சேர்ந்து வாழதான் முடியல..! சடலத்துடன் வினோதமான முறையில் உடலுறவு! - சக ஊழியரின் வெறிச்செயல்!

கடந்த 2025 ஜூலை மாதம், காஞ்சிபுரம் மாவட்டம் ஆண்டி சிறுவள்ளூர் பகுதியில் உள்ள ஒரு சிறிய அட்டைப் பெட்டி உற்பத்தி கம்பெனி. அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் அனைவரும் அன்றைய நாள் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பியிருந்தனர்.

ஆனால், ஒரு பெண் மட்டும் தனியாக இருந்து வேலையை முடிக்க முயன்றுகொண்டிருந்தாள். அவள் பெயர் எப்சி மேரி. கணவர் சுரேஷ்குமாருடன் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த அந்தப் பெண், குடும்பச் சுமையைத் தாங்க முடியாமல் வீட்டு வேலையுடன் கூடுதலாக இந்த வேலையை ஏற்றிருந்தாள்.

கூலி வேலை செய்து வரும் கணவரின் வருமானம் மட்டும் போதாது என்று தெரிந்ததால், கடந்த வாரம் வியாழக்கிழமை அந்தத் தொழிற்சாலையில் சேர்ந்திருந்தாள்.அன்றிரவு, தொழிற்சாலையின் அமைதியை கலைக்கும் ஒரு சம்பவம் நடந்தது. 

எப்சி மேரி தனியாக வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, அதே நிறுவனத்தில் வேலை செய்யும் செந்தில்நாதன் என்பவர் அங்கு வந்தான். ராணிப்பேட்டை கணபதிபுரத்தைச் சேர்ந்த அவனுக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

ஆனால், அவன் எப்சி மேரியை ஒரு விதமாகப் பார்த்துக்கொண்டே இருந்தான். வேலை முடிந்து எல்லோரும் போன பிறகு, அந்தத் தனிமையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட செந்தில்நாதன், அவளிடம் ஆபாசமாகப் பேசத் தொடங்கினான்.

“நீ நினைக்கிற மாதிரியான பொண்ணு நான் இல்லை. இப்படி பேசாதே... மேனேஜர்கிட்ட சொல்லிடுவேன்!” என்று எப்சி மேரி தைரியமாக எச்சரித்தாள். ஆனால் செந்தில்நாதன் அத்துமீற முயற்சி செய்தான்.

கோபமடைந்த எப்சி மேரி, “தயவு செய்து போய்விடு... இல்லைன்னா கத்தி எல்லாரையும் வரவழைப்பேன்!” என்று மிரட்டினாள். “இங்க யாரும் வரமாட்டாங்க... நீ கத்தினாலும் யாரும் கேட்க மாட்டாங்க!” என்று சொல்லி அவளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றான்.எப்சி மேரி தன்னைத் தற்காத்துக்கொள்ள அவனைத் தள்ளிவிட்டாள். 

அப்போது பயந்துபோன செந்தில்நாதன், “இவளை உயிரோடு விட்டால் நடந்ததை வெளியே சொல்லிவிடுவாள்!” என்று நினைத்து, அங்கே கிடந்த இரும்பு ராடை ஒன்றை எடுத்து அவளது தலையில் ஓங்கி அடித்தான். வலியால் துடிதுடித்த எப்சி மேரி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள்.

அன்றிரவு வீடு திரும்பாத மனைவியைத் தேடி சுரேஷ்குமார் தொழிற்சாலைக்கு வந்தபோது, அட்டைப் பெட்டிகளுக்கு நடுவே அவள் சடலமாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக பொன்னேரிக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில் சுரேஷ்குமார், “என் மனைவியின் கழுத்தில் ஆறு சவரன் நகை இருந்தது... அது காணவில்லை” என்று தெரிவித்தார்.

இது போலீசாருக்கு பெரிய திருப்பமாக அமைந்தது. “நகைக்காகவே கொலை செய்யப்பட்டிருக்கலாம்” என்ற கோணத்தில் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

தொழிற்சாலை ஊழியர்கள் அனைவரையும் விசாரித்தபோது, செந்தில்நாதன் மட்டும் காணாமல் போயிருந்தான். 

அவன் செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்தது. இதனால் போலீசார் அவனைத் தீவிரமாகத் தேடினர்.மூன்று நாட்கள் கழித்து, செந்தில்நாதனின் செல்போன் சிக்னல் ராணிப்பேட்டை அருகே உள்ள பரமேஸ்வர மங்கலத்தில் பதிவானது. உடனடியாக அங்கு சென்ற போலீசார், பதுங்கியிருந்த அவனைப் பிடித்து பொன்னேரிக்கரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். 

