நடிகை கௌதமியின் மகளா இவங்க..! – அடேங்கப்பா என வாயை பிளந்த ரசிகர்கள்..! – வைரல் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகை கெளதமி. தமிழ் சினிமாவில், ஒரு காலத்தில் தூங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் கூட நேரமில்லாமல், படப்பிடிப்பில் கலந்துகொண்ட ஒரு பிஸியான நடிகை.
ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட கெளதமி, குரு சிஷ்யன் படம் மூலம், ரஜினிகாந்த் ஜோடியாக தமிழில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கெளதமிக்கு மட்டுமே அமைந்தது. அந்த படத்தில் வினுசக்ரவர்த்தி மகளாக போலீஸ் எஸ்ஐ கேரக்டரில் நடித்திருப்பார். அந்த படம், வெற்றி பெற்றதை தொடர்ந்து, தமிழில் பல படங்களில் நடித்தார்.

கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, அர்ஜூன், கார்த்திக், சரத்குமார், முரளி, ராம்கி என, அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த அனைவருக்கும் ஜோடியாக நடித்தவர் கெளதமி. இதனால்தான், அவருக்கு சாப்பிடுவதற்கு,தூங்குவதற்கு கூட நேரமில்லாத நிலை ஏற்பட்டது.
அதன்பின் ஒரு கட்டத்தில், திருமணம் செய்துகொண்டு, ஒரு பெண் குழந்தைக்கு தாயானார் கெளதமி. அவரது மகள் பெயர் சுப்பலட்சுமி.

சினிமா நடிகையர் மண வாழ்க்கையில் நடக்கும் வழக்கமான பிரச்னை போலவே, கெளதமியும் கணவரை பிரிந்தார். மகளுடன் மீண்டும் தமிழ் சினிமா பக்கம் வந்தார். அப்போது, புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார் கெளதமி. அந்த வேளையில், அவருக்கு உதவியாக இருந்து பல நன்மைகளை செய்தவர் கமல்ஹாசன்.

ஏற்கனவே அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், ருருதிப்புனல், நம்மவர் ஆகிய படங்களில் கெளதமி – கமல் ஒன்றாக நடித்த நிலையி்ல் அவர்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது. அப்போது, சரிகாவும் கமலை விட்டு பிரிந்திருந்தார். எனவே, மகளுடன் வந்த கெளதமியை கமல்ஹாசன் ஏற்றுக்கொள்ள இருவரும், திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன் மனைவியாக வாழ்ந்தனர். சினிமா நிகழ்ச்சிகள், பொது இடங்களுக்கு இருவருமே ஒன்றாக வந்தனர். அந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட பாபநாசம் படத்தில், கமலின் மனைவியாகவே நடித்திருப்பார் கெளதமி.

ஒரு கட்டத்தில் ஸ்ருதிஹாசன் – கெளதமி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கமலை விட்டு கெளதமி பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால், 17 ஆண்டுகளாக நீடித்த அவர்களது வாழ்க்கை பயணம் முற்றுப் பெற்றது, பலருக்கும் அதிர்ச்சியளிக்கவே செய்தது.

--Advertisement--

அதன்பிறகு பாஜக வில் கெளதமி இணைந்தார். அவ்வப்போது, தனது வீடியோக்கள், புகைப்படங்களை முகநூலில், இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுக்காக பதிவிடுவது அவரது வழக்கம். அந்த வகையில், மகள் சுப்பலட்சுமியின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் கெளதமி. புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்பதை போல, கெளதமியை போலவே அழகில் ரசிகர்களை மயக்குகிறார் மகள் சுப்பலட்சுமி.