Posts

Showing posts with the label election campaign

பரபரப்பான பொள்ளாச்சி வீடியோ! ஆவேசமான தவெக தலைவர் விஜய்!

Image
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு வீட்டில் தேர்தல் பிரசாரத்தின்போது ஸ்டிக்கர் ஒட்டும் விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. தமிழக வெற்றி கழகம் (தவெக) சார்பில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த நிலையில், மாற்றுக் கட்சியினர் ஸ்டிக்கர் ஒட்ட வந்தபோது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த வீட்டைச் சேர்ந்த பெண்ணை கட்சியினர் மிரட்டியதாக புகார் எழுந்தது. பயந்துபோன அந்த பெண், தவெக நிர்வாகிகளிடம் தொடர்புகொண்டு, “எங்களை ரொம்ப மிரட்டுறாங்க... எங்க வீட்ல யாரும் இல்ல... ரொம்ப பயமா இருக்கு” என்று கூறியதை நிர்வாகிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இது தொடர்பாக போலீசில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. வீடியோ வேகமாகப் பரவிய சூழலில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இந்த சம்பவத்துக்கு வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வாக்காளர்களை மிரட்டும் வகையில் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். குறிப்பாக திமுகவைச் சுட்டிக்காட்டி, “வாக்காளர்கள் மற்றும் மக்களை மிரட்டும் நடைமுறை மிகவும் க...

கனிமொழிக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா? களத்தில் அதிரடி அட்டாக் செய்த சுந்தர் சி! மனுஷன் வேற மாறி!

Image
மதுரை : தமிழக சட்டமன்றத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளராகக் களமிறங்கியுள்ள இயக்குநர் சுந்தர் சி, மக்களின் வரவேற்பு மற்றும் ஆதரவைப் பார்த்து வெற்றி 100க்கு 200% உறுதி என்று தெரிவித்தார். வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: “மதுரைக்கு வந்ததிலிருந்து மக்கள் எனக்குக் கொடுக்கும் வரவேற்பும், இரட்டை இலைக்குக் கொடுக்கும் ஆதரவும் பார்க்கும்போது, வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் வந்துவிட்டது. மதுரை மத்திய தொகுதி மக்கள் என்னை வெற்றி வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைய உறுதுணையாக இருப்பார்கள் என்ற பரிபூரண நம்பிக்கை எனக்கு உள்ளது.” பிரச்சாரம் குறித்து: பிரச்சாரம் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், நாளையிலிருந்து (நாளை செயல் வீரர்கள் கூட்டம்) முழு வீச்சில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். அனைத்து கூட்டணிக் கட்சி தலைவர்கள், செயல் வீரர்கள், நிர்வாகிகள் கலந்துகொள்ளும் கூட்டம் நடைபெறவுள்ளது. மக்கள் பிரச்சினைகள்: 10 ஆண்டுகளாக ஒரே எம்எல்ஏ எந்த நலத்திட்டங்களையும் செய்யவில்லை என்று விமர்சித்த சு...

ஸ்டாலின் மனைவி DURGA யார் தெரியுமா? முகத்திரையை கிழித்த எடப்பாடி! STALIN தலையில் இறங்கிய இடி!

Image
விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி நேற்று புதுக்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்தார். பங்குனி உத்திரம் அருமையான நாளில் விராலிமலை முருகன் கோயில் அருகில் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, “இன்றைக்கு அண்ணா உருவாக்கிய திமுக, திரு. கருணாநிதி குடும்பத்தினுடைய திமுகவாக மாறிப்போச்சு. அது ஒரு கட்சி அல்ல, அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்று மாறிவிட்டது. உண்மைதானே? அந்த கார்ப்பரேட் கம்பெனியில் திரு. ஸ்டாலின், திரு. உதயநிதி ஸ்டாலின், திரு. சபரீஸன், திரு. ஸ்டாலினுடைய மனைவி துர்கா அம்மா — இந்த நாலு பேர்தான் உரிமையாளர்கள்” என்று பேசினார். மேலும், “அண்ணா திமுகவை யார் அழிக்க நினைத்தாலும் அவர்கள்தான் அழிந்து போய்விடுவார்கள். பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தோற்றுவித்த கட்சி, இதயத் தமிழர் புரட்சித் தலைவி அம்மா காத்து நின்ற இயக்கம் — இதை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. தொண்டனை கூட தொட்டுப் பார்க்க முடியாது” என்று உற்சாகமூட்டும் வகையில் பேசினார். எடப...

“திருச்சி பிரச்சாரத்தில் விஜய் சொன்ன வார்த்தை..” பத்தி எரியும் தமிழ்நாடு.. கலக்கத்தில் எதிர்கட்சிகள்..

Image
திருச்சி: அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை "ஜனநாயகப் போர்" என்று கூறியுள்ளார் தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர், நடிகர் விஜய்.  திருச்சி மரக்கடை பகுதியில் நடைபெற்ற பிரச்சார சந்திப்பில் பேசிய அவர், தமிழகம் முழுவதும் 98 நாட்கள் நீடிக்கும் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை இன்று (செப்டம்பர் 13, 2025) திருச்சியில் இருந்து தொடங்கி உள்ளார். காந்தி மார்க்கெட் காவல் நிலையம் அருகே உள்ள MGR சிலை அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொண்டர்களைச் சந்தித்த விஜய், "நல்ல காரியத்தை திருச்சியில் இருந்து தொடங்குகிறேன்.  தொண்டர்களைப் பார்க்கும்போது பரவசமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் உள்ளது. போருக்கு முன் குலதெய்வத்தை கும்பிட வருவது போல், தேர்தலுக்கு முன் மக்களைப் பார்க்க வந்துள்ளேன்.  திருச்சியில் தொடங்கினால் திருப்புமுனை" என்று தெரிவித்தார்.TVK-வின் முதல் மாநில அளவிலான பிரச்சாரமாக இது அமைகிறது. "இது வரலாறு திரும்பி தகுதியானவர்களை முடிசூட்ட வருகிறது; உங்கள் விஜய் வருகிறார்" என்ற முழக்கத்துடன் தொடங்கிய இந்தப் பயணம், திருச்சியில் இருந்து மதுரை வரை அனைத்து மாவட்...