புருஷன் கூட எதுக்கு..? 36 வயது பெண் தாளாளருக்கு 29 வயது இன்ஸ்டா நண்பனால் அரங்கேறிய கொடூரம்! சென்னையில் பயங்கரம்!

சென்னை: தாம்பரம் அருகே மேடவாக்கம் சின்மயா நகர் பகுதியைச் சேர்ந்த 36 வயது தனியார் கிட்ஸ் பள்ளி முதல்வர் ஒருவரை, இன்ஸ்டாகிராம் நண்பரான 29 வயது கட்டுமான தொழிலதிபர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷாலினி (பெயர் மாற்றப்பட்டது) என்ற அந்தப் பெண், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானவர். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து, பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அவர் தனியார் பள்ளியில் முதல்வராகப் பணியாற்றி வந்தார்.

2021-ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் மேடவாக்கம் பெல் நகர் பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஹரிகிருஷ்ணன் வெளிநாட்டில் வேலை செய்து வந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு திரும்பியுள்ளார். இருவரும் இன்ஸ்டாகிராம் மற்றும் நேரில் சந்தித்து நண்பர்களாகப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் ஷாலினி தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டார். இதைப் பார்த்த ஹரிகிருஷ்ணன் கோபமடைந்து, தொலைபேசியில் தொடர்புகொண்டு “உன் புருஷன் கூட இருக்குற போட்டோ எதுக்கு ஸ்டோரியில் போட்டு? அதை டெலிட் பண்ணு” என ஆபாசமாகத் திட்டியுள்ளார்.

இதற்கு ஆத்திரமடைந்த ஷாலினி, “என் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை நான் போட்டால் உனக்கு என்ன பிரச்சினை?” எனக் கேட்டு அழைப்பைத் துண்டித்தார். இதில் மேலும் ஆத்திரமடைந்த ஹரிகிருஷ்ணன், ஷாலினி வீட்டுக்கு நேரில் சென்று அவரை வெளியே அழைத்து, “உன்னிடம் பேச வேண்டும்” எனக் காரில் ஏறச் சொன்னார்.

காரில் அமர்ந்ததும் ஹரிகிருஷ்ணன் ஷாலினியின் கழுத்தை நெரித்து, வாயில் அடித்து, பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த பெண் கத்தி கூச்சலிடவே, அவரது தந்தை வெளியே வந்தார். உடனே ஹரிகிருஷ்ணன் காரில் தப்பி ஓடினார்.

இச்சம்பவம் தொடர்பாக ஷாலினி சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் ஹரிகிருஷ்ணன் மீது பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்தச் சம்பவம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்து மீண்டும் பேச்சை எழுப்பியுள்ளது.

Summary in English : A 36-year-old school principal from Medavakkam, Chennai, filed a complaint after her Instagram friend visited her home and allegedly assaulted her inside his car following an argument over a family photo she posted online. Police arrested the 29-year-old construction businessman and registered a case under relevant sections.