Posts

Showing posts with the label relatives

தர்பூசணி காரணமல்ல! பிரியாணி சாப்பிட்ட பின் நடந்தது இது தான்! பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் பகீர் தகவல்!

Image
மும்பை, ஏப்ரல் 29, 2026: தென் மும்பையின் பைதோனி (பெண்டி பஜார்) பகுதியில் உள்ள மொகுல் பில்டிங்கில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் – தந்தை, தாய் மற்றும் இரு மகள்கள் – உணவு நச்சுத்தன்மை காரணமாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், “பிரியாணி சாப்பிட்டுவிட்டு பழம் சாப்பிட்டால் ஆபத்தா?” என்ற அச்ச உணர்வு மக்கள் மத்தியில் பரவியுள்ளது. சம்பவம் என்ன நடந்தது? கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 25) இரவு சுமார் 10.30 மணியளவில், அப்துல்லா அப்துல் காதர் தொகாடியா (40), அவரது மனைவி நஸ்ரீன் (35), மகள்கள் ஆயிஷா (16) மற்றும் ஜைனப் (13) ஆகியோர் தங்களது உறவினர்களுடன் சேர்ந்து வீட்டில் சிக்கன் பிரியாணி உணவு அருந்தினர். உணவு முடிந்ததும் உறவினர்கள் வீட்டுக்குத் திரும்பிச் சென்றனர். அவர்களுக்கு எந்த உடல்நலக் குறைவும் ஏற்படவில்லை. இரவு சுமார் 1 மணியளவில், அப்துல்லா குடும்பத்தினர் நான்கு பேரும் மட்டும் தண்ணீர் பழமான தர்பூசணியை வெட்டிச் சாப்பிட்டுள்ளனர். அதன் பிறகு அவர்கள் உறங்கச் சென்றனர். அதி...

தூங்கும் போதே சரமாரியாக வெட்டிக்கொலை.. மாஸ் சம்பவம் செய்த தந்தை..

Image
தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாசம் தாலுகா, கலக்குடி பகுதியைச் சேர்ந்த காவியா (தற்காலிக ஆசிரியை) கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த அவரது காதலன் அஜித்குமார் இன்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். காவியா கடந்த 2025 நவம்பர் மாதம் பள்ளிக்குச் செல்லும் வழியில் நடுரோட்டில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக காதலன் அஜித்குமார் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவர் தற்கொலைக்கு முயற்சி செய்து கழுத்தில் பிளேடால் அறுத்துக் கொண்டார். பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு அஜித்குமார் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இதை அறிந்த காவியாவின் தந்தை மற்றும் உறவினர்கள் இன்று காலை அவரது வீட்டுக்குள் புகுந்து, தூங்கிக் கொண்டிருந்த அஜித்குமாரை சரமாரியாக வெட்டி மாஸ் சம்பவம் செய்துள்ளனர். ஒரு பெண்ணை நட்ட நடு ரோட்டில் வெட்டி கொலை செய்த ஒரு கொலைகாரனுக்கு தண்டனை வழங்காமல் ஜாமீனில் விடுவித்து கொல்லப்பட்ட பெண்ணின் தந்தையை கொலைகாரனாக்கியுள்ளது இந்திய தண்டனை சட்டம் என்று பொதுமக...

44 வயது காதலன்! அதை போட்டு விடுறேன் என 25 காதலி செய்த கொடூர செயல்! மிரண்டு போன போலீஸ்!

Image
மும்பையின் சாந்தா குரூஸ் கிழக்கு பகுதியில், கலினா என்ற இடத்தில் வசித்து வந்தாள் 25 வயது பிரியா. பீகாரைச் சேர்ந்த இவள், கணவனுடன் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தாள். இரண்டு குழந்தைகளின் தாய். அவளது வாழ்க்கையில் ஒரு மர்மமான நிழல் போல நுழைந்தவன் தான் 44 வயது விக்ரம். சாந்தா குரூஸிலேயே 18 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வந்தவன். மனைவி, குழந்தைகள் என நிறைவான வாழ்க்கை. விக்ரமுடைய சகலையின் தங்கையான பிரியாவுக்கும் விக்ரமுக்கும் இடையே உறவை தாண்டிய ஒரு இனம் புரியாத நட்பு உருவானது. உறவினர் என்கிற பெயரில் தொடங்கிய நட்பு, ஏழு ஆண்டுகளாக தீராத காதலாக மாறியது. பிரியா விக்ரமை தீவிரமாக காதலித்தாள். “உன் மனைவியை விவாகரத்து என்னை திருமணம் செய்து கொள்” என்று தொடர்ந்து நிர்பந்தித்து வந்தாள். விக்ரம் மறுத்தான். “இருவருக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். இது சாத்தியமில்லை” என்று சொல்லி தவிர்த்தான். ஆனால் பிரியாவின் அழுத்தம் அதிகரித்தது. விக்ரமின் மனைவிக்கு உறவு தெரியவந்தது. வீட்டில் சண்டைகள் அடிக்கடி நடந்தன. இறுதியாக, விக்ரம் உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்தான். நவம்பர் 2025இல், விக்ரம் தனது சொந்த ஊரான பீகாருக்...

“என் உறவினரே என் உடம்பை..” அசோக் செல்வன் மனைவி கீர்த்தி பாண்டியன் அனுபவித்த கொடூரம்..! அவரே கூறிய தகவல்!

Image
பிரபல தமிழ் திரைப்பட நடிகை கீர்த்தி பாண்டியன், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது சிறுவயதில் பாடி ஷேமிங் காரணமாக அனுபவித்த மன உளைச்சல்களைப் பகிர்ந்து கொண்டார்.  சிறு வயதில் தனது உடல் தோற்றம் குறித்து உறவினர்களால் கேலி செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.  “எனது சித்தி, அத்தை போன்றவர்கள் என்னைப் பார்த்து, ‘உடம்பு இப்படி ஒல்லியா இருக்கு, காத்து அடிச்சாலே பறந்து போயிடுவ போல’ என்று கிண்டல் செய்வார்கள்,” என்று கூறினார்.  அப்போது இது உடல் ரீதியான கேலி எனப் புரியாததால், அவர்களின் பேச்சு தன்னை மிகவும் பாதித்ததாக அவர் குறிப்பிட்டார். கீர்த்தி மேலும் கூறுகையில், தனது உறவினர்கள் தங்களது உடல் தோற்றம் குறித்து தாழ்வு மனப்பான்மையில் இருந்ததால், தனது ஒல்லியான தோற்றத்தைப் பார்த்து பொறாமை கொண்டு இவ்வாறு பேசியதாக பின்னர் புரிந்து கொண்டதாக தெரிவித்தார்.  “அவர்கள் குண்டாக இருந்ததால், என் உடல் தோற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் இப்படி பேசினார்கள்,” என்று அவர் கூறினார்.  அந்த சமயங்களில் இத்தகைய கருத்துகள் தன்னை மனதளவில் பாதித்து, தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியதாகவும், ஆனால் இப்போது அத்தகைய உண...