இந்திய அணி தோற்றாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் செல்லும் வாய்ப்பு இருக்குமா..!!

இந்திய அணி தோற்றாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் செல்லும் வாய்ப்பு இருக்குமா:இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டம் அகமதாபாத்தில் நடக்கிறது. இந்த டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவது உறுதி. மறுபுறம், போட்டியில் தோல்வி என்றால் அணி நுளைவரதற்கான சிக்கல்களை அதிகரிக்கும்.

இலங்கை-இந்தியா வாழ்வா சாவா:

ஜூன் 2023 இல் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி பெற்றுள்ளது, மேலும் இலங்கையும் இந்தியாவும் இரண்டாவது இடத்திற்கு போட்டியிடுகின்றன. புள்ளிகள் அட்டவணையின்படி, இந்தியா 60 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது, அதேநேரம் இலங்கை 53 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால் இலங்கைக்கு இந்தியாவை விட வாய்ப்பு உள்ளது.

அகமதாபாத்தில் தோற்ற பிறகும் இந்தியா எப்படி தகுதி பெற முடியும்?

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். ஆனால், இந்திய அணி தோல்வியடைந்தாலோ அல்லது போட்டி டிரா செய்யப்பட்டாலோ இலங்கைக்கு வாய்ப்பு கிடைக்கும்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான போட்டி டிராவில் முடிந்தால் என்ன ஆகும்?

அகமதாபாத் டெஸ்ட் டிராவில் முடிந்தால், இந்தியாவின் சாம்பியன் டிராபி செல்வதற்கான வாய்ப்பு இலங்கையின் கையில் இருக்கும். இரண்டு போட்டிகளிலும் இலங்கை நியூசிலாந்தை தோற்கடித்தால் 61 புள்ளிகளுடன் இந்தியா பின்தங்கி இருக்கும், இந்நிலையில் இலங்கை இறுதிப்போட்டியில் விளையாடும். ஆனால் இலங்கை ஒரு போட்டியில் தோற்றால் கூட இந்தியா மட்டுமே இறுதிப் போட்டியில் விளையாடும்.

இந்தியா தோல்வி அடைந்தால்:

அகமதாபாத் டெஸ்டில் இந்தியா தோற்றாலும், இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்தை வீழ்த்தினால் தான் இலங்கையின் புள்ளிகள் 60க்கு மேல் சென்று தகுதி பெற முடியும். இத்தகைய சூழ்நிலையில், இந்தியாவின் தலைவிதி 9 மார்ச் 2023 முதல் தொடங்கும் இலங்கை மற்றும் நியூசிலாந்து தொடரில் தெரிந்து விடும்.

--Advertisement--

SL vs NZ: இலங்கை மற்றும் நியூசிலாந்தில் யார் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்:

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இதுவரை மொத்தம் 28 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் நியூசிலாந்து முன்னிலை பெற்றுள்ளது. நியூசிலாந்து மொத்தம் 12 போட்டிகளிலும், இலங்கை 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இது தவிர 8 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.