நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் மனைவியும், தயாரிப்பாளருமான லதா ரஜினிகாந்த் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், தமிழ் சினிமா ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தும் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் தற்போது இணைந்து நடிக்கும் படத்தைப் பற்றி பேசிய லதா, "கமல்ஹாசன் ரஜினி இருவரும் சேர்ந்து நடிப்பதைப் பார்க்கும்போது எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் சேர்ந்து நடித்தார்கள். தற்போது மிகப்பெரிய உயரத்தை அடைந்திருக்கிறார்கள். இப்போது அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கிறார்கள்.
இது ஒரு மிகப்பெரிய விருந்து சினிமா ரசிகர்களுக்கு. அவர்கள் எதிர்பார்த்த ஒரு விஷயம். நானும் இப்படி ஒரு படத்திற்கு நெடுநாட்களாக காத்திருந்தேன். ரசிகர்களைப் போல நானும் அந்த படத்தைப் பார்ப்பதற்காக காத்திருக்கிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஜினிகாந்த் நடிப்பில் 2014-ஆம் ஆண்டு வெளியான 'கோச்சடையான்' படம் தற்போது ஏ-டைப் (மேம்படுத்தப்பட்ட) வடிவில் மீண்டும் உருவாக்கப்பட்டு திரைக்கு வர இருப்பதாகவும் கூறியுள்ளார்.
"கோச்சடையான் படம் ஏ டைப் மூலம் மீண்டும் உருவாக்கப்பட்டு திரைக்கு வர இருக்கிறது. விரைவில் அந்த படம் திரைக்கு கொண்டு வருவதற்கான அனைத்து வேலைகளும் செய்து கொண்டிருக்கிறோம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்திய லதா, "என்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறார். அதற்கு நான் எந்த அளவுக்கு துணையாக இருக்க முடியுமோ இருக்கிறேன்.
ஒரு தாயாக இதை சொல்கிறேன். நம்முடைய குழந்தைகள் ஒரு முயற்சி எடுக்கும்போது அதற்கு துணையாக நின்று அவர்களுக்கான பாதையை உருவாக்கி கொடுப்பது நம்முடைய கடமை. ஒரு தாயாக நான் என்னுடைய மகனின் அனைத்து முயற்சிகளுக்கும் துணையாக இருக்கிறேன்.
கண்டிப்பாக அவன் ஒரு மிகப்பெரிய சாதனையை இந்த துறையில் தனி அடையாளத்தை பதிய வைப்பார் என்று நம்புகிறேன். ஆசிர்வாதம் செய்கிறேன்" என்று உணர்ச்சிபூர்வமாகக் கூறியுள்ளார்.
ரஜினி-கமல் இணைவு தமிழ் சினிமாவில் 47 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் வரலாற்று நிகழ்வாக உள்ள நிலையில், லதா ரஜினிகாந்த்தின் இந்த பேட்டி ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary : Latha Rajinikanth shared in an interview that she is thrilled about Rajinikanth and Kamal Haasan teaming up again after nearly fifty years, calling it a special gift for cinema fans. She is eagerly waiting to watch the film. Kochadaiiyaan is being re-released in enhanced format, and she fully supports her children's efforts in the film industry.

