“தீராத உடலுறவு வெறி.. கணவனின் நண்பருடன் இளம் பெண் உல்லாசம்..” செல்போனில் அந்த மேட்டரை பார்த்த கள்ளக்காதலன்.. அரங்கேறிய விபரீதம்

கிருஷ்ணகிரி மாவட்டம், திருவண்ணாமலை சாலையில் அமைந்திருக்கும் ஜெகதேவி என்ற சிறிய கிராமத்தில் வாழ்ந்தவர் செல்வராஜ். வயது அறுபதைத் தாண்டியிருந்தாலும், லாரி ஓட்டுநராக உழைத்து, தன் குடும்பத்தை கவனித்து வந்தார்.

மனைவி, இரு மகன்கள், ஒரு மகள், பேரன் பேத்திகள் என பரந்த குடும்பத்தின் தலைவராக இருந்தவர், ஒசூருக்கு அருகே வானவில் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

மாதம் இரு முறையோ மூன்று முறையோ ஜெகதேவிக்கு சென்று குடும்பத்தைப் பார்த்து வருவது அவரது வழக்கம்.அதே சமயம், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த குணசேகர் என்ற மேஸ்திரி, ஒசூர் அருகே பேடரபள்ளியில் தங்கி வேலை செய்து வந்தார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு செல்வராஜுக்கும் குணசேகருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறினர். மூன்று ஆண்டுகளுக்கு முன், குணசேகருக்கு, பர்கூர் அருகே நாகல்பட்டியைச் சேர்ந்த காயத்ரி என்ற இளம்பெண்ணுடன் திருமணம் நடந்தது.

திருமணத்திற்குப் பிறகு, குணசேகரும் காயத்ரியும் பாலக்கோட்டில் உள்ள குணசேகரின் வீட்டில் வாழ்ந்தனர். குணசேகர் ஒசூர், கிருஷ்ணகிரி, காரிமங்கலம், தர்மபுரி போன்ற பகுதிகளுக்கு வேலைக்குச் சென்று வந்தார்.

நண்பர்களாக இருந்த செல்வராஜும் குணசேகரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். குணசேகர் வேலைக்குச் சென்றிருக்கும் நேரங்களில், அவரது மனைவி காயத்ரி செல்வராஜின் அழைப்புகளுக்கு பதிலளிப்பார்.

ஆரம்பத்தில், "கணவர் இல்லை" என்று கூறி முடித்த பேச்சு, பின்னர் நலம் விசாரிப்பாக மாறியது. ஒரு நிமிட உரையாடல், நாளடைவில் மணிக்கணக்காக நீடித்தது. இந்த நட்பு, மெல்ல மெல்ல திருமணம் தாண்டிய உறவாக உருமாறியது. குணசேகர் வேலைக்கு சென்றிருக்கும் நேரங்களில், காயத்ரியை ஒசூரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து, செல்வராஜ் உல்லாசமாக இருந்துள்ளார்.

ஒரு ஆண்டுக்கு முன்பு, காயத்ரிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு, காயத்ரி தன் தாய் வீடான நாகல்பட்டிக்கு வந்தார். ஆனால், மீண்டும் கணவர் வீட்டிற்கு செல்லாமல், குணசேகரையும் அங்கேயே அழைத்து, அவரை அந்தப் பகுதியில் மேஸ்திரி வேலைக்கு அனுப்பி வைத்தார்.

இதற்கிடையில், அடங்காத உடலுறவு வெறியில் இருந்த காயத்ரி வாரத்தில் இரு முறையாவது ஒசூருக்கு சென்று, செல்வராஜுடன் உல்லாசமாக இருந்து வருவதை வாடிக்கையாக்கியுள்ளார்.

