெளிப்படுத்துகிறது.

19 வயது கல்லூரி மாணவி கீர்த்தி ரெட்டி, தனது தாய் ராஜிதாவைக் கொலை செய்து, பின்னர் அவர் மாயமானதாக ஒரு வாரம் நாடகமாடிய சம்பவம், காவல்துறையால் அம்பலமாகியுள்ளது.

இந்தக் குற்றத்தின் பின்னணியில், கீர்த்தி மற்றும் கீர்த்தியின் நண்பன் சசி குமார், மற்றும் அவரது காதலன் பால் ரெட்டி ஆகியோரின் கதைகளும் உள்ளன.

கீர்த்திக்கு, பால் ரெட்டியுடனான உறவு குறித்து அறிந்திருந்த சசிகுமார், அவரை மிரட்டி 10 லட்சம் ரூபாய் பறிக்க முயன்றதாக காவல்துறை கூறுகிறது. இந்த மிரட்டலுக்கு அடிபணிந்த கீர்த்தி, நிலத்தை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த 10 லட்சம் ரூபாய் பணத்தை தன்னுடைய தாயிடம் இருந்து திருடுவதற்காக இந்தத் திட்டத்தை தீட்டினார்.

சசி இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தார். மேலும், கீர்த்தி மைனராக இருந்தபோது, பால் ரெட்டி அவரை பாலியல் ரீதியாக தன்னுடைய உடல் தேவைக்காக பயன்படுத்தியுள்ளார். பால் ரெட்டி மீது இருந்த காதலினால் தன்னையே அவனுக்கு விருந்தாக்கியிருக்கிறாள் கீர்த்தி.

ஒரு கட்டத்தில் கர்ப்பமடைந்த கீர்த்தி சசியின் உதவியுடன் அவரது கர்ப்பத்தை கலைத்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.கொலையின் இரவு அக்டோபர் 19, 2019 அன்று, கீர்த்தியின் தந்தை ஸ்ரீனிவாஸ் ரெட்டி, லாரி ஓட்டுநராக வேலைக்காக வெளியூர் சென்றிருந்த சமயத்தில், கீர்த்தி தனது திட்டத்தை செயல்படுத்தினார்.

அன்று இரவு, அப்போது அவர்களுடைய வீட்டுக்குள் உரிமையுடன் உள்ளே நுழைந்த சசிகுமார், உங்க பொண்ணு கீர்த்தி கருக்கலைப்பு செய்தது.. பால் ரெட்டியுடன் உல்லாசமாக இருந்தது.. இவை அனைத்திற்குமே என்னிடம் வீடியோ ஆதாரம் மற்றும் கருக்கலைப்பு செய்ததற்கான மருத்துவ அறிக்கைகள் எல்லாமே என் கையில் இருக்கிறது. 

எனக்கு உடனடியாக 10 லட்சம் ரூபாய் பணத்தை கொடுக்க வேண்டும் மேலும் கீர்த்தி பால் ரெட்டியை திருமணம் செய்த பிறகும் நான் அழைக்கும் போதெல்லாம் என்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் இல்லையென்றால் இந்த அனைத்து ஆதாரத்தையும் இணையத்தில் பதிவேற்றி விடுவேன் என சோபாவில் அமர்ந்து கொண்டு மிரட்டி இருக்கிறான். 

மட்டுமில்லாமல் இப்போது உன் கண் முன்னாலேயே உன் மகளை என்ன செய்கிறேன் பார் என்று ரஜிதாவை நிற்க வைத்து அவருடைய மகள் கீர்த்தியுடன் படுக்கையில் நெருக்கமாக அமர்ந்து கொண்டு உல்லாசமாக இருக்க முயற்சி செய்திருக்கிறான். 

தன் தாய் முன் இதை செய்யலாமா என்ற எந்த யோசனையும் இல்லாமல் சசிகுமாருக்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறாள் கீர்த்தி. இதனால் மிரண்டு போன ரஜிதா சசிகுமாரை கடுமையாக தாக்கி அங்கிருந்து வெளியேறுமாறு சத்தம் போட்டு இருக்கிறார். 

