Actress | நடிகைகள்
கண்ணைப் பறிக்கும் அழகு.. மல்லிகை பூவோடு சேலையில் சிலையாய் நிற்கும் ரேஷ்மா பசுபுலேடி…!
மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே என்ற பாடல் வரிகள் தற்போது சக்கை போட்டு வருகிறது. அதனை அடுத்து பெண்கள் மல்லிகை பூவை அணிந்தாலே ஏதேதோ எண்ணங்கள் வழிந்து ஓடுகிறது என்று சொல்லும்படியாகத்தான் உள்ளது. அந்த வகையில் தற்போது ரேஷ்மா பசுபுலேடி மல்லிகைப்பூ அணிந்து மணக்க மணக்க ட்ரெடிஷனல் புடவையில் படு கியூட்டாக இருக்கிறார்.
இதை பார்த்ததுமே ரசிகர்கள் அனைவரும் தங்க சிலையை… வெள்ளி நிலவே… என்று பல வார்த்தைகளைக் கொண்டு அடுக்கு மொழியில் அவரை வர்ணித்து வருகிறார்கள்.
மேலும் சில ரசிகைகள் வர்ணிப்பதற்கு வார்த்தைகளே இல்லை என்று கூறும் அளவுக்கு கூடுதல் அழகில் இவர் பூரிப்பாக இருக்கிறாரா? என்று கேட்டிருக்கிறார்கள்.
காப்பர் நிற சேலையில் நீல நிற பிளவுசை போட்டு ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கும் ரேஷ்மா ஆரம்பத்தில் மாடல் அழகியாக திகழ்ந்தவர்.
இவரின் தந்தை தெலுங்கில் தயாரிப்பாளராக இருந்ததின் காரணத்தால் 2009 ஆம் ஆண்டு வெளியான லவ் என்ற சீரியல் மூலம் இவர் மீடியாத்துறையில் கால் பதித்தார்.
இதனை அடுத்து தமிழில் இவர் வம்சம், வாணி ராணி, மரகத வீணை உள்ளிட்ட பல சீரியல்கள் நடித்ததின் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர்களில் ஒருவராக மாறினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது ரசிகர்கள் வட்டாரத்தை அதிகப்படுத்தி இவர் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெறுவதற்காக சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.
அந்த வரிசையில் தான் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவர் காலடியில் தஞ்சம் என்று ஆகிவிட்டார்களா என்று கேட்கும் அளவுக்கு தனது மேனி அழகை பள பளவென காட்டி இருக்கிறார்.
இவர் நின்று கொண்டு தந்திருக்கும் அனைத்து போஸ்களும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டது. மேலும் என்னதான் மார்டன் உடையை போட்டாலும் ட்ரெடிஷனல் புடவைக்கு அது ஈடாகாது என்பதை இந்த போட்டோஸ் நிரூபித்து விட்டது.