அரூர் அருகேயுள்ள சிறிய கிராமத்தில், இன்று காலை வளைகாப்பு விழா நடைபெற இருந்த நிலையில், ஒன்பது மாத நிறைமாத கர்ப்பிணியான இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் (எ) கார்த்திக் என்பவரின் மனைவி ஸ்நேகா (21). கடந்த 11 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ராஜேஷ் சேலத்தில் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். ஸ்நேகா தற்போது முழு கர்ப்ப காலத்தில் இருந்தார்.

ஸ்நேகாவின் மாமியார் லட்சுமி அம்மாளுக்கும், ஸ்நேகாவின் அத்தையின் கணவர் முருகன் என்பவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மாமியாரும், அத்தையின் கணவரும் உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் உல்லாசமாக இருப்பதை பார்த்து அதிர்ந்தார்.
இதை பார்த்து அதிர்ந்து போன ஸ்நேகா, தனது அத்தை சரோஜாவிடம் மனம் திறந்து சொல்லியிருந்தார்.இதை அறிந்த முருகனும் லட்சுமி அம்மாளும் ஸ்நேகாவைப் பழிவாங்கும் நோக்கத்தில் இருந்ததாகக் கிராமத்தினர் கூறுகின்றனர்.
நேற்றிரவு, ஸ்நேகாவிற்கு இன்று காலை வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில், அவரது வீட்டில் திடீரென அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக கீழப்பாளையம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு, கீழப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பிரேதப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தனர்.
இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, ஸ்நேகாவின் தந்தை முருகேசன் அளித்த புகாரின் பேரில், கொலையா? தற்கொலையா? என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஸ்நேகாவின் கணவர் ராஜேஷ் உட்பட அவரது குடும்பத்தினர் எவரும் இதுவரை மருத்துவமனைக்கு வரவில்லை என்பது உறவினர்களிடையே மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று வளைகாப்பு நடைபெற இருந்த ஒரு இளம் கர்ப்பிணியின் இந்த மர்ம மரணம் கிராமம் முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
உறவினர்கள் சிலர் கோபத்துடன் கூறும்போது, “இந்த மரணத்திற்கு முக்கிய காரணம் சிவராம், லட்சுமி அம்மாள், பிரியா, முருகன், ராஜேஷ் (கார்த்திக்) ஆகிய ஐந்து பேர்தான்” என்று குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் ஆழமான விசாரணை நடத்தி வருவதால், விரைவில் உண்மை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Summary in English : In a village near Arur, a 21-year-old pregnant woman in her ninth month was found hanging at home the night before her valaikappu ceremony. Police recovered the body for post-mortem and are investigating the cause based on a complaint from her father. Her husband and family have not visited the hospital.