மேலும், மகள் கீர்த்தியையும் வெளியே போ என்று கூறி அடித்துள்ளார். ஆனால் அந்த நேரத்தில் ரஜிதா கனவிலும் நினைத்துப் பார்த்திடாத ஒரு துரோகத்தை சந்திக்கிறார். அவருடைய மகள் கீர்த்தி ரஜிதாவை கீழே தள்ளுகிறார் கீழே விழுந்த தனது தாயின் மார்பு ஏறி அமர்ந்து அவரை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ள, சசி ஒரு துண்டால் ராஜிதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.கொலை செய்யப்பட்ட ராஜிதாவின் உடலை, இருவரும் ஒரு படுக்கையறையில் இழுத்துச் சென்று வைத்தனர்.

மூன்று நாட்களுக்கு படுக்கையில் சடலமாகவே கிடந்துள்ளார் தாய் ரஜிதா. உடலில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியதும், செய்வதறியாமல் திகைத்து போன கீர்த்தி அக்டோபர் 22 இரவு, உடலை ஒரு படுக்கைத்துணியில் சுற்றி, சசியின் எர்டிகா காரில் ராமன்னாபேட்டில் உள்ள ரயில் பாதையில் கொண்டு போய் வீசினர்.

படுக்கைத்துணியையும் கயிறையும் நாகரத்தில் எரித்து சாம்பலாக்கி விட்டனர். தன்னுடைய தாய் காணாமல் போய் விட்டார் என்ற நாடகத்தை அரங்கேற்றி கொலையை மறைக்க முயற்சி செய்திருக்கிறாள் மகள் கீர்த்தி.

தனது தாயின் மொபைல் போனைப் பயன்படுத்தி, பால் ரெட்டியின் தந்தைக்கு அழைத்து, தன்னை ராஜிதாவாகக் காட்டிக்கொண்டு, மருத்துவ பரிசோதனைக்காக நல்லகொண்டா செல்வதாகவும், கீர்த்தியை உங்க வீட்டுல தங்க வச்சிக்கோங்க என்று கூறினார்.

ரஜிதா தான் பேசுகிறார் என்று நம்பிய பால் ரெட்டியின் தந்தை அக்டோபர் 23 முதல் 25 வரை கீர்த்தி பால் ரெட்டியின் வீட்டில் தங்கினார். இதற்கிடையில், தனது தந்தை மற்றும் உறவினர்களிடமும் அம்மா நல்லகொண்டாவுக்கு சென்றுள்ளார் என்று கதை கட்டினார்.

ஸ்ரீனிவாஸ் ரெட்டி வீடு திரும்பியபோது, வீடு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார். தன்னுடைய மகளுக்கு போன் செய்து எங்கே இருக்கிறாய் என்று கேட்ட போது.. நான் பால் ரெட்டி வீட்டில் இருக்கிறேன் என்று கூற.. கீர்த்தியை உடனடியாக திரும்பி வருமாறு அறிவுறுத்தினார். அக்டோபர் 26 அன்று, கீர்த்தி காவல் நிலையத்தில் தனது தாய் மாயமானதாக புகார் அளித்தார்.

காவல்துறை மற்றும் தந்தையின் விசாரணையில் கீர்த்தியின் நடவடிக்கை மற்றும் பதில்கள் அனைத்துமே முன்னுக்கு பின் முரணாக இருந்தன. இறுதியில், கீர்த்தி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

காவல்துறை நடவடிக்கை காவல்துறை சசி மற்றும் கீர்த்தி மீது கொலை வழக்கு பதிவு செய்தது. பால் ரெட்டி மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கருக்கலைப்பு தொடர்பாகவும், சசி மீது பாலியல் வன்கொடுமை மற்றும் சொத்து பறிப்பு தொடர்பாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இருவர் மீதும் POCSO சட்டத்தின் கீழ் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன.இந்தச் சம்பவம், உறவுகளுக்கு இடையேயான நம்பிக்கை மற்றும் பண ஆசைக்கு எவ்வளவு தூரம் மனிதர்களை வழிநடத்தும் என்பதற்கு ஒரு பயங்கரமான உதாரணமாக அமைந்துள்ளது.

Summary: Keerthi Reddy, 19, and friend Shashi Kumar were arrested for murdering Keerthi's mother, Rajitha, in Hyderabad. Blackmailed by Shashi over her relationship with Bal Reddy, Keerthi planned the murder to inherit family property. They killed Rajitha, dumped her body, and fabricated a missing person story.