மாணவன் கையில் நாப்கினை கொடுத்த ஆசிரியை! இறுதியில் அரங்கேறிய கொடூரம்! பாத்ரூமில் சக ஆசிரியை அசிங்கம்!

ராஜஸ்தானின் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய தனியார் பள்ளியில் நடந்தது இந்தக் கதை. அங்கு 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ப்ரியா, 13 வயது. ஒரு நாள் வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது, ப்ரியாவுக்கு திடீரென வயிற்று வலி தொடங்கியது. அவள் மிகவும் சங்கடப்பட்டாள். ரத்தம் வந்துவிட்டது என்று உணர்ந்தாள். முதல் முறை என்பதால் பயந்து போனாள். பயத்தில் கத்தினாள்.

பதறிப்போன சக மாணவ, மாணவிகள் கிளாஸ் லீடர் சந்தோஷிடம் இதனை கூறினர். உடனே, ஆசிரியர்களின் அறைக்கு ஓடினான் சந்தோஷ். தன் வகுப்பு ஆசிரியையான மிஸ் ரேகா-விடம் மெதுவாகச் சென்று, "மேடம்... பிரியா... பெரிய பொண்ணு ஆகிட்டா போல.." என்று ஹஸ்கி குரலில் கேட்டாள்.

மிஸ் ரேகா ஒரு நல்ல ஆசிரியை. மாணவிகளுக்கு ஒரு தாய் போல நடந்து கொல்ப்பவர். அவர் உடனே பையிலிருந்து ஒரு பேக்கெட் சானிடரி நாப்கினை எடுத்துக் கொடுத்தார். "போய் ப்ரியாகிட்ட கொடு.." என்று ஆதரவாகச் சொன்னார்.

ஆனால், இந்தக் காட்சியை ஸ்டாஃப் ரூமின் பின்னால் உட்கார்ந்திருந்த மற்றொரு ஆசிரியை, மிஸ் சீமா பார்த்தாள். சீமா – பள்ளியில் 'ஸ்ட்ரிக்ட்' என்று பெயர் பெற்றவர். அவருக்கு ரேகா மீது எப்போதும் ஒரு பொறாமை. ரேகா மாணவர்களிடம் அன்பாக இருப்பது, அவர்களுக்கு உதவுவது – இவையெல்லாம் சீமாவுக்கு எரிச்சலூட்டும்.

மாலை பள்ளி முடிந்த பிறகு, சீமா ரேகாவை தனியாக அழைத்துச் சென்று, "ஒரு மாணவனிடம் நாப்கின் கொடுக்கும் அளவுக்கு பழகுறதெல்லாம் தப்பு. இது பள்ளியின் கலாசாரத்துக்கு எதிரானது. நான் இதை பிரின்சிபாலுக்கு சொல்றேன்" என்று மிரட்டினாள்.

ரேகா அமைதியாக, "மாணவி தவிக்கிற சமயத்தில் உதவினேன். உங்க பொண்ணா இருந்தாலும் நான் இதை தான் செய்திருப்பேன். ஸ்டாஃப் ரூமுக்கு கிளாஸ் லீடர் தவிர வேறு எந்த மாணவ, மாணவிகளும் வரக்கூடாது என்ற பள்ளியின் விதிமுறை காரணமாக தான் சந்தோஷ் வந்தான். நேரம் கடத்த வேண்டாமே என அவனிடம் கொடுத்து விட்டேன். அதுல தப்பு என்ன? உங்க வேலையை பாத்துகிட்டு கிளம்புங்க.." என்று சக ஆசிரியைகள் முன்பு கோபமாக பேசினார்.

ஆனால், சீமாவின் மனதில் வேறு ஏதோ இருந்தது. அவள் ரேகாவை வெறுத்தாள். ரேகாவை அசிங்கப்படுத்த  வேண்டும் என முடிவெடுத்தால். சில நாட்கள் கழித்து, ரேகா பயன்படுத்தும் பாத்ரூமில் ரகசிய கேமராவை வைத்தாள்.

இதற்கு, இன்னொரு ஆசிரியையும் உடந்தை. ரகசிய கேமராவை எடுப்பதற்க்காக எல்லோரும் பள்ளியில் இருந்து கிளம்பிய பிறகு கடைசியாக புறப்பட்டாள் சீமா. மாலை மங்கி வானம் இருள் சூழ்ந்து விட்டது.

