சேர்ந்து வாழதான் முடியல..! சடலத்துடன் வினோதமான முறையில் உடலுறவு! - சக ஊழியரின் வெறிச்செயல்!
கடந்த 2025 ஜூலை மாதம், காஞ்சிபுரம் மாவட்டம் ஆண்டி சிறுவள்ளூர் பகுதியில் உள்ள ஒரு சிறிய அட்டைப் பெட்டி உற்பத்தி கம்பெனி. அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் அனைவரும் அன்றைய நாள் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பியிருந்தனர். ஆனால், ஒரு பெண் மட்டும் தனியாக இருந்து வேலையை முடிக்க முயன்றுகொண்டிருந்தாள். அவள் பெயர் எப்சி மேரி. கணவர் சுரேஷ்குமாருடன் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த அந்தப் பெண், குடும்பச் சுமையைத் தாங்க முடியாமல் வீட்டு வேலையுடன் கூடுதலாக இந்த வேலையை ஏற்றிருந்தாள். கூலி வேலை செய்து வரும் கணவரின் வருமானம் மட்டும் போதாது என்று தெரிந்ததால், கடந்த வாரம் வியாழக்கிழமை அந்தத் தொழிற்சாலையில் சேர்ந்திருந்தாள்.அன்றிரவு, தொழிற்சாலையின் அமைதியை கலைக்கும் ஒரு சம்பவம் நடந்தது. எப்சி மேரி தனியாக வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, அதே நிறுவனத்தில் வேலை செய்யும் செந்தில்நாதன் என்பவர் அங்கு வந்தான். ராணிப்பேட்டை கணபதிபுரத்தைச் சேர்ந்த அவனுக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் இருந்தனர். ஆனால், அவன் எப்சி மேரியை ஒரு விதமாகப் பார்த்துக்கொண்டே இருந்தான். வேலை முடிந்து எல்லோரும் போன பிறகு, அந்தத் தனிமையை...