“வாழ்க்கையை நல்ல முறையில் வாழ வேண்டுமா..!” – அப்ப புத்தரின் அறிவுரையை ஃபாலோ பண்ணுங்க..!

இப்படித்தான் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியில் எப்படியும் வாழலாம் என்ற எண்ணத்தில் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும். ஆனால் நாம் எடுத்த மனித பிறவியை நல்ல முறையில் பயன்படுத்த மற்றவர்களுக்கு உதவக்கூடிய மனநிலையில் வாழ்வது மிகவும் நல்லது. மனதாலும் மற்றவர்களுக்கு தீமை நினைக்காத வாழ்வே தெய்வத்திற்கு சமமானது.

எனவே உங்கள் வாழ்க்கையை நீங்கள் சிறப்பாக வாழ குறிப்பாக மன அழுத்தம், மன சங்கடங்களில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சிகரமாக இருக்க புத்தரின் இந்த போதனைகளை கேட்டு அதன்படி நடந்தாலே போதுமானது.

புத்தரின் போதனைகள்

உங்களுக்கு உங்கள் வாழ்வில் உச்சகட்ட கோபம் ஏற்படும் போது அதன் பாதிப்பை நீங்கள் முன்கூட்டியே உணர்ந்து விட்டு அமைதியாக இருந்தீர்கள் என்றால் உங்கள் வாழ்வு நிச்சயமாக ஆனந்தமாக இருக்கும்.

நீங்கள் ஒருவருக்கு செய்யும் உதவியின் மூலம் உங்களுக்கு நன்மை ஏற்படும். எனவே நீங்கள் ஒருவரின் வாழ்வில் விளக்கேற்றினால் உங்கள் பாதை பிரகாசமாகும்.

நமக்கு நடக்கும் அனைத்துக்கும் காரணம் எது தெரியுமா? நாம் நினைத்த, நாம் சொன்ன அந்த வார்த்தைகளில் விளைவு தான்.எனவே நம் வாழ்க்கைக்கு நாம் தான் பொறுப்பு.

--Advertisement--

நீங்கள் ஒரு பூவின் மீது விருப்பப்பட்டால் அந்த பூவை பறிப்பீர்கள். அதுவே அந்த பூவின் மீது நீங்கள் அன்பு செலுத்தினால் தினமும் அதற்கு தேவையான நீரை ஊற்றுவீர்கள்.

இந்த உலகமானது ஒரு கண்ணாடி போன்றது. அது ஒவ்வொரு மனிதனுக்கும் தனது சொந்த எண்ணங்களின் உண்மையான பிரதிபலிப்பை காட்டுகிறது. எனவே நீங்கள் உங்கள் மனதை ஆளுங்கள் இல்லையெனில் அது உங்களை ஆளும்.

நம்முடைய வாழ்க்கை நிரந்தரம் அற்றது. பிறகு அந்த நிரந்தரமற்ற வாழ்க்கைக்காக நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்.

நீங்கள் எங்கு சென்றாலும் எங்கு இருந்தாலும் உங்கள் செயல்களுக்கான விளைவுகள் உங்களைத் தொடர்ந்து வரும் என்பதை புரிந்து செயல்படுங்கள்.

நீங்கள் உங்கள் கடந்த காலத்தை அறிந்து கொள்ள விரும்பினால் நிகழ்காலத்தை எண்ணிப் பாருங்கள். உங்கள் எதிர்காலத்தை அறிய விட விரும்பினால் உங்கள் நிகழ்காலத்தை நினைத்துப் பாருங்கள்.

உங்கள் உள்ளத்தில் கோபம் இருந்தால் மட்டுமே வெளியில் எதிரிகள் இருப்பார்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

எதையும் நீங்கள் கண்மூடித்தனமாக நம்ப கூடாது. உங்களுக்கு மனநிறைவு, தெளிவு, அமைதி, எது தருமோ  அதைத்தான் நீங்கள் பின்பற்ற வேண்டும் அதுதான் சரியான பாதையாகவும் இருக்கும்.