4 பேரும் ஒரே நேரத்துல பண்ண சொல்லி.. பாலியல் தொழிலாளிக்கும் வலி இருக்கு.. கத்தியை காட்டி படுக்க வச்சாங்க..
சென்னை: தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பாலியல் தொழிலாளியாக பணியாற்றி வந்த ரேகா என்ற பெண் தன் வாழ்க்கையில் சந்தித்த கொடுமைகளைப் பகிர்ந்து கொண்டார். கணவர் இறந்த பிறகு குழந்தையுடன் தனியாக போராடிய அவர், சாதாரண வேலைகளில் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகளால் இந்தத் தொழிலுக்குள் தள்ளப்பட்டதாகவும், பல ஆண்களால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டதாகவும், கொடூரமான வன்முறைகளுக்கு ஆளானதாகவும் கண்ணீர் மல்கக் கூறினார். பேட்டியை எடுத்த தொகுப்பாளினியும் அதிர்ச்சியில் கண்ணீர் வடித்தார். ரேகா தன் அனுபவங்களைப் பகிர்ந்தபோது, “கணவர் இறந்த பிறகு குழந்தையுடன் உயிர் வாழ்வதற்காக பல வேலைகளுக்குச் சென்றேன். ஆனால் கணவர் இல்லை எனத் தெரிந்ததும், பணியிடங்களில் ஆண்கள் என்னை தொடர்ந்து தொல்லை செய்தனர். பல வேலைகளை மாற்றி முயற்சி செய்தும் நிலைமை மாறவில்லை. ஒரு கட்டத்தில் குழந்தையை வளர்க்கவும், உயிர் வாழவும் வேறு வழியில்லாமல் அந்தத் தொல்லைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க ஆரம்பித்தேன். பணம் கொடுத்து பயன்படுத்திக் கொண்டனர். பிறகு முழுமையாக இந்தத் தொழிலுக்கு மாறினேன்” என்றார்.தொடர்ந்து அவர், “சில வாடிக்கையாளர்கள் ‘இந்தத் தொழிலை விட்டுவிடு, நான்...