சென்னை: தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பாலியல் தொழிலாளியாக பணியாற்றி வந்த ரேகா என்ற பெண் தன் வாழ்க்கையில் சந்தித்த கொடுமைகளைப் பகிர்ந்து கொண்டார்.
கணவர் இறந்த பிறகு குழந்தையுடன் தனியாக போராடிய அவர், சாதாரண வேலைகளில் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகளால் இந்தத் தொழிலுக்குள் தள்ளப்பட்டதாகவும், பல ஆண்களால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டதாகவும், கொடூரமான வன்முறைகளுக்கு ஆளானதாகவும் கண்ணீர் மல்கக் கூறினார். பேட்டியை எடுத்த தொகுப்பாளினியும் அதிர்ச்சியில் கண்ணீர் வடித்தார்.

ரேகா தன் அனுபவங்களைப் பகிர்ந்தபோது, “கணவர் இறந்த பிறகு குழந்தையுடன் உயிர் வாழ்வதற்காக பல வேலைகளுக்குச் சென்றேன். ஆனால் கணவர் இல்லை எனத் தெரிந்ததும், பணியிடங்களில் ஆண்கள் என்னை தொடர்ந்து தொல்லை செய்தனர். பல வேலைகளை மாற்றி முயற்சி செய்தும் நிலைமை மாறவில்லை.
ஒரு கட்டத்தில் குழந்தையை வளர்க்கவும், உயிர் வாழவும் வேறு வழியில்லாமல் அந்தத் தொல்லைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க ஆரம்பித்தேன். பணம் கொடுத்து பயன்படுத்திக் கொண்டனர். பிறகு முழுமையாக இந்தத் தொழிலுக்கு மாறினேன்” என்றார்.தொடர்ந்து அவர், “சில வாடிக்கையாளர்கள் ‘இந்தத் தொழிலை விட்டுவிடு, நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொல்வார்கள்.
நம்பி அவர்களுடன் வாழ்ந்தேன். வீட்டு வாடகை, உணவு, அத்தியாவசியப் பொருட்கள் கொடுப்பார்கள். ஆனால் ஒரு-இரு மாதங்களில் ‘இனி உன்னை பார்த்துக் கொள்ள முடியாது, நீ என்னமோ செய்து கொள்’ என்று கைவிட்டு விடுவார்கள்.
அதிலும், ஒருவர் நான் பாலியல் தொழிலாளி என தெரிந்தும், என்னை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தினார். அதன் பிறகு, என்னை வைத்து வீட்டிலேயே பாலியல் தொழில் செய்து அவர் பணம் சம்பாதிக்க தொடங்கிவிட்டார். ஒருமுறை, காய்ச்சலால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தேன். அப்போது கூட, மூன்று பேரை அழைத்து வந்து கொடுமைப்படுத்தினார். அதனால், அவரை பிரிந்து விட்டேன் என கூறினார்.
இப்படி ஐந்து பேர் என்னை ஏமாற்றியுள்ளனர். ‘இந்த வேலைக்குப் போ, குப்பை பொறுக்கப் போ’ என்று கிண்டல் செய்தனர். ஆனால் எங்கு சென்றாலும் பாலியல் ரீதியான தொல்லையே தொடர்ந்தது” என்று வருத்தத்துடன் கூறினார்.
மேலும், “ஒரு முறை கடற்கரையில் நின்றபோது ஒருவர் ‘ஒரு நாள் மட்டும் எனக்கு மனைவியாக இரு’ என்று அழைத்துச் சென்றார். காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று, ‘வெட்டவெளியில் உறவு கொள்ளாவிட்டால் கொலை செய்துவிடுவேன்’ என்று மிரட்டினார். தாலி, தங்கச் செயின் உள்ளிட்டவற்றைக் கொடுத்து தப்பித்தேன்” என்றார்.
ரேகா மேலும் சொன்னார், “பல முறை ஒரு நபர் என்று அழைப்பார்கள். ஆனால் சென்றால் நான்கு அல்லது ஐந்து பேர் காத்திருப்பார்கள். அவர்கள் என்னை மிகக் கொடூரமாக நடத்தினர்.
உடல்ரீதியான வன்முறை, மிரட்டல், கட்டாயப்படுத்துதல் என பல கொடுமைகளைச் செய்தனர். ஒரு சமயம் விடிய விடிய என்னை தூங்கவிடாமல், உணவு கொடுக்காமல் துன்புறுத்தினர். என் உடலில் இருந்து ரத்தம் வரும் வரை விடமாட்டோம் என்று பீர் பாட்டிலைப் பயன்படுத்தி கடுமையான வலியை ஏற்படுத்தினர்.
பின்னர் மற்றொரு பெண்ணை அழைத்து வரச் சொன்னார்கள். நான் என் தோழியை அழைத்து, வட பழனி பேருந்து நிலையத்தில் இறக்கிவிடச் சொன்னேன். அங்கு சென்றபோது தோழியிடம் தனியாகப் பேசி, ‘அவர்கள் போலீஸ்காரர்கள், மாட்டிக்கொள்வோம்’ என்று சொல்லி இருவரும் தப்பித்தோம்” என்று தெரிவித்தார்.
இந்தப் பேட்டி முழுவதும் ரேகாவின் கண்கள் கண்ணீரில் நனைந்தன. தொகுப்பாளினியும் அதிர்ச்சியில் கண்ணீர் வடித்தார். பெண்களுக்கு எதிரான சுரண்டல், பாலியல் வன்முறை மற்றும் சமூக ஆதரவின்மை ஆகியவை இன்னும் தொடர்வதை இந்தப் பேட்டி மீண்டும் நினைவூட்டுகிறது.
ரேகா போன்ற பல பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், மாற்று வாழ்க்கைக்கு உதவியும் தேடும் நிலையில் இருப்பதாக இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.
English Summary : Rekha, a widowed mother, faced hardships after her husband's death while trying to support her child. She encountered repeated unwanted advances at workplaces and eventually entered this profession for survival. Several men promised long-term help but left her after a short time. She faced difficult and painful experiences with groups, from which she escaped using her presence of mind.
