“கிட்னி திருட்டு புகார்” மடக்கி மடக்கி கேள்வி கேட்ட செய்தியாளர்கள்! பம்மிய ஜூலி கொடுத்த பதிலை பாருங்க!
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொண்டர்கள் மற்றும் நடிகர் விஜய் ரசிகர்கள் தன்னை ஆபாசமாகத் தாக்குதல் செய்வதாகக் கூறி போலீசில் புகார் அளிக்க வந்த சமூக ஆர்வலர் ஜூலி, செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அவருக்கு எதிராக எழுப்பப்பட்ட கடும் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். ஜூலி தனது புகாரில், தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் தன்னைப் பற்றி மோசமான, ஆபாசமான கருத்துக்களை இணையத்தில் பரப்பி வருவதாகவும், இதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், நடிகர் விஜய் தனது தொண்டர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். "வாடா போடா" சர்ச்சைக்கு விளக்கம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ஜூலியிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஒரு செய்தியாளர், "நீங்கள் ஒரு கட்சித் தலைவரை பொதுவெளியில் 'வாடா போடா' என்று அவதூறாகப் பேசியிருக்கிறீர்கள். பெரம்பூரில் நடைபெற்ற மேடையில் விஜய் அவர்களை 'வாடா பாத்துக்கலாம்' என்று வறுமையில் பேசினீர்கள். இப்போது அவர்கள் உங்களைத் திட்டுகிறார்கள், ஆபாசமாகப் பேசுகிறார்கள் என்று புகார் செய்கிறீர்கள...