சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொண்டர்கள் மற்றும் நடிகர் விஜய் ரசிகர்கள் தன்னை ஆபாசமாகத் தாக்குதல் செய்வதாகக் கூறி போலீசில் புகார் அளிக்க வந்த சமூக ஆர்வலர் ஜூலி, செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அவருக்கு எதிராக எழுப்பப்பட்ட கடும் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
ஜூலி தனது புகாரில், தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் தன்னைப் பற்றி மோசமான, ஆபாசமான கருத்துக்களை இணையத்தில் பரப்பி வருவதாகவும், இதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், நடிகர் விஜய் தனது தொண்டர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

"வாடா போடா" சர்ச்சைக்கு விளக்கம்
செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ஜூலியிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஒரு செய்தியாளர், "நீங்கள் ஒரு கட்சித் தலைவரை பொதுவெளியில் 'வாடா போடா' என்று அவதூறாகப் பேசியிருக்கிறீர்கள்.
பெரம்பூரில் நடைபெற்ற மேடையில் விஜய் அவர்களை 'வாடா பாத்துக்கலாம்' என்று வறுமையில் பேசினீர்கள். இப்போது அவர்கள் உங்களைத் திட்டுகிறார்கள், ஆபாசமாகப் பேசுகிறார்கள் என்று புகார் செய்கிறீர்களே, இது சரியா?" என்று கேட்டார்.
இதற்கு பதில் அளித்த ஜூலி, "நான் 'வாடா போடா' என்று பேசவில்லை. 'வானா பார்த்துக்கலாம்' அல்லது 'வாங்கண்ணா பாத்துக்கலாம்' என்ற முறையில்தான் பேசினேன். எந்த வகையிலும் வறுமையாகப் பேசவில்லை" என்று தெளிவாக மறுத்தார்.
கிட்னி திருட்டு வழக்கில் சர்மிளா தொடர்பு
சந்திப்பின் போது மிக முக்கியமான கேள்வி எழுப்பப்பட்டது. பிரபல வழக்கறிஞர் நெல்சன், கிட்னி திருட்டு புகாரில் ஜூலியை முக்கிய நபராகச் சுட்டிக்காட்டி ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ள நிலையில், அவரது கருத்து கேட்கப்பட்டது.
ஜூலி இதற்கு பதில் அளிக்கும்போது, "சர்மிளாவும் நானும் மூன்று ஆண்டுகாலம் நன்றாகப் பழகினோம். அவர் எனக்குத் தெரிந்தவர். ஆனால் கடந்த ஒரு வருட காலமாக அவருடன் எந்தப் பேச்சு வார்த்தையும் இல்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக நான் பேசுவதைத் தவிர்த்து விட்டேன்" என்றார்.
மேலும், "நான் ஒரு செவிலியர். பல குழந்தைகளின் சிகிச்சைக்காகவும், உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சைக்காகவும் பல வீடியோக்களை வெளியிட்டு பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டி கொடுத்திருக்கிறேன். அவர்களுக்கு ஆதரவாக நின்று வருகிறேன்.
இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. ஆனால் என்னுடன் தொடர்பில் இருந்த ஒருவர் கிட்னி திருட்டில் ஈடுபட்டிருக்கிறார் என்பதால் என்னையும் இந்த சர்ச்சையில் சிக்க வைப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. இதைப் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை" என்று உணர்ச்சி பொங்கக் கூறினார்.
ஒரு கட்டத்தில் இந்தக் கேள்விக்கு பதில் அளிக்க ஜூலி சற்று தயக்கம் காட்டியதும், பின்னர் தெளிவாக தனது நிலைப்பாட்டை விளக்கியதும் குறிப்பிடத்தக்கது.
பின்னணி
சமீபகாலமாக தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் சிலருக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் மற்றும் ஆபாச தாக்குதல்களில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த சூழலில் ஜூலியின் புகார் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
ஜூலி தனது புகாரில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இணையத்தில் நடைபெறும் ஆபாச தாக்குதல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் தமிழக அரசியல் மற்றும் சமூக ஊடக விவாதங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary : Social activist Julie addressed reporters after filing a complaint about online comments from TVK supporters and Vijay fans. She clarified that her statement towards a party leader was not derogatory. Regarding kidney-related questions involving Sharmila, she noted their past friendship ended a year ago and denied any personal involvement while highlighting her support for children's medical care.