இந்த படத்தில் நடிக்கும் போது என்னுடைய உள்ளாடைக்குள் இதை வைத்தார்கள்.. கபாலி பட ஹீரோயின் பகீர்..!

நடிகை ராதிகா ஆப்தே சமீபத்திய பேட்டி ஒன்றில், தென்னிந்திய திரைப்படத் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலின பாகுபாடு மற்றும் பொருளாக்கம் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

'கபாலி' படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து பிரபலமான ராதிகா, தனது தொழில்முறை வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

SCREEN இதழின் Creator X Creator தொடரில் அளித்த பேட்டியில், ராதிகா ஆப்தே கூறியதாவது:

"எனது ஆரம்ப காலத்தில் சில தென்னிந்திய படங்களில் நடித்தேன். அப்போது பணம் தேவைப்பட்டதால் அவற்றை ஏற்றேன். ஆனால் சில செட்களில் மிகவும் கடினமான அனுபவங்களைச் சந்தித்தேன். ஒரு படப்பிடிப்பின் போது நான் செடில் தனியாக இருந்த ஒரே பெண். சிறிய ஊரில் ஷூட்டிங் நடந்தது.

எனக்கு சொந்த டீம் கொண்டு வர அனுமதி இல்லை. என்னைச் சுற்றி ஆண்கள் மட்டுமே. அப்போது எனது மார்பு மற்றும் பின்னழகில் அதிக பேடிங் போடச் சொன்னார்கள். சிலிக்கான் பேடுகளை கொடுத்து என்னுடைய உள்ளாடைக்குள் வைத்துக்கொண்டு என்னுடைய அழகுகளை எடுப்பாக காட்ட கட்டாயப்படுத்தினார்கள்.

முன்னழகை பெரிதாக காட்ட நடிகைகள் பயன்படுத்தும் பேடு

'அம்மா, இவ்ளோ பேடிங்கா..!' என்று தொடர்ந்து கேட்டார்கள். நான் 'எத்தனை அதிகமாக? எவ்வளவு ரவுண்டாக்க வேண்டும்?' என்று கேட்டேன். இது எனக்கு மிகவும் அசௌகரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.

பின்னழகை பெரிதாக காட்ட நடிகைகள் பயன்படுத்தும் பேடு

இதுபோன்ற அனுபவங்கள் டிராமாடிக் ஆக இருந்தன. எந்தப் பெண்ணும் இதுபோன்ற சூழலில் இருக்க வேண்டாம் என்று விரும்புகிறேன்." ராதிகா மேலும் கூறுகையில், தென்னிந்திய திரைப்படங்களில் பெண்களை கவர்ச்சிப் பொருளாக மட்டுமே பயன்படுத்துவதாகவும், சிலர் இதை வழக்கமாக்கியிருப்பதாகவும் விமர்சித்தார்.

அதேநேரம், தென்னிந்திய சினிமா முழுவதையும் பொதுவாக்க விரும்பவில்லை என்றும் தெளிவுபடுத்தினார். ராதிகா ஆப்தே 'கபாலி', 'லெஜண்ட்', 'லைன்' உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ஹிந்தி திரைப்படங்கள், வெப் சீரிஸ்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அவரது சமீபத்திய படம் 'சாலி மொஹப்பத்' ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. இந்த வெளிப்படை ராதிகா ஆப்தேவின் பேச்சு, திரைத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை மீண்டும் விவாதத்திற்கு கொண்டு வந்துள்ளது.

Summary : Actress Radhika Apte revealed shocking experiences from early South Indian film shoots, where she was pressured to use padding to enhance her private parts for no narrative reason. Alone on set without a team, she refused, questioning the objectification of women and highlighting how some treat female actors merely as glamour objects.