Posts

Showing posts with the label Jason Sanjay

என் அப்பா தான்! இதை அவரு பாக்கணும்! வெடித்த ஜேசன் சஞ்சய்!

Image
நடிகர் மற்றும் தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் தீவிரமாகக் கலந்துகொண்டு வரும் ஜேசன் சஞ்சய், சமீபத்தில் ஒரு தனியார் யூடியூப் சேனலில் பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியை நடத்திய தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, அவரை நோக்கி ஒரு கேள்வியை எழுப்பினார். “ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டாதம் ஒரு படத்தைத் தயாரிக்க உங்களை அழைத்தால், அதில் இந்தியாவிலிருந்து ஒரு நடிகரை நடிக்க அழைத்துச் செல்ல வேண்டும் என்றால் உங்களுடைய விருப்பம் யார்?” என்று கேட்டார். உடனே பதிலளித்த ஜேசன் சஞ்சய், “கண்டிப்பாக அப்பாதான்” என்று உறுதியாகக் கூறினார். மேலும், “இந்தப் பேட்டியை ஜேசன் ஸ்டாதம் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றும் தெரிவித்தார். விஜய் தனது மனைவி சங்கீதாவிடமிருந்து பிரிந்து வாழ்கிறார் என்றும், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் சில சிக்கல்கள் இருந்தாலும், அதை மனதில் வைத்துக்கொள்ளாமல், தனது தந்தையைப் பற்றி வெளிப்படையாகவும் அன்பாகவும் பேசிய ஜேசன் சஞ்சய்யின் இந்தப் பதில், சமூக ஊடகங்களில் பரவலான பாராட்டைப் ...

சங்கீதா, விஜய் இருவரும் ஒரே மேடையில்.. தீயாய் பரவும் வீடியோ!

Image
ஆதவ் அர்ஜுனாவின் ஆவேசப் பேச்சுகள் தவெக அரசுக்கு தலைவலி: சேகுவேரா பேட்டியில் சரமாரியான விமர்சனம் சென்னை: தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் மேடைப் பேச்சுகள் கட்சிக்கும், அரசுக்கும் தேவையற்ற சங்கடங்களை ஏற்படுத்தி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.  அவரது ஆவேசமான பேச்சு தொனியும், வன்முறை உணர்வைத் தூண்டும் வகையிலான உச்சரிப்பும் மக்கள் மத்தியில் எதிர்மறை பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.  இது தொடர்பாக The Gentle Man சேனலுக்கு அளித்த பேட்டியில் சேகுவேரா முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். பேட்டியில் சேகுவேரா, “ஆதவ் அர்ஜுனா தனது மேடைப் பேச்சுகளைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. கட்சியில் உள்ள மற்ற அமைச்சர்களான ராஜ்மோகன், ரமேஷ், நிர்மல் குமார் போன்றோரின் பேச்சுகளில் நளினமும், சரியான ஓட்டமும் உள்ளது.  அவர்களின் பேச்சில் வன்மம் தெரியாது. ஆனால் ஆதவ் அர்ஜுனா சாதாரண வார்த்தைகளைக் கூட கடினமாகவும் வன்மையாகவும் உச்சரிக்கிறார்” என்று குறிப்பிட்டார்.   சிக்மா பட ஆடியோ வெளியீடு: விஜய் - சங்கீதா இணைவு எதிர்பார்ப்பு பேட்டியில் சிக்மா படத்தின் பணிகள் முடிவடைந்து, வரும் 18ம் தேதி ஆடியோ வ...

விஜய் மகன் சஞ்சய் முதல் படத்தின் ஹீரோயின் யாரு தெரியுமா..?

Image
தமிழ் சினிமாவில் பரம்பரை என்று வந்துவிட்டால், அது தனித்துவமான ஒரு அடையாளத்தை உருவாக்குவது சற்று சவாலானது. ஆனால், அந்த சவாலை ஏற்று தங்களுக்கென ஒரு பாதையை அமைத்துக் கொள்ளும் கலைஞர்களும் உண்டு.  அப்படி ஒரு குடும்பத்தின் அடுத்த தலைமுறையாக தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கியிருப்பவர் ஜேசன் சஞ்சய். பிரபல இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரின் பேரனும், நடிகர் விஜய்யின் மகனுமான ஜேசன் சஞ்சய், தனது முதல் படத்தின் மூலம் தனக்கென ஒரு இடத்தை தக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். குடும்ப பின்னணி மற்றும் அறிமுகம் எஸ்.ஏ. சந்திரசேகர் தமிழ் சினிமாவில் 80களிலும் 90களிலும் தனது ஆக்ஷன் மற்றும் சமூக நீதி சார்ந்த படங்களால் பிரபலமானவர். அவரது மகன் விஜய், தந்தையின் படங்களில் அறிமுகமாகி, பின்னர் தனது தனித்துவமான நடிப்பு மற்றும் ரசிகர் பட்டாளத்தால் "தளபதி" என்ற அந்தஸ்தை பெற்றார்.  சமீபத்தில் விஜய் சினிமாவை விட்டு விலகி, அரசியல் களத்தில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த நேரத்தில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக தனது பயணத்தை தொடங்குவது தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

