Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இனியா சீரியல் நாயகன் ரிஷி நடிப்பில் வெளிவர உள்ள பியூட்டி…!!

rishi

Entertainment News

இனியா சீரியல் நாயகன் ரிஷி நடிப்பில் வெளிவர உள்ள பியூட்டி…!!

சமீபகாலமாக சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் தனது முகத்தை காட்டாமல் இருந்திருந்த நடிகர் ரிஷி தற்போது கதாநாயகனாக நடித்திருக்க கூடிய படம் தான் பியூட்டி. இந்த படத்தின் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

மேலும் நடிகர் ரிஷி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் பியூட்டி திரைப்படமானது தஞ்சாவூரின் அழகிய எழில் கொஞ்சம் இடங்களை மிக அழகாக படம் பிடித்துள்ளது.

serial

 அதுமட்டுமல்லாமல் சென்னையிலும்  சில பகுதிகளில் ஷூட்டிங் செய்திருக்கிறார்கள்.ராமோஜிராவ்  பிலிம் சிட்டியில் உள்ள பூந்தோட்டங்களிலும் ரயில்வே நிலையங்களிலும் விதவிதமான கள்ளிச் செடிகளை வைத்துள்ள இடங்களிலும் இதன் படப்பிடிப்பை நடத்திவிட்டார்கள்.

இந்தப் படத்தின் கதையில் தான் நினைப்பது மட்டுமே சரி என்ற எதிர்மறை எண்ணத்தோடு தவறாக வாழும் ஒரு மனிதனைப் பற்றிய கதையைத்தான் கூறியிருக்கிறார்கள்.

rishi

அவர் அந்த பாதிப்பில் இருந்து எழ முடியாமல் எப்படி செல்கிறார் என்பதை  உளவியல் ரீதியாக லவ் திரில்லர் நிறைந்த படமாக விளக்கி இருக்கிறார்கள்.

சண்டைக் காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாத இந்த பியூட்டி படத்தை பற்றி பத்திரிகையாளர்களிடம் இயக்குனர் கோ. ஆனந்த் சிவா மிகத் தெளிவாக கூறியிருக்கிறார். மேலும் ரிஷி கதாநாயகனாக நடித்திருக்க கூடிய இந்த படத்தில் கரீனா ஷா ஹீரோயினியாக நடித்திருக்கிறார்.

beauty

அதனை அடுத்து சிங்கமுத்து, ஆதேஷ் பாலா, மனநல மருத்துவர் ஆனந்த் சண்முகம் ஆகியோர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கான ஒளிப்பதிவை தீபக் குமார் செய்திருக்கிறார். இலக்கியன் இசையில் இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் எழுதிய இரண்டு பாடல்கள் எந்த படத்தில் இடம்பெற்றுள்ளது.

அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டால் விரைவில் படம் குறித்த ட்ரீசர் ட்ரெய்லர் அனைத்தும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Top Rated

To Top