ஜார்கண்ட் மாநிலத்தின் செலரி கிராமத்தில், அமைதியான ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தான் அரவிந்த். அவன் 35 வயது, உள்ளூர் ஒரு சிறிய தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தான்.
அவனுடைய மனைவி நித்யா, 32 வயது, அருகிலுள்ள பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினாள். இருவருக்கும் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியிருந்தன. வெளியில் பார்க்கும்போது அவர்களின் வாழ்க்கை சராசரியாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் புயல் சுழன்று கொண்டிருந்தது.

அரவிந்துக்கு சந்தேகம் இருந்தது. தன் மனைவி நித்யாவின் நடத்தை சமீபகாலமாக மாறியிருப்பதை அவன் உணர்ந்தான். இரவுகளில் அவள் தனியாக போன் பேசுவது, சிரிப்பது, பிறகு திடீரென முகம் மாறுவது... இவை எல்லாம் அவனை உறுத்தியது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, தன் தம்பி கார்த்திக்கிடம் அழுதபடி சொன்னான் அரவிந்த்: “டே, உன் அண்ணி நித்யா வேறொரு ஆளுடன் தொடர்பில் இருக்கிறாள் என்று எனக்கு சந்தேகமா இருக்கு. என்னால் தாங்க முடியவில்லை.” என்று கூற, அப்படி எல்லாம் இருக்காதுனா நீங்க மனசை போட்டு குழப்பிக்காதிங்க, எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம் என நம்பிக்கை கொடுத்தான்.
ஆனால், அந்த இரவு, அதிகாலை நான்கு மணி சுமாருக்கு, அந்த வீட்டில் இருந்து ஒரு மிகப்பெரிய ஓலம் எழுந்தது. நித்யா தன் பெற்றோருக்கும், அரவிந்தின் பெற்றோருக்கும் போன் செய்து அழுதாள்: “அம்மா... அப்பா... அரவிந்த் இறந்துவிட்டார்! மூச்சு விட முடியலன்னு சொன்னார்.. என்ன ஏதுன்னு பாக்குறதுக்குள்ள இறந்துட்டார்.. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல... உடனே வாங்க!” அதிகாலை 5 மணி, பதறியடித்து ஓடி வந்தனர் பெற்றோர்கள், அக்கம் பக்கத்தினர் வீட்டின் முன் கூடினர்.
நித்யாவை பலரும் விசாரித்தனர். ஒரு கட்டத்தில், கண்ணீர் விட்டு கதறியபடி மயங்கி விழுந்தாள். நித்யாவின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினர்.
தொடர்ந்து, அரவிந்தின் உடலை அவசர அவசரமாக ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் மருத்துவர்கள் உறுதியாகச் சொன்னார்கள்: “அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார்.”
இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் தொடங்கின. உறவினர்கள் கூடினர். ஆனால் அரவிந்தின் தம்பி கார்த்திக்குக்கு சந்தேகம் வந்தது. “அண்ணன் சொன்னது உண்மையாக இருக்குமோ?” என்று போலீசில் புகார் கொடுத்தான். உடனடியாக போலீசார் வந்து, உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். நித்யாவை விசாரிக்க காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணை அறையில் நித்யா அழுதாள். ஆனால், அவளின் செல்போன் கால் ஹிஸ்டரியை போலீசார் சோதித்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அரவிந்த் இறந்ததாகச் சொல்லப்பட்ட அந்த இரவில், அவள் இரண்டு நம்பர்களுக்கு 50 முறைக்கு மேல் பேசியிருந்தாள்! இரவு 8 மணி முதல் அதிகாலை 2 மணி வரை தொடர்ந்து பேச்சு. மேலும், அந்த ஹிஸ்டரியை அவள் தன்னுடைய செல்போனில் டெலிட் செய்திருந்தாள்.
“இந்த இரண்டு நம்பர்களுக்கும் ஏன் இவ்வளவு நேரம் பேசினீங்க?” என்று கேட்டபோது நித்யா கதறினாள். “என் கணவருக்கு என் தோழி லதாவுடன் கள்ளத் தொடர்பு இருந்தது. அதை முடித்துக்கொள்ளச் சொன்னேன். அதற்கு அவர், ‘உன்னுடனும் உன் தோழியுடனும் ஒரே நேரத்தில் உடலுறவு வேண்டும்’ என்றார். அதனால்தான் தோழியை வரவழைத்தேன். இருவருடன் உடலுறவில் இருக்கும் போது மூச்சுத்திணறி இறந்துவிட்டார்.. என் கணவர் இறந்து விட்டார், அவருடைய மரியாதையை கெடுத்துடாதிங்க.." என்று கண்ணீர் விட்டு அழுதால் நித்யா..
போலீசாருக்கு இன்னொரு சந்தேகம். இரண்டாவது நம்பர் யாருடையது? “அது எங்கள் பள்ளிக்கு அருகே உள்ள கிளினிக்கில் வேலை செய்யும் டாக்டர். எனக்கு உடல்நிலை சரியில்லாததால் ஆலோசனை கேட்டேன்” என்று சொன்னாள் நித்யா.
ஆனால், விசாரணை தீவிரமடைந்தது. இரண்டு நபர்களையும் – 23 வயது இளைஞன் விக்ரம் (கிளினிக் வேலை) மற்றும் நித்யாவின் சக ஆசிரியை லதா – போலீசார் கைது செய்து தனித்தனியாக விசாரித்தனர். மூவரின் வாக்குமூலங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டன.
கடைசியில், கிடுக்குப்பிடி விசாரணையில் உண்மை வெளியானது. நித்யாவுக்கும் விக்ரமுக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது. கணவர் அரவிந்த் அதற்கு தடையாக இருந்தார். மூவரும் சேர்ந்து திட்டமிட்டனர்.
அந்த இரவு, அரவிந்த் தூங்கியபோது, நித்யா, விக்ரம், லதா மூவரும் சேர்ந்து அவன் முகத்தில் தலையணையை அழுத்திப் பிடித்தனர். அவன் மூச்சுத் திணறி போராடினான். சில நிமிடங்களில் அவன் உயிர் பிரிந்தது. பிறகு, “திடீரென மயக்கம்” என்று கதை கட்டினார்கள்.
மூன்று பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தக் கொலை, செலரி கிராமத்தை உலுக்கியது. வெளியில் அமைதியாகத் தெரிந்த குடும்பம், உள்ளே எப்படிப்பட்ட இருண்ட ரகசியங்களை மறைத்திருந்தது என்பதை அனைவரும் அதிர்ச்சியுடன் பேசினர்.
அரவிந்தின் ஆன்மா இப்போது அமைதியாக இருக்கட்டும்... ஆனால் நீதி நிலைநாட்டப்படும் வரை, இந்தக் கதை முடியாது.
Summary in English : In Jharkhand's Selari area, a husband passed away suddenly at home. His wife informed both families. During police inquiry, her phone records showed many late-night calls. Investigation revealed connections with two others. The matter was examined further, leading to arrests of three people.