விசாரணையில் அவன் கொடுத்த வாக்குமூலம் போலீசாருக்கே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது!“நான் நகைக்காக கொலை செய்யவில்லை... அவள் என்னை நிராகரித்ததால், அவளை உயிரோடு விட்டால் விவகாரம் வெளியே தெரிந்துவிடும் என்ற பயத்தில் தான் அடித்தேன்” என்று செந்தில்நாதன் உண்மையை ஒப்புக்கொண்டான்.

பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தான் எப்சி மேரி உயிரிழந்ததாகவும், நகை காணாமல் போனது தற்செயலானது என்றும் அவன் தெரிவித்தான்.போலீசார் செந்தில்நாதனை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். 

குடும்பத்தை நேசித்து, சுமையைப் பகிர்ந்துகொள்ள வேலைக்குச் சென்ற ஒரு தாயின் உயிரைப் பறித்த இந்தக் கொடூரம், அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் மேலும் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.

சடலத்துடன் வினோத உடலுறவு..

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அயன்சிங்கம்பட்டியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் மாரிமுத்து, தன்னை காதலிப்பதாக சொல்லி பழகிய 17 வயது சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்று கழுத்து நெறித்துக் கொன்றார். பின்னர், சடலத்துடன் வினோதமான உடலுறவு கொண்ட பயங்கர சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்த இடத்தில் சிறுநீர் கழிக்கச் சென்ற இளைஞர் ஒருவர், அங்கு இரண்டு பேரும் சடலமாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து ஓடி வந்து அருகில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவித்தார். உடனடியாக அங்கு விரைந்தவர்கள் 17 வயது சிறுமியும் 26 வயது இளைஞரும் மூச்சு பேச்சின்றி கிடப்பதைக் கண்டனர்.

சிறுமி நிர்வாண நிலையில் ரத்தக் காயங்களுடன் கிடந்த நிலையில், இளைஞரின் வாயில் மணல் திணிக்கப்பட்டிருந்தது. அவரது நாடி துடித்துக் கொண்டிருந்ததால் போலீஸார் அவரை மயக்க நிலையில் மீட்டு, முகத்தில் தண்ணீர் தெளித்து சுயநினைவுக்கு கொண்டு வந்தனர்.போலீஸ் வந்ததும் இளைஞர் தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கிப் பிடித்த போலீஸார் விசாரணை செய்தபோது, அவர் மயக்க நிலையில் இருந்தார். 

சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, உயிர் பிரிந்த பின்னர் கொடூரமாக சீரழிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில் இளைஞர் மீது சந்தேகம் எழுந்தது.வீரவநல்லூரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஸ்கூலுக்கு செல்லும் போது, மாரிமுத்து அவரைப் பின்தொடர்ந்து ஆசை வார்த்தைகளால் லவ் என்று கூறி பழகியுள்ளார். 

சிறுமியும் வயது கோளாறில் அதற்கு சம்மதித்து பேசி வந்தார். இந்த விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததும் மாரிமுத்துவை எச்சரித்தனர். மேலும் வீரவநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் POCSO சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மாரிமுத்து சில மாதங்கள் ஜெயிலில் இருந்து சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.

சம்பவத்தன்று, “வெளியே போய் வரலாம்” என்று சொல்லி சிறுமியை தன் பைக்கில் அழைத்துச் சென்ற மாரிமுத்து, ஆள் நடமாட்டம் இல்லாத தனிமையான இடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவரும் நீண்ட நேரம் தனியாக இருந்தனர்.

கஞ்சா போதையில் இருந்த மாரிமுத்து சிறுமியிடம் வக்கிரமாக நடந்து கொண்டார். அப்போது சிறுமி, “நான் கேட்கும் பணத்தை கொடு, இல்லையென்றால் நீ என்னுடன் இருந்த வீடியோவை வெளியே விட்டுவிடுவேன்” என்று மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து, சிறுமியின் கழுத்தை நெறித்துக் கொன்றார்.

சிறுமி உயிரிழந்து பிணமாக பின்னரும் கஞ்சா போதையில் அந்த சிறுமியின் சடலத்துடன் உடலுறவு கொண்டுள்ளார். பின்னர் போதை களைப்பில் அந்த புதருக்குள்ளேயே மயங்கியுள்ளார். தெளிந்ததும் உண்மை புரிந்த மாரிமுத்து, போலீஸ் பிடிப்பார்கள் என்ற பயத்தில் தற்கொலை செய்ய முயன்றார். தன் வாயில் மணலை திணித்துக் கொண்டு, அருகில் வைத்திருந்த மதுவை குடித்து மயங்கி விழுந்தார்.

மாரிமுத்து கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸார் அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கஞ்சா அடிமையான மாரிமுத்து மீது கொலை, பாலியல் வன்கொடுமை, POCSO உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த பயங்கர சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary in English : In Nellai district a 26 year old man took a 17 year old girl on his bike to a quiet place. Later both were found unconscious. Police investigation led to his arrest based on inquiry and medical report. He was earlier released on bail in a related case.