யாரும் பார்க்காத நேரத்தில், பள்ளி வளாகத்தில் உள்ள ஸ்டாஃப் பாத்ரூமுக்குள் சென்றாள். யார் அது இந்த நேரத்தில், ஸ்டாஃப் பாத்ரூமுக்குள்ள போறாங்க. சந்தேகப்பட்ட ஸ்கூல் வாட்ச்மென், கையில் வைத்திருந்த தடியை இறுக்கமாக பிடித்துக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான்.

திடீரென ஒரு நிழல். சீமா திரும்பிப் பார்த்தாள். அது பள்ளியின் வாட்ச்மேன் குமார். அவன் சீமாவை பல மாதங்களாக வேறு கண்ணோட்டத்தில் பார்த்து வந்தான். அன்று அவன் மது குடித்திருந்தான். "மேடம்... நீங்க இந்த நேரத்துல தனியா இருக்கீங்க... கையில என்ன வச்சிருக்கீங்க.. " என்று அவன் நெருங்கினான்.

சீமா அது வந்து.. என எதையோ மழுப்ப முயன்றாள். ஆனால், வாட்ச்மேன் குமார் சீமா டீச்சர் கையில் இருந்த பொருளை வாங்கி பார்த்த போது அதிர்ச்சி! இது என்ன கேமரா மாதிரி இருக்கு. பாத்ரூம்ல கேமரா வச்சீங்களா..? மேனேஜ்மென்ட்-ல சொல்லவா..? என்று சீமாவிடம் தவறான கண்ணோட்டத்துடன் நெருங்கினான் குமார்.

இதை கண்டு அதிர்ந்து போன சீமா, அருகில் இருந்த இரும்பு பைப்பை எடுத்து குமார் தலையில் பலமாக அடித்தாள். ரத்தம் வழிய கீழே விழுந்தான். சீமா அதிர்ச்சியில் நின்றாள். அவள் செய்தது கொலை. அவள் உடனே அங்கிருந்து ஓடினாள். ஆனால் அவள் மறந்துவிட்டாள் – பாத்ரூம் கதவு திறந்திருந்தது. அங்கிருந்த, இருந்த CCTV கேமரா எல்லாவற்றையும் பதிவு செய்திருந்தது.

மறுநாள் காலை, பள்ளியில் பரபரப்பு. வாட்ச்மேன் குமார் பாத்ரூமில் ரத்தத்தில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸ் வந்தது. CCTV-யை பார்த்த போலீஸ் அதிர்ந்தது. கொலையாளி – மிஸ் சீமா!

சீமா தப்பிக்க முயன்றாள். ஆனால் அவள் வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டாள். விசாரணையில் தெரிந்தது – அவள் ரேகாவை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில், ரேகா பயன்படுத்தும் பாத்ரூமில் ரகசிய கேமரா வைத்ததும். ஆனால் தவறுதலாக குமார் வந்து விட்டான். கோபத்தில், பயத்தில், அவள் கொலை செய்து விட்டாள்.

இறுதியில், அந்த சிறிய நாப்கின் உதவி தொடங்கிய சங்கிலி – பொறாமை, மிரட்டல், அசிங்கம், கொலை என்று முடிந்தது.

பள்ளி ஒரு வாரம் மூடப்பட்டது. மாணவர்கள் அதிர்ச்சியில் இருந்தனர். ரேகா தன் உதவியை நினைத்து அழுதாள். "ஒரு சின்ன உதவி... இவ்வளவு பெரிய கொடூரத்துக்கு வழிவகுத்ததா?" என்று வருத்தப்பட்டாள்.

உண்மை என்னவென்றால் – மனித மனதின் இருள், எவ்வளவு சிறிய தீப்பொறியிலிருந்து பெரிய தீயாக மாறும் என்பதை அந்த நாப்கின் சம்பவம் காட்டியது.

Summary : In a Rajasthan school, a teacher helped a student by providing a sanitary napkin. This act sparked jealousy in another teacher, leading to conflict. Later, a tragic incident occurred in the staff bathroom involving a staff member, resulting in severe consequences and the school's temporary closure.