மருமகளிடம் தகாத முறையில் அதிமுக பிரமுகர் கொடூரம்! மாமியார் செய்த காது கூசும் அசிங்கம்! சேலத்தில் ஒரு ரிதன்யா!

சேலம் மாவட்டம் காமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சரவணன்-பூங்கா தம்பதியினரின் மகள் சொர்ணா, 2020-ம் ஆண்டு கருப்பூர் அருகே மூங்கில் பாடியைச் சேர்ந்த கோவிந்தசாமி-பிரேமா தம்பதியினரின் மகன் சக்கரவர்த்தியுடன் சேலம் கரபுரநாதர் கோயிலில் திருமணம் செய்து கொண்டார். 

பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட இந்தத் திருமணம், தற்போது கொடூரமான விவாகரத்து மற்றும் வீட்டு வன்முறை வழக்காக மாறியுள்ளது.திருமணத்துக்குப் பிறகு சொர்ணா தன் கணவர் சக்கரவர்த்தியின் செல்போனில் உள்ள சாட்சிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

கள்ளக்காதலி ஹேமாவுடன் சிக்கிய சக்ரவர்த்தி

 

ஏற்கனவே ஹேமா என்ற பெண்ணுடன் மூன்று ஆண்டுகள் குடும்பம் நடத்தியிருந்தது தெரிய வந்தது. இதனை கையும் களவுமாக பிடித்துள்ளனர் சொர்ணாவின் குடும்பத்தினர். 

அப்போது, ஹேமாவுடன் கள்ளத்தொடர்பில் இருந்தது உண்மை தான் எனவும் ஹேமாவை திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் பழகவில்லை என கூறி பெரியோர்களிடம் மன்னிப்பு கேட்டு கண்ணீர் விட்டு கதறினர் சக்ரவர்த்தியின் பெற்றோர்.

மாமனார் கோவிந்தசாமி (அதிமுக பிரமுகர்)

ஆனால், சக்ரவர்த்தி தன்னுடைய கள்ளத்தொடர்பை கை விடாமல் தொடர்ந்து சேலம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த ஹேமாவுடன் பழகி வந்தது மட்டுமில்லாமல், தன் அலுவலக சக பெண்களுடன் தகாத உறவில் இருப்பதை வாட்ஸ்அப் மெசேஜ்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் மூலம் அறிந்தார் சொர்ணா.

இதை கணவரின் பெற்றோரிடம் முறையிட்டபோது, மாமனார்-மாமியார் மகனைக் கண்டிக்காமல் சொர்ணாவையே கடுமையாகத் தாக்கி, “எங்கள் மகன் இப்படித்தான்... உன்னால் இருக்க முடியுமா? இல்லையென்றால் ஓடிப்போ” என்று துரத்தியடித்தனர்.

மாமியார் பிரேமா (மத்திய அரசு ஊழியர்)

 

மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த சொர்ணாவை தாக்கி, திருமணத்தில் வரதட்சணையாக கொடுத்த 30 பவுன் நகைகள் மற்றும் படிப்புச் சான்றிதழ்களைப் பிடுங்கிக்கொண்டு வீட்டை விட்டு துரத்தினர்.

இதைத் தொடர்ந்து சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த சொர்ணாவுக்கு, “நீ கர்ப்பமாக இருக்கிறாய்... முதலில் குழந்தையைப் பத்திரமாகப் பெற்றெடு” என்று அறிவுரை மட்டுமே கூறப்பட்டது.

பின்னர், சக்கரவர்த்தி குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்து, “சொர்ணா கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும்” என்று உத்தரவிட்டது.

அதன்படி ஐந்து வயது குழந்தையுடன் கணவர் வீட்டுக்குச் சென்ற சொர்ணாவை, “வீட்டுக்குள் அனுமதிக்க முடியாது” என்று சொல்லி மாமியார் பிரேமா (மத்திய அரசு ஊழியர்) கழுத்தைப் பிடித்துத் தள்ளி, இடுப்பில் எட்டி உதைத்து வெளியேற்றினார்.

இதனால் ஆத்திரமடைந்த சொர்ணா வீட்டுக்கு முன்பாக இரண்டு நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்.

இதையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு, சக்கரவர்த்தி, அதிமுக பிரமுகரான மாமனார் கோவிந்தசாமி மற்றும் மாமியார் பிரேமா ஆகியோரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

“இனி எந்தப் பிரச்சினையும் இல்லை... நாங்கள் பார்த்துக்கொள்வோம்” என்று எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்த பின்னரே சொர்ணா வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அதே இரவு மீண்டும் கொடுமை தொடங்கியது. மாமியார் பிரேமா மற்றும் அதிமுக பிரமுகர் கோவிந்தசாமி சொர்ணாவை அவரது பிறப்புறுப்பில் எட்டி உதைத்து கொடூரமாக தாக்கியுள்ளார். வலி தாங்க முடியாமல் துடித்துக்கொண்டிருந்த சொர்ணாவிற்கு சூடு வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார் மாமியார் பிரேமா.

“ஒழுங்கா ஓடிப்போ... இங்கிருந்தால் கொன்னு கிணற்றில் போட்டு, தற்கொலை என்று வழக்கை முடித்துவிடுவோம்” என்று காது கூசும் வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விட்டுள்ளனர். கடுமையான காயங்களுடன் சொர்ணா அரசு மருத்துவமனையில் மூன்று நாட்கள் தீவிர சிகிச்சை பெற்றார்.

இந்த சம்பவம் குறித்து மாமனார்-மாமியார் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையில் புகார் அளித்தும், அதிமுக பிரமுகரான கோவிந்தசாமியின் அரசியல் பலமும், பண பலமும் காரணமாக காவல்துறை மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதாக சொர்ணா குற்றம் சாட்டுகிறார்.

பாதிக்கப்பட்ட பெண் சொர்ணா

இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ள சொர்ணா, “கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு என்னை கொடுமைப்படுத்துகிறார். மாமனார்-மாமியார் அவருக்கு ஆதரவாக நின்று என்னைத் தாக்குகின்றனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கண்ணீர் மல்க  கோரிக்கை வைத்தது அங்கிருந்தவர்களின் கண்களில் கண்ணீர் வரவழைத்தது. 

இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் இதன் மீது கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

ஒரு பெண் தனக்கான நீதியை பெரிய இவ்வளவு தூரம் போராட வேண்டுமா? காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இந்த வழக்கில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Summary in English : In Salem, Sorna married Chakravarthi in 2020. After marriage, she faced issues due to her husband's prior relationship and ongoing contacts. When she complained, her in-laws took away jewels and certificates, sent her out while pregnant, and later refused entry with their five-year-old child. Police and court interventions followed, but problems continued. She has now complained to the district collector seeking action.