அனுபமா கிளப்பிய பூகம்பம்.. நடிகர் துருவ் விக்ரமின் பதில்.. நின்றுபோன நிச்சயதார்த்தம்! அம்மா இப்படி பண்ணலாமா?

நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டி, திரையுலக வட்டாரத்தில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

தனது கடந்த கால உறவு பற்றி மனம்விட்டு பேசிய அனுபமா, அந்த உறவில் தான் சந்தித்த மன அழுத்தம், கட்டுப்பாடுகள் மற்றும் தன்னை இழந்தது போன்ற உணர்வுகளை வெளிப்படையாகப் பகிர்ந்திருந்தார்.

அந்த உறவில் ஒரு நாள் மிகவும் நெருக்கமாகவும், அடுத்த நாள் முற்றிலும் அன்னியனாகவும் மாறிவிடும் தன்மை இருந்ததாகவும், பிறகு எதுவும் நடக்காதது போல வந்து மன்னிப்பு கேட்கும் நிலை இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அனுபமா தனது முன்னாள் காதலரின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை. ஆனால் ரசிகர்கள் இந்தப் பேச்சை நடிகர் துருவ விக்ரமுடன் இணைத்து விவாதித்து வருகின்றனர். ஏற்கனவே இருவரும் இணைந்து நடித்த படத்தின் போது காதலித்ததாகப் பல செய்திகள் பரவியிருந்தன. அப்போது இருவருமே அதை மறுக்கவில்லை.

மாறாக அனுபமாவின் இன்ஸ்டாகிராம் பதிவுகளுக்கு துருவ விக்ரம் அதிக எண்ணிக்கையில் விருப்பங்களை அளிப்பதும், துருவின் பதிவுகளுக்கு அனுபமா நீண்ட நேரம் ஹார்ட் எமோஜிகளை அனுப்புவதும் என சமூக வலைதளங்களில் தங்களுடைய நெருக்கத்தை மறைமுகமாக உறுதிப்படுத்தி வந்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு அனுபமா, தன்னைத் தானே மீண்டும் தேடிக்கொண்டதாகவும், கடந்த கால கட்டுப்பாடுகளை உடைத்துவிட்டதாகவும் பகிர்ந்திருந்தார். இதனால் இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டுவிட்டதா என்ற கேள்விகள் எழுந்தன.

இந்தச் சூழலில் மலையாளத் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் அனுபமா அளித்த பேட்டி இணையத்தில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. “துருவ விக்ரம் பற்றி இவ்வளவு குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். ஆனால் அவர் என்ன பதில் சொல்லப் போகிறார்?” என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

இந்த நிலையில் தான் துருவ விக்ரம் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. அந்த ஸ்டோரியில் ஒரு இளைஞன் கடல் அலைகளை நோக்கி வேகமாக ஓடுவது போன்ற காட்சியும், பிறகு கடல் அலைகளுக்குள் கோபமாகவும் விரக்தியுடனும் நடப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.

இதைப் பார்த்த ரசிகர்கள், “துருவ டென்ஷனில் இருக்கிறாரா? அதனால்தான் இப்படிப்பட்ட பதிவை வெளியிட்டிருக்கிறாரா?” என கேள்வி எழுப்பி, மேலும் விவாதங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

கடந்த 2025 அக்டோபர் 23ஆம் தேதி வெளியான ஒரு பேட்டியில், அனுபமாவிடம் “வாழ்க்கையில் ஒருதலைப்பட்சமான காதல் செய்திருக்கிறீர்களா?” எனக் கேள்வி எழுப்பப்பட்டபோது, துருவ விக்ரம் உடனடியாக அனுபமாவிடம் இருந்த ‘எஸ்’ என்ற போர்டை எடுத்துக் காண்பித்தார்.

அப்போது டென்ஷனான அனுபமா, தான் சொல்ல வேண்டிய பதிலை நீ சொல்லிவிட்டாய் என்ற பாணியில் மென்மையாகக் கண்டித்தார். துருவ சிரித்தபடி இருந்தார். மேலும் காதல் திருமணமா அல்லது ஏற்பாட்டுத் திருமணமா எனக் கேட்கப்பட்டபோது இருவருமே இரண்டையும் சொன்னனர்.

ஒரு பேட்டியிலேயே அவர் அளிக்க வேண்டிய பதிலை இவர் அளிக்கிறார் என அனுபமா அப்போது குறிப்பிட்டிருந்தார். இந்தப் பழைய காட்சிகளை இப்போது ரசிகர்கள் மீண்டும் நினைவுபடுத்தி, “அனுபமா சொன்னது போலவே நடந்திருக்குமா?” என விவாதித்து வருகின்றனர்.

அனுபமாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் திறந்தாலே துருவ விக்ரமுடன் இணைந்த படங்களும் புகைப்படங்களும் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆனால் துருவின் பக்கத்தில் அவரது சொந்தப் படங்களே அதிகம் உள்ளன. இப்படி அனுபமா தனது அன்பை வெளிப்படுத்தியிருந்தாலும், தற்போது அந்த உறவு முடிவுக்கு வந்துவிட்டதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு, அனுபமாவின் தாய் சுனிதா பரமேஸ்வரன் ஜூலை 19ஆம் தேதிதான் தனது மகளுடன் மிகவும் மகிழ்ச்சியாகச் சிரித்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

தொடர்ந்து அனுபமாவின் பேட்டிகளைத் தாயும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாகப் பகிர்ந்து வருகிறார். இதனால் பிரிவுக்குப் பிறகு அனுபமாவை விட அவரது அம்மாவே அதிக மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சிலர் விமர்சிக்கின்றனர்.

இதற்கிடையில் விக்ரம் ஒரு குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோ வெளியிட்டது பெரியதாகப் பேசப்பட்டு வருகிறது. அது குறித்த விசாரணையும் நடந்துகொண்டிருக்கிறது. இப்போது துருவ விக்ரம் குறித்த சர்ச்சையும் சேர்ந்துவிட்டதால், விக்ரம் குடும்பத்தினர் இந்த வதந்திகளுக்கு என்ன விளக்கம் அளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

அனுபமாவின் இந்த வெளிப்படைப் பேட்டி, உறவுகளில் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் உணர்ச்சி ரீதியான சிக்கல்கள் குறித்து பலரும் பேசத் தொடங்கியுள்ளனர். ஒருபுறம் அனுபமா தனது அனுபவத்தை மனம்விட்டுப் பகிர்ந்திருக்கிறார். மறுபுறம் துருவ விக்ரமின் அமைதியான இன்ஸ்டா ஸ்டோரி மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த விவாதம் இன்னும் சில நாட்களுக்குத் தொடரும் என்பதில் சந்தேகமில்லை. திரையுலக ரசிகர்கள் இருவரின் அடுத்த நகர்வை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

Summary in English : Anupama Parameswaran’s recent interview about past relationship challenges and emotional difficulties has sparked wide discussion. Fans connect her comments to Dhruva Vikram. His Instagram story showing a young man near the sea has added to the speculation. Earlier social media exchanges, old interview moments, and family posts continue to fuel conversations in Kollywood circles.
------Advertisement------
------Advertisement------