தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாசம் தாலுகா, கலக்குடி பகுதியைச் சேர்ந்த காவியா (தற்காலிக ஆசிரியை) கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த அவரது காதலன் அஜித்குமார் இன்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
காவியா கடந்த 2025 நவம்பர் மாதம் பள்ளிக்குச் செல்லும் வழியில் நடுரோட்டில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக காதலன் அஜித்குமார் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் அவர் தற்கொலைக்கு முயற்சி செய்து கழுத்தில் பிளேடால் அறுத்துக் கொண்டார். பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு அஜித்குமார் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இதை அறிந்த காவியாவின் தந்தை மற்றும் உறவினர்கள் இன்று காலை அவரது வீட்டுக்குள் புகுந்து, தூங்கிக் கொண்டிருந்த அஜித்குமாரை சரமாரியாக வெட்டி மாஸ் சம்பவம் செய்துள்ளனர்.
ஒரு பெண்ணை நட்ட நடு ரோட்டில் வெட்டி கொலை செய்த ஒரு கொலைகாரனுக்கு தண்டனை வழங்காமல் ஜாமீனில் விடுவித்து கொல்லப்பட்ட பெண்ணின் தந்தையை கொலைகாரனாக்கியுள்ளது இந்திய தண்டனை சட்டம் என்று பொதுமக்கள் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள்.
உறவுமுறைகளை பொறுத்தவரை ஒருத்தருக்கு ஒன்று என்றால் துடித்து போகும் உறவு என்றால் அது நிச்சயமாக அப்பா-மகள் உறவு என்று அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். அப்படி தன் மகளை பெற்று, வளர்த்து, ஆளாக்கி, ஒரு ஆசிரியையாக உருவாக்கி அழகு பார்த்த தந்தையிடம் உங்கள் மகளை வெட்டி கொலை பண்ணிட்டாங்க என்ற செய்தியை கேட்ட போது எப்படி அந்த தந்தை துடிதிருப்பான்.
அதையும் தாண்டி, கொலை செய்தவனை ஜாமீனில் வெளியே விட்டுட்டாங்க என்ற போது தன் மகளை நினைத்து நினைத்து துடித்து போயிருக்கும் தந்தையின் கோபத்திற்கும் வேகத்திற்கும் வேலி போட முடியுமா? அந்த தந்தையை என்ன சொல்லி நிறுத்த முடியும்? இதனால் பலரும் இந்த தந்தையின் செயலை பாராட்டி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அம்மாப்பேட்டை மற்றும் சுற்றுப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாப்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நால்வர் மீதும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரு தரப்பினருக்கும் இடையேயான காதல் தகராறு, கொலை, ஜாமீன், பழிவாங்கல் என இரு கொலைகளாக மாறிய இந்தச் சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Summary in English : In Thanjavur district Kalakudi area, a young man named Ajithkumar who was released on bail a month ago in connection with his girlfriend Kaviya’s death last November was found injured at his home while sleeping. Kaviya had worked as a temporary teacher. Her father and relatives reportedly entered the house. Ammapettai police registered a case and are inquiring with four persons.
