கடைசியா ஒரு தடவை.. வலிக்குது விடுடா.. நடு காட்டில் காதலியின் ஆடையில் காதலன் செய்த அசிங்கம்.. வலியில் துடி துடித்த காதலி..

தூத்துக்குடி, ஜனவரி 7 : கோவில்பட்டி அருகே கஸ்தூரிரங்காபுரம் காட்டுப்பகுதியில் 19 வயது இளம்பெண் உமா கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல் தகராறில் ஆத்திரமடைந்த காதலன் ராஜேஷ் (25), உமாவின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தளவாய்புரத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகள் உமா (19). இவர், தூத்துக்குடி மாவட்டம் பாறைப்பட்டி அருகே உள்ள தனியார் கோச்சிங் சென்டரில் காவலர் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்தார். அதே சென்டரில் தென்காசி மாவட்டம் குளக்காட்டாக்குறிச்சியைச் சேர்ந்த ராஜேஷும் பயிற்சி பெற்று வந்தார்.

இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், பின்னர் காதலாக மாறியது. உமாவுக்கு இன்ஸ்டாகிராமில் வேறொரு ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ராஜேஷ் உமாவை கண்டித்துள்ளார். இதனால் அவ்வப்போது இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு வந்தது.

கடந்த ஒரு வாரமாக இருவருக்கும் கடும் தகராறு நீடித்தது. உமா, உறவை முறித்துக்கொள்ள விரும்பியதாகத் தெரிகிறது. இந்நிலையில், ஜனவரி 6-ம் தேதி மாலை ராஜேஷ் தனது பைக்கில் உமாவை அழைத்துச் சென்று, கஸ்தூரிரங்காபுரம் காட்டுப்பகுதியில் நிறுத்தினார்.

அங்கு இருவரும் பேசியபோது, ராஜேஷ் உமாவை திருமணம் செய்ய வலியுறுத்தியுள்ளார். ஆனால் உமா மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ், உமாவின் துப்பட்டாவைப் பறித்து கழுத்தை இறுக்கிக் கொலை செய்ததாக போலீசார் கூறுகின்றனர்.

கொலை செய்த பிறகு, உமா மயக்கமடைந்துவிட்டதாக நினைத்த ராஜேஷ், 108 ஆம்புலன்ஸ் மற்றும் அருகிலுள்ள வெம்பக்கோட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பார்த்தபோது உமா ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கழுகுமலை போலீசார், உடலை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜேஷை கைது செய்து விசாரணை நடத்தியதில் கொலைக்கான காரணங்கள் தெரியவந்தன.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு விசாரணை தொடர்கிறது.

Summary : In Thoothukudi district near Kovilpatti, a 19-year-old woman named Uma from Rajapalayam was found unconscious in a forest area at Kasthurirangapuram. She had been studying at a private coaching centre in Paraiyapatti for police recruitment. 

Her friend Rajesh, 25, from Tenkasi district, took her there on his bike to talk. During the conversation, a dispute arose over their relationship, leading to her death by strangulation with her dupatta. Rajesh informed the ambulance and police, thinking she had fainted. Police investigation revealed the details and arrested him.