2025 செப்டம்பர் 1-ஆம் தேதி, குணசேகர் வழக்கம்போல வேலைக்குச் சென்றுவிட, காயத்ரி தன் ஒன்றரை வயது குழந்தையுடன், "குழந்தைக்கு துணி வாங்க கிருஷ்ணகிரி செல்கிறேன்" என்று பெற்றோரிடம் கூறிவிட்டு, செல்வராஜின் வீட்டிற்கு வந்தார்.

அங்கு, வழக்கம்போல இருவரும் உல்லாசமாக இருந்தனர். ஆனால், அன்று செல்வராஜ், காயத்ரியின் செல்போனில் உள்ள வாட்ஸ்அப் செய்திகளையும் அழைப்பு பதிவுகளையும் பார்த்து, அவர் இன்னும் சிலருடன் தொடர்பில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

நண்பனின் மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சந்தேகத்தால் ஆத்திரமடைந்த செல்வராஜ், காயத்ரியை சுவற்றில் தள்ளி, தலையில் பலத்த காயம் ஏற்படுத்தினார்.

***உண்மையான கணவன் அப்பாவியாக குடும்பத்தின் எதிர்காலத்திற்கு பணம் சேர்க்க உழைக்க சென்று விட்ட நிலையில், நண்பனின் மனைவியை கவர்ந்து வைத்துக்கொண்டிருக்கும் கயவன் செல்வராஜ் கள்ளக்காதலியின் நடத்தையில் சந்தேகம் கொண்டிருக்கிறான். காலக்கொடுமையை பாத்திங்களா நண்பர்களே..!

மயக்கமடைந்த காயத்ரியை, தலையணையால் முகத்தில் அழுத்தி, கொடூரமாக கொலை செய்தார்.இதனைப் பார்த்து குழந்தை அழுது கொண்டிருக்க, செல்வராஜ் அந்தக் குழந்தையை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு பெண்ணிடம் கொடுத்து, "குழந்தை அழுது கொண்டே இருக்கிறது, கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு, தன் வீட்டிற்கு சென்று தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

குழந்தையின் அழுகை நிற்காமல் தொடர, பக்கத்து வீட்டுப் பெண் குழந்தையை திருப்பிக் கொடுக்க செல்வராஜின் வீட்டுக் கதவைத் தட்டினார். ஆனால், யாரும் திறக்கவில்லை. சந்தேகமடைந்த அவர், காவல்துறையை அழைத்தார். ஒசூர் அட்கோ காவல் நிலைய போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, காயத்ரி கொலை செய்யப்பட்டு, செல்வராஜ் தூக்கில் தொங்கும் நிலையில் இருந்தனர்.

இருவரது உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.விசாரணையில், அக்கம்பக்கத்தினர் செல்வராஜ் அடிக்கடி பல பெண்களை தன் வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும், மதுபோதையில் இருந்ததாகவும் தெரிவித்தனர். ஆனால், அந்த ஒன்றரை வயது குழந்தையின் அழுகையை நிறுத்த முடியவில்லை.

தாயின் மரணத்தை உணராமல், அந்தக் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்தது, பார்ப்பவர்களின் இதயத்தை உருக்கியது.நண்பனின் இளம் மனைவியுடன் திருமணம் தாண்டிய உறவு வைத்து, சந்தேகத்தால் கொலை செய்து, இறுதியில் தற்கொலை செய்து கொண்ட செல்வராஜின் செயல், ஒரு குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியது.

ஆசையில் தொடங்கிய உறவு, ஆதங்கத்தில் முடிந்து, ஒரு குழந்தையையும், குடும்பத்தையும் நிர்கதியாக்கிய நிறுத்திய இந்த சம்பவம், குற்றம் எப்போதும் கேடு தரும் என்பதை மீண்டும் நிரூபித்தது.

Summary: Selvaraj, a lorry driver from Jegadevi, befriended Gunasekar, a mason. Selvaraj developed an illicit relationship with Gunasekar's wife, Gayathri. After a heated argument over her phone messages, Selvaraj killed Gayathri and later committed suicide, leaving her child orphaned.