“அவசரமா பாக்கணும்” நண்பனின் பேச்சை கேட்டு புதர் அருகே சென்ற பெண் காவலர்! அரங்கேறிய காது கூசும் கொடூரம்!

சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வரும் திருமணமான பெண் காவலர் ஒருவர், நண்பர் என்ற நம்பிக்கையில் சந்திக்கச் சென்றபோது, அவருடன் வந்த இருவருடன் சேர்ந்து மூவரும் தகாத முறையில் நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மானாமதுரை அருகே உள்ள தூதை கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான ராபின் (லாரி ஓட்டுநர்) என்பவருடன் அந்தப் பெண் காவலருக்கு முன்பிருந்தே பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு ராபின் செல்போன் மூலம் அந்தப் பெண் காவலரை அவசரமாக சந்திக்க வேண்டும் என அழைத்தார்.

இதன்படி, நண்பன் என்ற நம்பிக்கையில் அந்தப் பெண் காவலர், சிவகங்கை - திருப்பத்தூர் சாலையில் உள்ள ஒரு இடத்திற்கு வந்தார். அப்போது ராபின் அவரை ஆள் நடமாட்டம் குறைவான புதர் பகுதிக்கு அழைத்துச் சென்று தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்தார்.

அந்த நிலையில், ராபினின் நண்பர்களான சித்தாலங்குடி கிராமத்தைச் சேர்ந்த 29 வயதான மகாராஜா மற்றும் 21 வயதான ஹரிஸ் (கல்லூரி மாணவர்) ஆகியோரும் அங்கு வந்து சேர்ந்தனர்.

பின்னர் மூவரும் சேர்ந்து அந்தப் பெண் காவலரிடம் தகாத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் காவலர், சிறிது நேரம் கழித்து அவர்களிடமிருந்து தப்பித்து அருகிலுள்ள வீடுகளுக்கு ஓடிச் சென்று உதவி கோரினார். உடனடியாக அப்பகுதி மக்கள் உதவியுடன் போலீஸ் அவசர உதவி எண் 100-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பெண் காவலரை பாதுகாப்பாக மீட்டனர். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் உத்தரவின்பேரில், துணை காவல் கண்காணிப்பாளர் அமல அட்வின் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாரீஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில் ராபின், மகாராஜா மற்றும் ஹரிஸ் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் மீது பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சட்டம்-ஒழுங்கு பணியில் ஈடுபட்டிருக்கும் ஒரு பெண் காவலரே இத்தகைய சம்பவத்திற்கு ஆளானது சிவகங்கை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

English Summary : A married woman police officer from Sivaganga district had a prior acquaintance with a 28-year-old lorry driver named Robin from near Manamadurai. She met him after he called her urgently. His two friends then joined at an isolated spot. The officer faced an unpleasant situation, escaped with difficulty, and alerted locals. Police rescued her and arrested the three men.