விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி நேற்று புதுக்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
பங்குனி உத்திரம் அருமையான நாளில் விராலிமலை முருகன் கோயில் அருகில் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, “இன்றைக்கு அண்ணா உருவாக்கிய திமுக, திரு. கருணாநிதி குடும்பத்தினுடைய திமுகவாக மாறிப்போச்சு.

அது ஒரு கட்சி அல்ல, அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்று மாறிவிட்டது. உண்மைதானே? அந்த கார்ப்பரேட் கம்பெனியில் திரு. ஸ்டாலின், திரு. உதயநிதி ஸ்டாலின், திரு. சபரீஸன், திரு. ஸ்டாலினுடைய மனைவி துர்கா அம்மா — இந்த நாலு பேர்தான் உரிமையாளர்கள்” என்று பேசினார்.
மேலும், “அண்ணா திமுகவை யார் அழிக்க நினைத்தாலும் அவர்கள்தான் அழிந்து போய்விடுவார்கள். பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தோற்றுவித்த கட்சி, இதயத் தமிழர் புரட்சித் தலைவி அம்மா காத்து நின்ற இயக்கம் — இதை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.
தொண்டனை கூட தொட்டுப் பார்க்க முடியாது” என்று உற்சாகமூட்டும் வகையில் பேசினார். எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சு, திமுகவை “குடும்ப கார்ப்பரேட்” என்று சாடியதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்திய இந்த பிரச்சாரம், 2026 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் தீவிரத்தை பிரதிபலிக்கிறது.
Summary in English : During election campaign at Viralimalai, AIADMK leader Edappadi K Palaniswami said that DMK has changed from Anna's party to a family party. He described it as a corporate company with four owners - Stalin, Udhayanidhi Stalin, Sabareesan and Durga Stalin. He added that AIADMK, founded by MGR and protected by Amma, remains a party for the people and cannot be shaken.

