Actress | நடிகைகள்
சந்திரமுகி 2 குறித்து வெளியான ஹாட் அப்டேட்..! – எக்குதப்பாக எகிறிய எதிர்பார்ப்பு..!
ரஜினிகாந்த் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி 1 படத்தின் பகுதி இரண்டு தற்போது இயக்குனர் பி வாசு இயக்கத்தில் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தில் ரஜினிகாந்துக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார்.தற்போது படப்பிடிப்பு படு வேகமாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.
மேலும் இந்த படத்தில் ஜோதிகா கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க கூடியவர் பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத். இவர் நடிப்பதால் தலைவி என்ற தமிழ் படம் வெளியாகியது.
அடுத்து பட தமிழ் பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று நினைத்த இவருக்கு அதிகமான பட வாய்ப்புகள் வந்து சேராத நிலையில் தற்போது சந்திரமுகி இரண்டில் அதிக எதிர்பார்ப்புடன் நடித்த வருகிறார்.
சமீப காலமாக அரசியல் மற்றும் சர்ச்சைக்குரிய விஷயங்களில் அதிக அளவு சிக்கி தவிக்க கூடிய நடிகைகளின் வரிசையில் கங்கனா ஒருவராக திகழ்கிறார்.
அடுத்து இவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில் அவுட்டோர் சூட்டிங் செல்லும் போது இவருடன் மேக்கப் மேன்கள் மட்டும் இன்றி துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் நான்கு பேர் அடங்கிய குழு ஒன்று படப்பிடிப்பு தளத்திற்கு எப்போதெல்லாம் செல்கிறார்களோ அப்போதெல்லாம் உடன் செல்கிறார்கள்.
எனவே சந்திரமுகி இரண்டு படப்பிடிப்பு நடக்கும் தளமானது கங்கனா ரணாவத் மூலம் அத களப்பட்டு வருவது தற்போது அப்பட்டமாக அனைவருக்கும் தெரிந்து விட்டது.
எனவே கடுமையான பரபரப்பான சூழல்களுக்கு மத்தியில் சந்திரமுகி இரண்டு படபிடிப்பை பரபரப்பாக இயக்குனர் பி வாசு எடுத்து வருகிறார். மேலும் மக்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படம் எப்படி இருக்கும் என்பது படம் வெளிவந்த பின்பு தான் தெரியவரும்.
ஏற்கனவே முனி, காஞ்சனா போன்ற படங்களில் பட்டையை கிளப்பி இருக்கும் ராகவா லாரன்ஸ் இந்த படத்திலும் தனது அற்புத நடிப்புத் திறனை அழகாக வெளிப்படுத்தி இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் ரசிகர்களுக்கு இல்லை.
மேலும் இந்த ஜோதிகாவின் கதாபாத்திரத்தை கங்கனா எவ்வாறு வெளிப்படுத்தி இருப்பார் என்பது திரையில் பார்க்கும்போது தான் சொல்ல முடியும்.