கொல்கத்தா: திருமணம் முடிந்த முதல் இரவிலேயே கணவனின் கொடூரமான கேள்வி ஒரு பெண்ணின் வாழ்க்கையை சூனியமாக்கியுள்ளது. இந்த சம்பவம் சமூகத்தில் பெண்களின் கன்னித்தன்மை குறித்து இன்னும் நிலவும் பிற்போக்கான எண்ணங்களையும், ஆணாதிக்க மனநிலையையும் மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தம்பதியினரின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. எனவே, கற்பனையாக 'ராகுல்' என்ற பெயரை கணவருக்கும், 'அனன்யா' என்ற பெயரை மனைவிக்கும் வைத்து குறிப்பிடலாம்.

மென்பொருள் பணியாளர் ராகுல் என்பவருக்கும், மாநில அளவிளான டென்னிஸ் வீராங்கனையான அனன்யா என்பவருக்கும் திருமணம் நடந்தது.
முதல் இரவுக்கு சென்ற ராகுல் - அனன்யா தம்பதியினர் உடலுறவில் ஈடுபட்டபோது, ராகுல் திடீரென அனன்யாவிடம், "உனக்கு இதில் முன்பு அனுபவம் இருக்கிறதா? இதுதான் உனக்கு முதல் முறை என்றால் உன் உறுப்பில் இரத்தம் வந்திருக்க வேண்டுமே. ஆனால், உனக்கு அது வரவே இல்லையே?" என்று கேட்டுள்ளார்.
இந்த கேள்வி அனன்யாவுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. என்ன கேள்வி கேக்குறீங்க..? இதுக்கு நான் என்ன விளக்கம் கொடுப்பேன்.. என்ன சொன்னாலும் அது அர்த்தமற்றதாகவும், நான் என் கன்னித்தன்மையை நிறுப்பீக்க வாதாடுவது போலவே அமையும்.. என்னை விடுங்கள் என ஆடைகளை உடுத்திக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.
பெற்றோர்கள், உறவினர்கள் முகத்தில் அதிர்ச்சி. பேச்சுவார்த்தை, வாக்குவாதமாக மாறியது, எல்லோரும் மாப்பிள்ளைகிட்ட இப்படியெல்லாம் நடந்துக்க கூடாது, அப்புறம் பேசிக்கலாம் என்ற தொனியிலேயே பேசினார்கள்.. இதனால், மேலும் மனமுடைந்தாள் அனன்யா. அடுத்த நிமிடமே அறைக்குள்ச என்று அறையை பூட்டிக்கொண்டு அவர் தவறான முடிவுக்கு முயன்றார்.
அனைவரும் சேர்ந்து கதவை உடைத்து அனன்யாவை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அனன்யா, இந்த சம்பவத்தால் ஏற்பட்ட மன உளைச்சலால் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.
பின்னர், விவரம் தெரிந்தவர்கள் கொடுத்த ஆலோசனைப்படி உண்மை தெரிந்து கொண்ட ராகுல், கடைசியா காவல் நிலையத்தில் தன் மனைவியின் காலில் விழுந்து, "தெரியாமல் கேட்டு விட்டேன், மன்னித்து விடு" என்று மன்றாடினார். ஆனால் அனன்யா, "காலம் முழுதும் தனிமையில் இருந்தாலும் இருப்பேனே தவிர,உன்னைப் போன்ற ஒரு மனிதனுடன் இனி சேர்ந்து வாழ மாட்டேன், " என்று கூறி, அவரை விட்டுப் பிரிந்து தன் பிறந்த வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த சம்பவம் கொல்கத்தாவின் ஒரு பகுதியில் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு பெண்ணின் உடல் ரத்தம் வருவது கன்னித்தன்மையின் அடையாளம் என்ற புரிதல் இன்னும் பல ஆண்களிடம் நிலவுவதை இது தெளிவாகக் காட்டுகிறது.
மருத்துவ ரீதியாகவே, பெண்ணின் கன்னி சவ்வு (hymen) அமைப்பு ஒவ்வொருவருக்கும் வேறுபடும்; சிலருக்கு பிறப்பிலேயே இல்லாமலிருக்கலாம், சிலருக்கு விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றால் கிழிந்திருக்கலாம், அதிலும், அனன்யா ஒரு விளையாட்டு வீராங்கனை.
இந்நிலையில், உடலுறவின்போது இரத்தம் வராமலும் போகலாம். இதை 'கன்னித்தன்மை சோதனை' என்று நம்புவது அறிவியல் பூர்வமற்றது மற்றும் பெண்களை அவமதிக்கும் செயல் ஆகும்.
இத்தகைய சம்பவங்கள் பெண்களின் மன ஆரோக்கியத்தை பாதிப்பதோடு, திருமண பந்தத்தையும் சிதைக்கின்றன. திருமணம் என்பது நம்பிக்கை, மரியாதை, புரிதல் ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர, முதலிரவில் ரத்தம், கன்னி சவ்வு போன்றவற்றை அளவுகோலாக வைத்து தீர்ப்பளிப்பதற்கல்ல.
சமூகமும், குடும்பங்களும், இளைஞர்களும் இதுபோன்ற பிற்போக்கு நம்பிக்கைகளை கைவிட்டு, பெண்களை சமமாக மதிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டிய தேவை இன்றியமையாதது. இல்லையெனில், இன்னும் பல அனன்யாக்கள் தங்கள் வாழ்க்கையை இழக்க நேரிடும்.
(குறிப்பு: இந்தச் செய்தி சமூக விழிப்புணர்வுக்காக எழுதப்பட்டது. உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கற்பனைப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.)
Summary in English : In Kolkata, a newly married couple faced a misunderstanding on their first night when the husband questioned the absence of expected physical signs. This led to emotional distress, the wife attempting to harm herself, police involvement, and eventual separation as she returned to her parental home.