ஹீரோவா..? டைரக்டரா..? - நடிகர் விஜய்யின் மகன் ஆசை என்னன்னு பாருங்க..!

Image
சினிமா மட்டும் இல்லை. உலகத்தின் எல்லா தொழில்களிலும் அந்த தொழில் செய்பவர்களுடைய வாரிசுகள் அதே துறையில் பணியாற்றுவது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. அந்த வகையில், தமிழ் சினிமாவில் வாரிசுகள் சினிமாவில் அறிமுகமாவதும் புதிதல்ல. அவ்வளவு ஏன்.. ஊர், ஊராய் .. தெரு தெருவாய் நடந்து வளர்க்கபட்ட ஒரு கட்சி , பலரது ரத்தமும், சதையும் கொண்டு கட்டமைக்கப்பட்ட ஒரு கட்சி.. ஆனால், உழைத்தவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்றே தெரியாமல் இன்று ஒரே ஒரு குடும்பத்தின் பிடியில் அந்த குடும்பத்தின் அடுத்தடுத்த தலைமுறைக்கு தாரை வார்க்கப்பட்டுக்கொண்டிருகின்றது ஒரு அரசியல் கட்சி. ஆத்தாடி.. அது அரசியல்.. அது எதுக்கு நமக்கு. வாங்க நாம நம்ம விஷயத்தை பாப்போம்.. ஏற்கனவே கார்த்திக், பிரபு தொடங்கி தற்போது அவர்களின் மகன்கள் என மூன்றாவது தலைமுறையாக பலர் ஹீரோக்களாக நடித்து வருகின்றனர். நடிப்பு பின்புலம் இல்லாமல் தமிழ் சினிமாவில் கோலோச்சியவர்களும் கூட தங்களது வாரிசுகளை அறிமுகப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், ஆதித்ய வர்மா படம் மூலம் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நாயகன் ஆகி விட்டார். அவரைத் தொடர்ந்து விஜய் மகன் ஜ...

"உங்க பையனை நான் மாஸ் ஹீரோவாக்குறேன்.." - முரட்டுதனமான கெட்டப்பில் களமிறங்கும் விஜய்யின் மகன்..!

Image
நடிகர் விஜய்யின் மகன் ஜேஷன் சஞ்சய் ஹீரோவாக களமிறங்குகிறார் என்ற தகவல்கள் கடந்த சில நாட்களாக வலம் வந்துகொண்டிருகின்றன. ஆம், அந்த தகவல் கிடத்தட்ட உண்மைதான்.  நடிகர் விஜய் சேதுபதி விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். அடுத்த படத்தில் விஜய்யின் மகனுக்கு வில்லனாக நடிக்கவுள்ளாராம். தற்போது, உப்பென்னா என்ற தெலுங்கு படத்தில் வில்லனாக நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு அந்த படத்தின் கதை மிகவும் பிடித்து போய்விடவே அந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை லபக்கியுள்ளாராம். இந்த படத்தில் நடிகர் விஜய்யின் மகன் ஹீரோவாக அறிமுகமாவர் என்று கூறுகிறார்கள். இந்த படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாகவே நடிக்கிறாராம். தெலுங்கில் படம் ஒரு ஸ்டைலில் எடுக்கப்படுகிறது. ஆனால், தமிழில் "பருத்தி வீரன்", "கும்கி" போன்ற முரட்டுதனமான ஸ்டைலில் கிராம பின்னணி, லுங்கியும் பனியனுமாக சுற்றும் கிராமத்தான் போன்று ஹீரோவின் கதாபாத்திரத்தை மாற்றியமைத்து படமாக எடுக்கவுள்ளார்கள் என்று கூறுகிறார்கள். இந்த முரட்டுத்தனமான கதாபாத்திரத்திற்காக கணிசமாக உடல் எடை அதிகரிக்கவுள்ளார் விஜயின் மகன் ...